Connect with us

களத்தில் சந்திப்போம் தம்பி!.. சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!..

sivakarthikeyan d imman

Tamil Cinema News

களத்தில் சந்திப்போம் தம்பி!.. சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பெரிய மனதுடன் புது முகங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதுண்டு. அப்படியாக தனுஷ் தமிழ் சினிமாவிற்கு சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருந்தது.

இதனை அறிந்த தனுஷ் அவருக்கு சினிமாவில் வாய்ப்பை வாங்கி கொடுத்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்தாலும் கூட போக போக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர்.

இந்த விஷயத்தை தனுஷே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் பெரும் வளர்ச்சியை கண்டார். அதே போல தனுஷும் ஹாலிவுட் வரை போய் நடித்தார். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் அயலான்.

அயலான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அயலானுக்கு போட்டியாக கேப்டன் மில்லரை களம் இறக்குகிறார் தனுஷ். தனுஷ் சிவகார்த்திகேயனுடன் நேரடி போட்டி போடுவதில் உள்ள பெரும் சிக்கல் என்னவென்றால் அயலான் திரைப்படத்திற்கு அதிகமாக செலவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அயலான் தோல்வியடையும் நிலையில் கண்டிப்பாக அது சிவகார்த்திகேயனுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இமான் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக சிவகார்த்திகேயனுக்கு ப்ளாக் மார்க் இருப்பதால் இந்த போட்டி அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

To Top