Latest News
10 கே.ஜி.எஃப்புக்கு சமம்.. சாதிய கொடுமைக்கு எதிரான படமா? உண்மை கதை கேப்டன் மில்லர்!.. முழு விமர்சனம்!.
Captain Miller Movie Review : இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய கொடுமை என்பது விடுதலை இந்தியாவிற்கு முன்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று கூறலாம். அந்த சமயத்தில் பெரும்பாலான மக்கள் ஊரில் நடக்கும் ஜாதி கொடுமைகளுக்கு பயந்து ஊரை விட்டு ஓடி விடுவார்கள்.
அப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிறைய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவர்கள் விலை உயர்ந்த ஆடைகள் போடக்கூடாது, செருப்பு அணிய கூடாது, மீசை வைத்துக் கொள்ளக் கூடாது மிதிவண்டிகளை ஓட்டக்கூடாது என்றெல்லாம் அவர்களுக்கு விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகளை உடைப்பதற்கு அந்த மக்களுக்கு அப்பொழுது பெரும் ஆயுதமாக இருந்தது ராணுவம்.
ராணுவத்திற்கு சென்று வந்தவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் அவர் மீசை வைத்து கொண்டு சுற்றும் பொழுது அவரை கேள்வி கேட்க முடியாமல் இருந்தது. இப்படி பல கதைகள் உண்மையாகவே அப்போது நடந்திருக்கின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் கேப்டன் மில்லர்.
படக்கதை:
ஒரு சாதிய அடக்குமுறை நடந்த கிராமத்தில் வாழும் ஈசா என்கிற இளைஞன்தான் படத்தின் கதாநாயகன். தொடர்ந்து கிராமத்தில் சாதிய அடக்குமுறைக்கு உள்ளாகும் ஈசா அதனால் கிராமத்தை வெறுத்து வழக்கம் போல இராணுவத்தில் சென்று சேர்கிறார். ராணுவத்தில் தனக்கு மதிப்பு கிடைக்கும் என்று அவர் நினைக்கிறார்.
ஆனால் வெள்ளையர்கள் ராணுவத்தில் சேர்ந்ததால் இந்தியர்களை கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கோபமான ஈஷா அவரது உயர் அதிகாரியையே கொன்று விட்டு ஒரு கொள்ளை கடத்தல் கும்பலில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கிராமம் தொடர்ந்து பெரும் பிரச்சனைகள் வருவதை தெரிந்து திரும்ப கிராமத்திற்கு செல்கிறார் ஈஷா. ஆனால் வரும்போது கிராமத்திற்கு பயந்து ஓடிய ஈசாவாக அல்லாமல் துணிவான கேப்டன் மில்லராக வருகிறார்.
அங்கு அவர் மேற்கொள்ளும் விஷயங்களே படமாக இருக்கிறது. படம் முழுக்க முழுக்க ரத்த களறியாக இருப்பதால் இது சிறுவர்களுக்கு உகந்த படம் அல்ல என்று கூறலாம். அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகள் இளைஞர்களுக்கு மயிர் கூச்செரியும் காட்சிகளாக அமைந்தாலும் குடும்பத்தினருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது சந்தேகமே.
ஆனால் கேஜிஎப் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படம் கே.ஜி.எஃப்பை விட 10 மடங்கு சிறப்பாக தோன்றுவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தின் முக்கிய விஷயமாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் படம் முழுக்க அனைவரையும் நுனி சீட்டில் அமர வைக்கும் அளவிற்கான சிறப்பான இசையை கொடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் ஆக்ஷன் திரைப்படங்கள் பிடித்த மக்களுக்கு கேப்டன் மில்லர் ஒரு காம்போ திரைப்படமாக இருக்கிறது. ஆனால் குடும்பமாக சென்று பார்ப்பதற்கு இந்த பொங்கலுக்கு கேப்டன் மில்லர் உகந்த பாடமாக இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் வந்த மூன்று திரைப்படங்களில் அயலான் திரைப்படம் மட்டுமே குடும்பமாக சென்று பார்க்கும் என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்