Category Archives: Movie Reviews

Tamil movie reviews, ratings, and recommendations, Kollywood reviews, movie ratings, Tamil film analysis,Tamil action Movie reviews

தமிழ் டப்பிங்கில் வந்து அலறவிட்ட ரத்தக்காட்டேறி படம்..! Abigail Movie Review

ஹாலிவுட்டில் இரத்தக்காட்டேரி திரைப்படங்களுக்கு எப்போதுமே பஞ்சமே இருந்தது கிடையாது. எப்போதுமே அங்கு இரத்த கட்டேரி திரைப்படம் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான Abigail என்கிற திரைப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் கதை:

அபிகெயில் என்கிற பெண் ஒருவர் பெரிய பணக்காரரின் மகளாக இருக்கிறார். அவரை கடத்தி வைத்துக்கொண்டு பணம் பார்க்கலாம் என்கிற நோக்கில் ஒரு வயதான நபர் ஐந்து பேரை இதற்கு நியமிக்கிறார். அந்த ஐந்து பேரும் மயக்க மருந்து கொடுத்து அந்த சிறுமியை கடத்துகின்றனர்.

கடத்திய பிறகு அந்த முதியவர் அனைவரையும் ஒரு வீட்டில் வைத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு இங்கு இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு வேலை தருகிறார்.

அவர்களும் அந்த பெண்ணை பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு நபர் திடீரென தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடக்கிறான். அவனை ஏதோ ஒரு மிருகம் தாக்கி கொன்றது போல தெரிகிறது.

இதனை அடுத்து யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என பார்க்கும்போது இதையெல்லாம் செய்வது அபிகெயில் என்கிற அந்த பெண் தான் என தெரிகிறது. அவள் ஒரு இரத்தக்காட்டேரியாக இருக்கிறாள். அவள் வேட்டையாடும் நபர்களை அவளே தேர்ந்தெடுக்கிறாள்.

பிறகு அவளே இந்த கடத்தல் நாடகத்தை நடத்துகிறாள் என்பது பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது. இந்த நிலையில் நாம் தான் அந்த இரத்த காட்டேரியிடம் சிக்கியுள்ளோம் என்பதை அவர்கள் உணர்வதற்குள்ளாகவே அவர்கள் குழுவில் இரண்டு பேர் இறந்துவிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த 24 மணி நேரத்தில் இவர்கள் எப்படி அபிகெயிலிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் அதிகமாக இரத்த காட்சிகள் இருப்பதால் சிறுவர்கள் பார்ப்பதற்கு உகந்த படமல்ல.

அந்த விஷயத்தில் கோட்டை விடாமல் இருந்திருக்கலாம்!.. கல்கி 2898 ஏ.டி திரைப்படம்.. ஓ.டி.டி விமர்சனம்!..

சமீபத்தில் மாபெரும் பொருட் செலவில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி திரைப்படம். மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளது.

அதன் கதை எப்படியிருக்கிறது என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி கதை காசியில் நடக்கிறது. காசியில் பைரவா எனப்படும் பிரபாஸ் வாழ்ந்து வருகிறார். அங்கு கடவுள்கள் வாழும் பகுதி இருக்கிறது. அதற்குள் செல்வது அவ்வளவு எளிது கிடையாது.

படத்தின் கதை:

அப்போது இருக்கும் பணத்தில் 1 மில்லியன் தொகை கொடுத்தால்தான் அவர்களால் அந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும். அதாவது பணக்காரர்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். ஏழைகள் வாழும் பகுதில் ஒரு புல் பூண்டுக்கூட இருக்காது.

மொத்த உலகமும் தண்ணீர் இல்லாமல் வறட்சியடைந்து காணப்படும். இந்த நிலையில் காம்ப்ளக்ஸ் என்னும் அந்த இடம் மட்டுமே செழிப்பாக இருக்கிறது. அதை உருவாக்கிய சுப்ரீம் எஸ்கின் என்பவர்தான் கடவுளாக கருதப்படுகிறார்.

இந்த நிலையில் ஒரு போராட்ட குழு அவர்களிடம் இருந்து தப்பித்து தனியாக வாழ்ந்து வருகிறது. இதிகாச கதைகளில் வரும் கல்கி அவதாரத்தின் பிறப்பு தங்கள் வாழ்க்கையை மாற்றும் என அவர்கள் கருதுகின்றனர்.

மகாபாரத கதை:

இதற்கு நடுவே மகாபாரத போர் கதை செல்கிறது. அதில் அசுவத்தாமன் பாண்டவ குலம் அழிவதற்காக எய்யும் அம்பு அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருக்கும் சிசுவை கொல்கிறது.

இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் என்றென்றைக்கும் சாகா வரத்தை சாபமாக தருகிறார். போரால் ஏற்பட்ட வடு ஆறாமல் அந்த வாழ்க்கையை வாழ்கிறார் அசுவத்தாமன். இந்த நிலையில் கல்கி அவதாரத்தை வயிற்றில் கொண்டுள்ள பெண்ணை காப்பதன் மூலம் அசுவத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் அதை சுமக்கும் தீபிகா படுகோனேவிடம் இருந்து அந்த குழந்தையை அபகரிக்க நினைக்கிறது காம்ப்ளக்ஸ். எனவே 1 மில்லியன் காசுகளை அவளை பிடிப்பவர்களுக்கு தருவதாக அறிவிக்கிறது. இந்த நிலையில் அவரை பிடிக்க பிரபாஸ் கிளம்புகிறார். அதே சமயம் அசுவத்தாமனும் அவரை காக்க கிளம்புகிறார்.

இதனை வைத்து கதை செல்கிறது.

படத்தின் பிரச்சனைகள்:

கதையம்சம், கிராபிக்ஸ் எல்லாம் மிரட்டும் வகையில் இருந்தாலும் கூட இந்தியாவின் சாயலே படத்தில் இல்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களின் மீது மோகம் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் கதை அதிகப்பட்சம் ஹாலிவுட்டில் வந்த அலிட்டா பேட்டல் ஏஞ்சல் திரைப்படத்தின் கதையை ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது. படத்தில் மாஸான ஒரு கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக இண்ட்ரோ செய்கின்றனர்.

ஹாலிவுட் தாக்கத்தில் இல்லாமல் நம்ம ஊர் பாணியில் இந்த படம் இருந்திருந்தால் இன்னமுமே சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

கொடுத்த பில்டப்புக்கு ஓ.கேவா இருக்கா.. வாழை பட விமர்சனம்…

Vaazhai Movie Review: தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் காலங்காலமாக சமுதாயத்தில் நடக்கும் சில பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாகவும் பல இயக்குனர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவ்வாறு எடுக்கும் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகப்படுவது வழக்கம் தான். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தற்போது இவரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் வாழை. தான் எடுத்த முந்தைய திரைப்படங்களில் சமுதாயத்தில் நடக்கும் சாதிய கொள்கைகளை குறித்து படமாக எடுத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது எடுத்திருக்கும் வாழை திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் விமர்சனம் பற்றி காணலாம்.

வாழை திரைப்படம்

மாரி செல்வராஜின் முதல் படமாக வெளிவர வேண்டிய படம் வாழை என கூறினார். காரணம் இது அவருடைய வாழ்க்கையின் வலிகளை சொன்ன திரைப்படம் ஆகும். அவருடைய சிறு வயதில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்துள்ளார் என்பதும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்த திரைப்படம் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன் வாழை தார் வெட்டுவதும், அதை சுமந்து கொண்டு செல்வதும், மேலும் பள்ளி செல்லும் போது ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு பற்றியும் கூறுகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படம் போலவே திருநெல்வேலியை மையமாக வைத்து இந்த படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் விமர்சனம்

இந்த படத்தில் கதாநாயகனாக பள்ளி செல்லும் சிறுவனாக சிவனணைந்தன், அவனின் நண்பன் சேகரும் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் வாழைத்தார் சுமக்கும் பணிக்கு சிவனணைந்தனுக்கு செல்ல விருப்பமில்லை. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் அந்த வேலையை செய்து வருகிறான். ஒரு நாள் வாழைத்தார் சுமக்கும் பணிக்குச் செல்லாமல் அவன் பள்ளிக்கூடம் செல்வதும் அன்று அந்த கிராமத்தில் நடந்த சோகமான நிகழ்வை பற்றியும் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

இந்நிலையில் சிவனணைந்தான் கதாபாத்திரம் மாரி செல்வராஜின் இளம் வயது கதாபாத்திரமாகும். அவர் வாழை திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜயின் ரசிகராக வருகிறார். மேலும் அவரின் நண்பர் சேகர் கமலின் ரசிகராக இருக்கிறார். இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் நட்புடன் இருந்து வருகிறார்கள். இவர்களின் நடிப்பு நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பது சந்தேகம் இல்லை.

இந்நிலையில் பள்ளி ஆசிரியராக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நிகிலா விமல் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டும் படியாக இருக்கிறது. இந்த டீச்சரை சிவனணைந்ததுக்கு பிடிக்க படம் இருவருக்கும் உள்ள காட்சிகளை அழகாக காட்டியுள்ளது.

மேலும் இந்த படத்தில் கலையரசன் இளைஞராக நடித்திருக்கிறார். இவர் கூலி கேட்டு போராடும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கனி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று கலையரசன் படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் அவரின் நடிப்பு நன்றாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் சிவனணைந்தன் அக்காவாக வேம்பு எனும் கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார். மேலும் வேம்பிற்கும் கனிவிற்கும் உள்ள காதலை இந்த படம் கூறுகிறது.

படத்தின் முதல் பகுதி சிரிப்பு, நகைச்சுவை, காதல் என நகர்ந்து கொண்டாலும் படத்தின் இரண்டாம் பகுதி படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது. வாழைத்தார் சுமக்காமல் பள்ளி செல்லும் சிவனணைந்தன் எதிர்கொள்ளும் சிக்கலும், அந்த சமயத்தில் கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவமும் கிளைமாக்ஸ்யில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக இருக்கிறது. இந்த கிளைமாக்ஸ் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் கண்ணீருடன் வெளி வருவார்கள் என்பது சந்தேகம் இல்லை.

மேலும் படத்தில் குறிப்பிட்டு கூறும் படியான எதிர்மறை என்னவென்றால், படத்தில் அடுத்ததாக நடக்க இருக்கும் சம்பவங்கள் நமக்கு முன்கூட்டியே கணிக்கும்படியாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு சில சம்பவங்களில் முதலாளித்துவ அரசியல் தான் காரணம் என்பதை சற்று திணிப்பது போல அமைகிறது. மற்றபடி படத்தில் பாடல்கள் அனைவருக்கும் ரசிக்கும் படியாக உள்ளது.

உலக தரம் வாய்ந்த படம் தானா.. எப்படியிருக்கு கொட்டுக்காளி திரைப்படம்!..

இயக்குனர் பி எஸ் வினோத்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பே இயக்குனர் பி.எஸ் வினோத்குமார் திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட படமாக இருந்தது.

அந்த பணத்தின் மூலமாகவே இப்பொழுது மக்களுக்கு பி.எஸ் வினோத்குமார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டு காளி திரைப்படத்திற்கும் வரவேற்பு இருந்து வருகிறது.

உலகத்தரம் வாய்ந்த படம்

இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதை என்னவென்று பார்க்கும் பொழுது ஒரு சாதாரண கதை என்று கூறப்படுகிறது. குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்ததை அடுத்து அந்தப் பெண்ணை பேய் ஓட்டுவதற்காக அழைத்துச் செல்கின்றனர்.

அந்த பயணத்தில் நடக்கும் விஷயங்களையும் மொத்த பலமாக இருக்கிறது அதை மிக சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார் பி.எஸ் வினோத் குமார் படத்தில் பேய் என்னும் ஒரு விஷயம் சமூக அரசியல்களை பேசுவதற்கு தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

படக்கதை:

படத்தின் இறுதி கட்டத்தில் உண்மையிலேயே அந்த பெண்ணுக்கு தான் பேய் பிடித்து இருக்கிறதா அல்லது சுற்றி இருப்பவர்களுக்கா என்று யோசிக்கும்படி படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. காமெடி நடிகராக இருந்தாலும் கூட நடிகர் சூரி தற்சமயம் நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அவருக்கு பெயர் வாங்கி தரும்படி நடித்த விடுதலை திரைப்படம் சரியான வெற்றியை பெற்றது. பிறகு கருடன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்திற்கு பிறகு வரவிருக்கும் 7 கடல் ஏழுமலை திரைப்படம் கூட உலகத்தரம் வாய்ந்த கதைக்களத்தை கொண்டது என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த மாதிரியான திரைப்படங்களில் தான் இனி நடிக்க போகிறாரோ என்றெல்லாம் பேச்சுக்கள் வர துவங்கியுள்ளன.

ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் படம்!.. எப்படியிருக்கு கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா!.. பட விமர்சனம்..!

தற்போது நடிகர்களை காட்டிலும் நடிகைகளும் பல முக்கிய கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மக்களிடையே பிரபலமாகியும் வருகிறார்கள்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பாலிவுட்டிலும் கலக்கி வரும் நிலையில், இவர் நடித்து தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் ரகு தாத்தா. தற்போது ரகு தாத்தா திரைப்படம் விமர்சனத்தை பற்றி காண்போம்.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா?

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரகு தாத்தா. இதை புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கொம்பலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்பு., கலாச்சார திணிப்பிற்கு எதிராக தனி ஆளாக போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காட்டி இருக்கிறது. மேலும் அந்தப் போராட்டத்தில் அந்தப் பெண் வெற்றி பெற்றாளா? என்பதுதான் படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.

படம் எப்படி இருக்கிறது?

இந்த படத்தின் கதைக்களம் 70-களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி திணிப்புக்கு போராடும் பெண்ணாக இருக்கிறாள். வங்கியில் வேலை செய்யும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணாக உள்ளார். மேலும் அவரின் தாத்தாவின் கடைசி ஆசைக்காக கயல்விழி (கீர்த்தி சுரேஷ்) திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். தெரியாத நபரை திருமணம் செய்வதற்கு, நன்கு பழகிய தமிழ்ச்செல்வனை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்.

ஆனால் தமிழ்ச்செல்வன் மற்ற ஆண்களைப் போலவே பிற்போக்கு சிந்தனை கொண்டவர் என்பதால் பணியிட மாற்றம் செய்து கொண்டு கல்கத்தாவிற்கு செல்ல முடிவு செய்கிறாள். அதற்காக அவர் ஹிந்தி பரிட்சை எழுத முயற்சிக்கிறார். இறுதியில் அவர் ஹிந்தி பயின்றாரா? கயல்விழிக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படங்களில் நடித்த மற்ற நடிகர்களின் நடிப்பும், நன்றாக உள்ளது. படத்தின் கதை அனைவரையும் ஈர்த்தாலும் படத்தை வெளிக்கொண்டு வந்த விதம் ரசிகர்களை சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும். ரகு தாத்தா படத்தை நகைச்சுவையாகக் கொண்டு சென்று இருப்பது படத்திற்கு நன்றாக அமைந்துள்ளது.

ஆனால் இந்த திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் டம் நன்றாக அமைந்திருக்கும் என தோன்றும்படியாக உள்ளது. மேலும் படத்திற்கு காமெடி காட்சிகள், இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால் படத்தின் திரைக்கதை மற்றும் பார்ப்பதற்கு ஒரு டிராமா போல் தெரிகிறது. மேலும் படம் எமோஷ்னலாக மக்களுடன் இணையவில்லை என்று தான் கூறவேண்டும்.

இதுதான் ஒரிஜினல் கே.ஜி.எஃப்பா? எப்படி இருக்கு தங்கலான்.. பட விமர்சனம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தங்கலான். தங்கலான் திரைப்படத்தில் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் சாதகங்கள் பாதகங்களை இப்போது பார்க்கலாம்.

படத்தின் கதை:

படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். படத்தின் கதைப்படி விக்ரம் மற்றும் அவரை சேர்ந்த பழங்குடியின மக்கள் காலம் காலமாக அடிமையாக வாழ்ந்து வரும் மக்களாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் போட்டுக்கொள்ள உடை கூட இல்லாமல் கோவணத்தோடு வாழும் மக்களாக இருக்கின்றனர். ஒரு மிராசுதாரரிடம் பண்ணை அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். பண்ணை அடிமைகளுக்கு சம்பளம் என எதுவும் கிடையாது.

சாப்பிட உணவு கிடைக்கும். மிராசுதாரர் நினைத்தால் ஆடை போன்றவற்றை வழங்குவார். இந்த கதை நடப்பது விடுதலை இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்த நிலையில் ஒரு பிரிட்டிஷ் காரர் இந்த பழங்குடி மக்களிடம் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்.

அதாவது கே.ஜி.எஃப்பில் இருக்கும் தங்கத்தை எடுக்க இவர்கள் உதவ வேண்டும். அதற்கு மாதா மாதம் அவர்களுக்கு சம்பளமும் சுகப்போகமான வாழ்க்கையும் கிடைக்கும் என கூறுகிறார் அந்த பிரிட்டிஷார். ஆனால் தங்கத்தை எடுக்க ஒரு பெரிய பயணத்தை செய்ய வேண்டும்.

இதற்கு நடுவே ஆரத்தி என்கிற சூனிய காரி ஒருவள் செல்லும் வழியில் இருப்பாள். அவளை கடந்தால்தான் தங்கத்தை அடைய முடியும். இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக விக்ரம் என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது.

சாதகமான விஷயங்கள்:

படத்தில் மேக்கப் ரகளையாக செய்யப்பட்டுள்ளது. விக்ரம், மாளவிகா மோகனன் என யாருமே பார்ப்பதற்கு நிஜத்தில் எப்படி இருப்பார்களோ அப்படி இல்லை. தத்ரூபமான மேக்கப்பாக இருந்தது.

அதே போல படத்தில் ஆர்ட் ட்ரைக்‌ஷனும் நன்றாக இருந்தது. உண்மையிலேயே நம்மை பழங்காலத்துக்கு அழைத்து சென்றது போன்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஜிவி பிரகாஷின் பிண்ணனி இசை நன்றாகவே இருந்தது. ஆனால் கேப்டன் மில்லர், சூரறை போற்று, ஆடுகளம் அளவிற்கு சிறப்பாக இருப்பதாக தோன்றவில்லை.

பாதகங்கள்:

இந்த திரைப்படம் குடும்பமாக சென்று பார்க்க எந்த அளவிற்கு ஏதுவான படமாக இருக்கும் என தெரியவில்லை. அதே சமயம் குழந்தைகளை அழைத்து கொண்டு இந்த படத்திற்கு செல்ல முடியாது என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் படம் நல்ல வெற்றியை கொடுக்குமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

குரங்கிற்கு அறிவு வந்தால் என்னவாகும்!.. Rise of the Planet of the Apes – Hollywood movie Story

Pierre Boulle என்னும் நபரால் எழுதப்பட்ட அறிவியல் புனைக்கதைதான் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ். இந்த கதையின் மையக்கரு என்னவென்றால் வருங்காலத்தில் ஏப்ஸ் எனப்படும் குரங்குகளுக்கு மனிதனை போலவே அறிவு வந்துவிட்டால் அது மனிதனுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனைகளை கொடுக்கும் என்பதைதான் இந்த நாவல் விளக்குகிறது.

இந்த கதை பிடித்து போய் பலரும் இதை படமாக்கியுள்ளனர். அந்த வகையில் பொதுவாக வெளியாகும் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்படங்களில் ஏற்கனவே வருங்காலத்தில் ஏப்ஸ் உலகத்தை ஆண்டுக்கொண்டிருக்க அங்கு மனிதர்கள் படும்பாடு என்றுதான் கதை இருக்கும். ஆனால் 2011 முதல் எடுக்கப்பட்ட இந்த நான்கு பாகங்களில்தான் பூமியில் மனித இனம் வீழ்ந்து எப்படி ஏப்ஸ் இனம் தலை தூக்குகிறது என்கிற கதை வருகிறது. அதில் முதல் பாகத்தின் கதையை பார்க்கலாம்.

Rise of the Planet of the Apes:

Rise of the Planet of the Apes திரைப்படம்தான் 2011 ஆம் ஆண்டு வந்த முதல் திரைப்படமாகும். இந்த படத்தின் கதைப்படி சான் பிரான்ஸிஸ்கோவில் ஜென் சிஸ் எனப்படும் ஆய்வகத்தில் அல்சைமர் நோய்க்கான மருந்தை கண்டுப்பிடிக்கும் சோதனையில் இருக்கின்றனர். அதனை சிம்பன்ஸி குரங்கின் மீது சோதனை செய்யும்போது அதில் ஒரு பெண் குரங்கு மட்டும் அதி புத்திசாலியாக மாறுகிறது.

ஆனால் ஒரு நாள் அதன் போக்கு சரியில்லை என கொல்லப்படுகிறது. அதற்கு முன்பே அந்த பெண் சிம்பன்ஸிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதன் கண்கள் பார்க்க மனித கண்கள் போலவே இருக்கிறது. அங்கிருக்கும் ஒரு சயிண்டிஸ்ட் அதற்கு சீசர் என பெயரிடுகிறார்.

சீசர் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர அதற்கு மனிதர்களை போலவே சிந்திக்கும் திறன் வருகிறது. இந்த நிலையில் ஒரு சூழ்நிலையில் பார்க்கில் இருக்கும் மற்ற குரங்குகளோடு சேர்ந்து இருக்க வேண்டிய நிலை சீசருக்கு ஏற்படுகிறது.

அப்போதுதான் அனைத்து குரங்குகளும் நம்மை போல சிந்திக்கும் திறனோடு இருக்கவில்லை. நாம் மட்டுமே அப்படி இருக்கிறோம் என்பது சீசருக்கு தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் குரங்குகளை மனிதர்கள் அடிமை போல நடத்துவதை சீசர் வெறுக்கிறது.

சீசரின் மனமாற்றம்:

எனவே தனக்கு அறிவு வர காரணமான அந்த மருந்தை மற்ற குரங்குகளுக்கும் கொடுக்கிறது சீசர். அதன் பலனாக பார்க்கில் இருக்கும் அனைத்து குரங்குகளும் சிந்திக்கும் திறனை பெறுகின்றன.

இதனை தொடர்ந்து சீசர் அவைகளை அழைத்துக்கொண்டு நகரத்தை முற்றுக்கையிட்டு காட்டுக்குள் செல்கிறது. அந்த சமயத்தில் சீசரை வளர்த்த அந்த நபர் வந்து சீசரிடம் தன்னோடு வரும்படி அழைக்கின்றான். ஆனால் சீசர் அவனிடம் இந்த காடுதான் சீசரின் வீடு என கூறிவிடுகிறது. அதுவரை பேசாமல் இருந்த சீசர் இப்படி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனிதன் அதோடு அதை விடுகின்றான்.

இதோடு முதல் பாக கதை முடிவடைகிறது.

ஹிட்லருக்கு விபூதி அடித்த ஒரு மெஷின்!. இமிட்டேஷன் கேம் திரைப்பட விமர்சனம்!.

Imitation Game: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் பெனிட்டிக் கம்பேர்பேட்ச் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இமிட்டேஷன் கேம் திரைப்படத்தின் கதை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்த நிஜ கதையாகும்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரகசியகமாக தகவல்களை பரிமாறி கொள்வது என்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. ஒரு நாடு தாக்கும் யுக்தியை அதன் எதிரி நாடுகள் கண்டறிந்து விட்டால் அதற்கு பிறகு அந்த நாடு தாக்குதல் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுவிடும் என்கிற நிலை இருந்தது.

ஹிட்லரின் மெஷின்:

இந்த நிலையில் ஜெர்மனியின் சர்வதிகாரியான ஹிட்லர் எனிக்மா என்னும் விஷேஷ எந்திரத்தை அதற்காக உருவாக்கினார். அந்த எந்திரமானது சில கலவையான ஆங்கில சொற்களின் வழியாக மெசேஜை கொடுக்க கூடியது. அந்த மெசேஜில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டறிய அதே எனிக்மா மெஷின் இருக்க வேண்டும்.

இதனையடுத்து பிரிட்டன் எப்படியோ அந்த எனிக்மா சாதனத்தை திருடிவிட்டு வந்தப்போதும் அவர்களால் அந்த மெசேஜை படிக்க முடியவில்லை. ஏனெனில் தினசரி அந்த மெஷினின் செட்டிங் மாறிக்கொண்டே இருக்கும்.

மெசேஜை பெறுபவரும் அதே செட்டிங்கில் மெஷினை வைத்திருந்தால்தான் அந்த மெசேஜ் என்னவென்று அவர்களால் பெற முடியும். இந்த நிலையில் அந்த மெசேஜை கண்டுப்பிடிக்க ஒரு மனிதனுக்கு 20 வருடம் ஆகும் என்கிற நிலை இருந்தது.

ஆலன் ட்யூரிங் சாதனை:

இந்த நிலையில்தான் கணிதவியலாளரான ஆலன் ட்யூரிங் என்பவர் அந்த மெசேஜை கண்டு பிடிப்பதற்காக கிரிஸ்டோபர் என்னும் கருவியை கண்டுப்பிடித்தார். பிறகு ட்யூரிங் மெஷின் என அழைக்க அந்த கருவி இப்போது கணினி என அழைக்கப்படுகிறது.

ஆலன் ட்யூரிங் இந்த மெஷினை எப்படி கண்டுப்பிடித்தார் என சுவாரஸ்யமாக கூறும் படமே இமிடேஷன் கேம் திரைப்படம். இதில் ஆலன் ட்யூரிங்காக நடித்த நடிகர் பெனிடிக்ட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியன் 2 ஓ.டி.டி விமர்சனம்.. இவ்வளவு பிரச்சனை படத்துல இருக்கா!..

திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் குறைந்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் இருந்து வருகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டும் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டியில் வெளியானது. சில திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியான பிறகு நேர்மறையான விமர்சனங்களை பெறும். ஆனால் இந்த படம் ஓ.டி.டியிலும் கூட எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

ஓ.டி.டி விமர்சனம்:

படத்தின் கதையை பொறுத்தவரை இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சித்தார்த் நடித்துள்ளார். சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் என நண்பர் குழு 4 பேர் இணைந்து சமூகத்தில் நடக்கும் லஞ்ச பிரச்சனைகளை யூ ட்யூப் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த சமயத்தில் இந்த லஞ்ச பிரச்சனை தலை விரித்தாடி ஆடவே இதை சரி செய்ய இந்தியன் தாத்தா வந்தால் மட்டும்தான் உண்டு என கம் பேக் இந்தியன் என்கிற ஹாஸ் டேக்கை ஷேர் செய்கின்றனர். வெளிநாட்டில் குரங்கு மான் என்று வித்தியாசமான வர்ம முறைகளில் கொலை செய்து கொண்டிருக்கும் இந்தியன் தாத்தா இதனை பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வருகிறார்.

பிறகு அவர் இளைஞர்களை எழ செய்து பெரும் மாற்றத்தை செய்ய நினைக்கிறார். அது அவருக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை உண்டு பண்ணுகிறது என்பதோடு திரைப்படம் முடிவடைகிறது. அடுத்த பாகத்தில் மீதி கதை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் உள்ள குறைகள்:

மொத்த படத்திலும் இந்தியன் தாத்தாவின் கதாபாத்திரம் மாறி இருப்பது படத்தில் பெரும் குறையாக இருக்கிறது. சேனாபதியை பொறுத்தவரை அவர் கொலையை ரசித்து செய்யக்கூடிய சீரியல் கில்லர் கிடையாது. தனக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் கூட வேறு வழியில்லை என்பதால் அந்த பாதையை தேர்ந்தெடுத்திருப்பார்.

ஆனால் இந்தியன் 2 வில் காட்டும்போது அவரை சீரியல் கில்லர் போலவும் கொலையை ரசித்து செய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் படத்தில் அந்த வர்மத்திற்கு இருந்த மரியாதையே இந்த படத்தில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

வர்மம் மூலமாக ஆணை பெண்ணாகவும், குதிரையாக குருவியாக என மாற்றுகிறார் இந்தியன் தாத்தா. பார்க்கவே அது நகைச்சுவையாக இருக்கிறது. படம் முழுக்கவே எதார்த்தத்தில் இருந்து மாற்றமாக இருக்கிறது. நாடக தன்மையுடன் இருக்கிறது.

இந்தியன் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சிக்ஸ் பேக்ஸ் காட்டி எல்லாம் சண்டை போட மாட்டார் என்றாலும் கூட அவருக்கு வைக்கப்பட்ட சண்டை காட்சிகள் ஏற்புடையதாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை. துண்டின் மடிப்பு கலையாமல் அதை தோளில் போட்டுக்கொண்டு சிம்பிளாக சண்டையிடுவதுதான் இந்தியன் தாத்தாவின் கெத்தான அம்சமாக இருந்தது.

ஆனால் இந்த படத்தில் சட்டையை கழட்டிவிட்டு தாத்தா அனைவரையும் கதற விடுகிறார் என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது.

மொத்தத்தில்  இந்தியன் முதல் பாகத்தில் வரும் சேனாபதிக்கும் இதில் வரும் சேனாபதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறது.

சிம்பு தேவனோட போட் படம் கவிழ்ந்ததா? கரை சேர்ந்ததா?.. பட விமர்சனம்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் சிம்பு தேவன். 23 ஆம் புலிகேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சிம்பு தேவன்.

முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ஒவ்வொரு முறை திரைப்படங்களை இயக்கும் பொழுதும் புதுவகையான கதையை வைத்து இயக்கக் கூடியவர் சிம்பு தேவன். அதற்கு பிறகு அவர் இயக்கிய அறை எண் 305 இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான திரைப்படங்களாக இருந்திருக்கின்றன.

சிம்புத்தேவன் படம்:

அந்த வகையில் சமீபத்தில் அவர் இயக்கத்தில் போட் என்கிற திரைப்படம் திரையரங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படமும் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாகும். யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதை என்ன என்று பார்ப்போம்.

கதைப்படி இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் ரங்கூனில் குண்டு போட்டது பலருக்குமே தெரிந்த விஷயமாக இருக்கும். அதற்குப் பிறகு அது சென்னையில் குண்டு போட போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதனால் சென்னையில் இருந்த மக்கள் எல்லாம் அங்கிருந்து கிளம்பி வேறு வேறு இடத்திற்கு சென்றனர். சிலர் சென்னையிலேயே பதுங்கு குழிகள் எல்லாம் கட்டிக்கொண்டு இருந்தனர் அந்த காலகட்டத்தில்தான் இந்த கதை நடக்கிறது.

படத்தின் கதை:

இந்த காலகட்டத்தில் யோகி பாபுவும் அவரது தாயாரும் யோகி பாபுவின் தம்பியை காப்பாற்ற செல்கின்றனர் சிறையில் இருக்கும் தம்பியை எப்படியாவது மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று செல்கின்றனர் இதற்காக ஒரு போட்டை எடுத்துக்கொண்டு செல்லும் அவர்கள் தம்பியை அழைத்துக்கொண்டு திரும்பும் பொழுது தம்பி மட்டும் போட்டில் ஏறவே இல்லை.

இது தெரியாமல் யோகி பாபு போட்டை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். பிறகு அந்த போட்டில் செல்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதையாக இருக்கிறது. அதனை மிக நேர்த்தியாக 2 மணி நேரம் படமாக கொடுத்திருக்கிறார் சிம்பு தேவன்.

படத்தில் இசையைப் பொறுத்தவரை இசை பெரிதாக சொல்லிகொள்ளும்படி இல்லை பாடல்கள் பெரிதாக வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான் ஆனால் படத்தின் கதை என்பது வழக்கமாக சிம்பு தேவன் பாணியிலேயே இருக்கிறது. ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த படம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்தம் குடிக்கும் ஆவி வேட்டையை கொண்ட கதை.. இந்த மலேசிய பேய் படத்தை பார்த்து இருக்கீங்களா? – ROH (2019) Movie Tamil review

மலேசியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் ரோ என்ற திரைப்படம். மர்மமான பேய் படம் என்றாலும் கூட அதிக பயத்தை ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி கடந்த கால நிகழ்வு ஒன்றுதான் மர்ம நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது. ஒரு காட்டில் இரண்டு குழந்தைகள் தங்களுடைய தாயுடன் ஒரு கொட்டகையில் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

மர்ம காடு:

அந்த தாய் விதவையாக இருந்து வருகிறார். ஒருநாள் உயரமான கிளைகளுக்கு இடையே இறந்த மான் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரு இளம் பெண் இவர்களை பின் தொடர்ந்து வருகிறார்.

அனாதையாக இருக்கும் அந்த பெண்ணை தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு அந்த குழந்தைகள் இருவரும் தங்களது சகோதரியாக அந்த பெண்ணை ஆக்கிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்த காட்டில் ஒரு சபிக்கப்பட்ட ஆவி வலம் வருவதாகவும் அது தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் ஒரு கதை இருக்கிறது. அதை குழந்தைகளிடம் சொல்லும் தாய் இரண்டு கற்களை ஒன்றாக தட்டி ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அந்த சபிக்கப்பட்ட சக்தியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

அனாதை பெண்:

இதற்கு நடுவே தொடர்ந்து மர்மமான விஷயங்கள் அந்த காட்டில் நடக்கிறது மேலும் நீங்கள் அனைவரும் இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறாள் புதிதாக வந்த அந்த பெண் மேலும் அதை கூறியதோடு மட்டுமின்றி அவளும் தற்கொலை செய்துக்கொள்கிறாள். இது பலருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது இந்த நிலையில் இந்த மர்மமான காட்டில் இருந்து அந்த குடும்பம் எப்படி தப்பிக்க போகிறது என்பதே இந்த திரைப்படத்தின் கதை.

வெளியான காலகட்டத்தில் அதிக வரவேற்பு பெற்ற படமாக இது இருந்தது ஏனெனில் காட்டில் ஒரு குடும்பம் மட்டும் தனியாக இருக்கிறது என்பதே இந்த படத்தில் அதிக அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது இந்த திரைப்படம் மக்களிடம் அதிக  ஆதரவைப் பெற்ற படமாக இருக்கிறது.

பெண்களுடன் சாமியார் செய்த லீலை !.. எதிர்த்த பத்திரிக்கையாளர்!. உண்மை கதை மகாராஜ் – பட விமர்சனம்!..

நிஜமாகவே நடந்த வழக்கு ஒன்றை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் மகாராஜ். 1862 இல் கர்சன் தாஸ் என்னும் பத்திரிக்கையாளர் ஒரு வைணவ சாமியாருக்கு எதிராக குஜராத்தில் எழுப்பிய வழக்குதான் இந்த படத்தின் கதை.

படத்தின் நாயகனான கர்சன் தாஸ் சமூக விழிப்புணர்வு கொண்டவராக இருக்கிறார். வைணவ சமூகத்தில் பிறந்திருந்தாலும் கூட அப்போதே மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்துள்ளார். விதவைகள் மறுமணம், இந்து மத மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதி வருகிறார் கர்சன்தாஸ்.

கடுப்பான கர்சன் தாஸ்:

இந்த நிலையில் குஜராத்தில் இருக்கும் வைணவ சாமியார் ஒருவர் அங்குள்ள பெண்களிடம் தொடர்ந்து பாலியல் உறவு கொண்டு வருகிறார். இதற்கு பாத பூஜை என்று பெயரும் வைத்துள்ளார். அவரிடம் தன் வீட்டு பெண்ணை அனுப்புவதை புண்ணியமாக கருதுகின்றனர் மக்கள்.

மேலும் அந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். இந்த அவலத்தை பார்த்த கர்சன் தாஸ் கொதித்து எழுதுகிறார். தொடர்ந்து இந்த சாமியார் செய்யும் வேலைகளை தன்னுடைய பத்திரிக்கைகளில் எழுத துவங்குகிறார்.

வழக்கு:

இதனை தொடர்ந்து கர்சன் தாஸ் மீது மான நஸ்ட ஈடு வழக்கு போகிறார் அந்த சாமியார். அந்த வழக்கில் கர்சன் தாஸ் எப்படி உண்மையை நிலைநாட்டுகிறார் என்பதுதான் கதையே. இதில் கர்சன் தாஸ் கதாபாத்திரத்தில் அமீர் கான் மகனான ஜுனாய்த் கான் நடித்திருக்கிறார்.

1862 இல் இந்தியாவில் நடந்த இந்த வழக்கு அதன் பிறகு 2013 இல் நாவலாக வெளிவந்தது. அதை அடிப்படையாக கொண்டுதான் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கில் ஓ.டி.டியில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன.