Category Archives: Special Articles

Tamil cinema special articles, Kollywood features,behind-the-scenes,interviews,analysis, film industry insights,

தமிழ் படங்களை இலவசமாக பார்க்க உதவும் ஓ.டி.டி தளங்கள்

தமிழ் சினிமா திரைப்படங்களில் ஓ.டி.டி தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போதெல்லாம் படங்கள் வெளியாகி சில நாட்களிலேயே ஓ.டி.டியில் வெளியாகிவிடுகின்றன.

ஆனால் பெரும்பாலான ஓ.டி.டி தளங்கள் அதிகமான அளவில் பணம் வசூலித்துவிட்டுதான் நமக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை பார்ப்பதற்கு அனுமதிக்கின்றன.

எனவே நாம் இலவசமாக நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை பார்க்க உதவும் சில ஓ.டி.டி தளங்களை பார்க்கலாம்.

01.எம்.எக்ஸ் ப்ளேயர் (MX Player)

எம்.எக்ஸ் ப்ளேயர் டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனத்தால் நடத்தப்படும் முக்கியமான தளமாகும். முதன் முதலாக ஆண்ட்ராய்டு செயலியாக வந்த எம்.எக்ஸ் ப்ளேயர் தற்சமயம் ஓ.டி.டி தளமாக மாறியுள்ளது.

எம்.எக்ஸ் ப்ளேயர் முற்றிலும் இலவசமான ஒரு ஓ.டி.டி தளமாகும். இதில் பல ஹாலிவுட் திரைப்படங்கள், டிவி தொடர்கள் மற்றும் தமிழ் படங்கள் இலவசமாக கிடைக்கின்றன.

ஆனால் அவற்றை பார்க்கும்போது இடை இடையே விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகும். இதற்காக நாம் எந்த லாகினும் செய்ய தேவையில்லை. இது ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் வெப்சைட் என இரண்டு வடிவிலும் உள்ளது.

எம்.எக்ஸ் ப்ளேயர் ஆப் லிங்க் :  க்ளிக் செய்க

எம்.எக்ஸ் ப்ளேயர் தளம்: https://www.mxplayer.in/

02.ஜியோ சினிமா – Jio Cinema

ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்காக வெளியிட்ட செயலி ஜியோ சினிமா. ஜியோ சிம் வைத்திருக்கும் நபர்கள் இதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஜியோ பயனர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

ஹே சினாமிகா, காடன் போன்ற புதிய படங்கள் கூட இதில் இலவசமாக கிடைக்கிறது. மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்களும் கூட இதில் கிடைக்கின்றன.

ஜியோ சினிமாவும் ஆப் மற்றும் வெப்சைட் ஆகிய இரு வடிவங்களில் கிடைக்கின்றன.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://www.jiocinema.com

03.டிஸ்னி ஹாட் ஸ்டார் – Disney Hot Star

அமெரிக்க நிறுவனமான டிஸ்னி மற்றும் ஸ்டார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஓ.டி.டி தளம் டிஸ்னி ஹாட் ஸ்டார். டிஸ்னி ஹாட் ஸ்டாரை ஒரு முழுமையான இலவச ஓ.டி.டி தளம் என கூறிவிட முடியாது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா போன்ற சில நிகழ்ச்சிகள் இதில் இலவசமாக பார்க்க கிடைக்கிறது. ஆனால் அதில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை காண நாம் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

புதிதாக வெளியாகும் பல திரைப்படங்கள், அனிமேஷன் தொடர்கள், விளையாட்டு தொடர்கள், வெப் தொடர்கள் இதில் காண கிடைக்கின்றன.

குறைந்த விலையாக 400 ரூபாய்க்கு இதில் சப்ஸ்க்ரிபிஷன் ப்ளான் உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரும் கூட ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் வெப்சைட் வடிவங்களில் உள்ளன.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://www.hotstar.com/in

04. BSNL Yipptv:

பி.சி.என்.எல் நிறுவனம் தனது பயனர்களுக்காக வெளியிட்டுள்ள இலவச ஓ.டி.டி தளம்தான் பி.எஸ்.என்.எல் யப் டிவி.

300 க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்கள், 500க்கும் அதிகமான டிவி சீரிஸ்கள், 8000க்கும் அதிகமான திரைப்படங்கள் இதில் கிடைக்கின்றன. பி.எஸ்.என்.எல் ப்ராண்ட் பேண்டில் 749 ரூபாய் ப்ளான் போடும் பயனர்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது.

ஆனால் இந்தியாவில் குறைவான அளவிலே பி.சி.என்.எல் பயனர்கள் இருப்பதால் அவர்களை தவிர வேறு யாரும் இதை பயன்படுத்த முடியாது.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://cinemaplus.bsnl.in/

06.Vi Movies and TV

மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை போலவே விஐ நிறுவனம் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ள தளம்தான் விஐ மூவிஸ் அண்ட் டிவி.

மற்ற தளங்களில் உள்ளது போலவே இதிலும் பல படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பார்ப்பதற்கு கிடைக்கின்றன. ஆனால் தமிழை விடவும் ஹிந்தி மொழி படங்களே இதில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://moviesandtv.myvi.in/

07.சன் நெக்ஸ்ட் – Sun Nxt

சன் நெட்வொர்க் நிறுவனத்தால் நடத்தப்படும் ஓ.டி.டி தளம் சன் நெக்ஸ். சன் நெக்ஸ் ஆயிரக்கணக்கான தமிழ் படங்களை கொண்ட ஓ.டி.டி தளமாகும். பழைய எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களில் துவங்கி புதுப்படம் வரையிலும் இதில் கிடைக்கிறது.

ஆனால் இந்த தளத்திற்கு காசு கட்டியே நாம் படங்களை பார்க்க முடியும். ஆனால் சன் ட்ரைக்டு டி.டிஹெச் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இதில் இலவசமாக திரைப்படங்களை பார்த்துக்கொள்ள முடியும்.

வெப்சைட் லிங்க்: https://www.sunnxt.com/

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

08.ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் போலவே ஏர்டெல் நிறுவனமும் தனது பயனர்களுக்காக ஓ.டி.டி தளத்தை வைத்துள்ளது. இந்த தளத்தில் இந்தியாவில் உள்ள பல மொழிகளை சார்ந்த திரைப்படங்கள், தொடர்கள் கிடைக்கின்றன.

முக்கியமாக ஹாலிவுட் திரைப்படங்களும் கிடைக்கின்றன. ஏர்டெல் இணையம் பயன்படுத்தும் பயனர்களில் குறிப்பிட்ட ப்ளான்களை பயன்படுத்துபவர்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது. ஏர்டெல் சிம் பயன்பாட்டாளர்களிலும் குறிப்பிட்ட ப்ளான்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது.

வெப்சைட் லிங்க்: https://www.airtelxstream.in

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

இவை அனைத்தும் இலவசமாக டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதற்கு உதவுகின்றன.

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான 10 சுட்டி டிவி கார்ட்டூன் நிகழ்ச்சிகள்!

உள்ள தலைமுறைகளிலேயே அதிகம் கார்ட்டூன் பார்த்த தலைமுறைகளாக 90ஸ் கிட்ஸ் தலைமுறைதான் இருக்கும். ஏனெனில் 1990 களுக்கு பிறகுதான் டிவி என்னும் சாதனம் மிக புதிதாக மக்களிடையே பிரபலமடைந்து வந்தது.

சுட்டி டிவி என்கிற சேனல் வரும் வரை கார்ட்டூன் நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில்தான் பார்த்து வந்திருப்போம். டிவி என்பதே புதிது என்பதால் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு கண்க்கட்டி வித்தை போல இருந்தது.

சுட்டி டிவி வந்த பிறகு அதில் கார்ட்டூன் பார்த்த அனுபவங்களை பலரால் மறக்க முடியாது. நேரமாச்சு சுட்டி கண்ணா என்ற பாடலையும் மறக்க முடியாது. எனவே 90ஸ் கிட்ஸ் நினைவுகளில் நீங்கா 10 சுட்டி டிவி கார்ட்டூன்களை இப்போது பார்ப்போம்.

01.ஹெய்டி – Heidi, Girl of the Alps

ஜோஹனா ஸ்பைரி என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட உலக புகழ்பெற்ற நாவல் ஹெய்டி. இது 1974 ஆம் ஆண்டு ஜப்பானில் கார்ட்டூன் தொடராக எடுக்கப்பட்டது. பிறகு சுட்டி டிவியில் அதுவே தமிழ் மொழிப்பெயர்ப்பில் ஒளிப்பரப்பானது.

ஜெர்மனியில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் முதியவர் ஒருவர். அவர் தனது வாழ்க்கையை தனிமையில் கழிக்கிறார். அவரை கண்டாலே அங்கு உள்ள கிராமம் பயப்படுகிறது. இந்த நிலையில் அவரது பேத்தியான ஹெய்டி அவரிடம் ஒப்படைக்கப்படுகிறார். ஹெய்டியின் சுட்டி தனங்களால் தாத்தா வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அவளுக்கு பீட்டர் என்கிற நண்பன் கிடைக்கிறான்.

வாழ்வில் பிடிப்பே இல்லாத முதியவருக்கு ஹெய்டி நம்பிக்கையை ஏற்படுத்துகிறாள். இந்த நிலையில் முதியவரை விட்டு பிரிந்து ஃப்ராங்க்பர்ட் செல்கிறாள் ஹெய்டி. அங்கு அவளுக்கு க்ளாரா என்னும் தோழி கிடைக்கிறாள். அவர்களுடைய நட்பு இன்னும் பல விஷயங்களை பேசும் முக்கியமான கார்ட்டூன் தொடர் ஹெய்டி.

02. ஹி மேன் –  த மாஸ்டர் ஆஃப் த யுனிவர்ஸ் – He man the Master of the Universe

சுட்டி டிவி பார்த்த யாருக்கும் ஹீ மேனை மறக்க முடியாது. 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒளிப்பரப்பப்பட்ட அனிமேஷன் தொடர் ஹீ மேன் த மாஸ்டர் ஆஃப் த யுனிவர்ஸ். 130 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் பிறகு தமிழில் வெளியானது.

இடார்னியா எனும் தேசத்தின் இளவரசரான ஆடம் ஒரு அதிசய வாளை வைத்திருப்பார். அதை வானை நோக்கி நீட்டி க்ரேஸ்கல் கோட்டையின் சக்தி என கூறினால் அவருக்கு அபரிவிதமான சக்திகள் வரும். இவர்தான் ஹீ மேன் என்பது சிலருக்குதான் தெரியும்.

இவர்கள் அனைவரும் தீமைக்கு எதிராக போராடுபவர்கள். இவர்களின் எதிரி ஸ்கெலட்டன் எனப்படும் எலும்பன்.

03.ஜாக்கிச்சான் அட்வெஞ்சர்ஸ் – Jackie Chan Adventures

சுட்டி டிவி துவங்கிய காலம் முதலே நிறுத்தாமல் ஓடி கொண்டிருக்கும் தொடர் ஜாக்கிச்சான் அட்வெஞ்சர்ஸ். ஜாக்கிச்சானுக்கு டப்பிங் செய்த நபரே இந்த கார்ட்டூனுக்கும் டப்பிங் செய்துள்ளார்.

ஜாக்கிச்சான் அட்வெஞ்சர்ஸ் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. மொத்தம் இது 5 சீசன்களையும் 95 எபிசோடுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு கதையை கொண்டது.

மந்திர கற்கள், முகமூடிகள், அரக்கர்கள் என உலகில் கற்பனைக்கு எட்டாத சில விஷயங்களை பாதுகாப்பதுதான் ஜாக்கிச்சான் மற்றும் அவரது குழுவான ஜூலி,பீமா,அங்கிள், கேப்டன் ப்ளாக் இவர்களின் வேலை.

சிண்டு, மாயாவி, வால்டமார்ட் இவர்கள் எல்லாம் இந்த கதையில் வில்லன்களாக வருகின்றனர்.

04.அவதார் – த லாஸ்ட் ஏர்பெண்டர் – Avatar the Last Airbender

2005 ஆம் ஆண்டு நிக்லோடியனில் வெளிவந்த அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர் பிறகு தமிழில் வெளியானது. மொத்தம் மூன்று சீசன்களை கொண்ட அவதாரில் முதல் சீசன் மட்டுமே தமிழில் வந்தது.

உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலருக்கு நிலம்,நீர்,காற்று,நெருப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சக்தி இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் தலைவராக அவதார் என்கிற ஒருவர் பிறப்பார். இந்த நிலையில் உலகையே ஆள வேண்டும் என்கிற ஆசையில் உள்ள நெருப்பு ராஜ்ஜியம் அடுத்து காற்று வீரர்களில் ஒருவராகதான் அவதார் பிறப்பார் என்பதால் மொத்த காற்று வீரர்களையும் அழித்து விடுகின்றனர்.

அதிலிருந்து தப்பிக்கு ஆங் என்னும் சிறுவன் (அடுத்த அவதார்) கடலில் நித்திரையடைகிறான். 100 வருடமாக அவதார் வராத காரணத்தால் உலகம் நெருப்பு வீரர்களின் கைக்கு செல்கிறது. 100 வருடத்திற்கு பிறகு 8 வயது சிறுவனான ஆங் கை கத்தாரா என்கிற நீர் சக்தி கொண்ட பெண் எழுப்புகிறாள்.

அதன் பிறகு அனைத்து சக்திகளையும் கட்டுப்படுத்தும் அவதாராக மாறி ஆங் எப்படி மக்களை மீட்கிறான் என்பதே கதை.

05.டோராவின் பயணங்கள் – Dora The Explorer

டோராவின் பயணங்களை பார்க்காத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. இது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தொடராகும். 2000 ஆம் ஆண்டு வந்த இந்த தொடர் 8 சீசன்களை கொண்டுள்ளது.

டோரா மற்றும் அதன் குரங்கு நண்பன் புஜ்ஜி இருவரும் சேர்ந்து சுவாரஸ்யமான பயணம் மேற்கொள்வதே கதை. இந்த பயணத்தில் குள்ள நரி, பென்னி, டிக்கோ, டியாகோ போன்ற பல கதாபாத்திரங்கள் வருகின்றன.

06.பண்டலேரோ – Bandolero

2001 மற்றும் 2002 ஆண்டுகளில் வெளியான தொடர் பண்டலேரோ. ஒரு சின்ன கிராமம். அந்த கிராமத்தில் தொடர்ந்து அநீதியை நிகழ்த்தி வரும் மேயர். அவரால் சிறு வயதிலேயே பாதிக்கப்படுகிறான் பண்டலேரோ.

எனவே அருகில் உள்ள காட்டில் தனது சகாக்களோடு ஒரு அணியை உருவாக்கி மேயருக்கு எதிரான விஷயங்களை எப்படி செய்கிறான் என்பதே கதை.

07.க்ளோரியாவின் வீடு – gloria’s house

2000 ஆம் ஆண்டு வெளிவந்த சுவாரஸ்யமான கார்ட்டூன் தொடர் க்ளோரியாவின் வீடு.

மிகவும் நாகரிகமான வீடுகளை கொண்ட ஒரு தெரு. அங்கு ராஜமெளலி என்பவரின் குடும்பம் குடி வருகிறது. அவர்களின் மகள்தான் க்ளோரியா. க்ளோரியாவின் வீடு எப்போதும் அசுத்தமாகவும், ஒழுங்கற்றும் இருக்கும். அவர்களது உடைகள் கூட நாகரிகமாக இருக்காது.

அதே சமயம் க்ளோரியாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சோஃபியின் குடும்பம். அவர்கள் மிகவும் சுத்தமாகவும், நாகரிகமாகவும் இருப்பார்கள்.

ஆனால் க்ளோரியாவின் குடும்பம் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும், சோஃபியின் குடும்பம் மோசமான எண்ணங்களை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என கூறும் விதத்தில் இந்த தொடர் இருக்கும்.

08.க்ரேஸி ஜெஸ்ஸி – Crazy Jessy

குப்பைகளில் கிடைக்கும் பொருட்களை வைத்தே கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடிக்கும் விஞ்ஞானிதான் ஜெசிக்கா என்னும் பெண். அவள் எதற்காக கண்டுபிடிக்கிறாள். அதனால் என்னவெல்லாம் அவளுக்கு ஏற்படுகிறது என்பதே கதை.

09.செட்ரிக் – Cedric

பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுவன்தான் செட்ரிக். அதே பள்ளியில் படிக்கும் ஜென் என்கிற சீன பெண்ணை அவன் காதலிக்கிறான். அதை வைத்து மிகவும் நகைச்சுவையான கதை ஓட்டட்தில் செல்லு கதை செட்ரிக்.

ஏற்கனவே காமிக்ஸாக செட்ரிக் மிகவும் பிரபலமாகும். அதனால் அப்படியே அது கார்ட்டூன் தொடராக்கப்பட்டுவிட்டது.

10.கோஸ்ட் பஸ்டர்ஸ் – The Real Ghostbusters

1986 இல் வந்த இந்த தொடர் மொத்தம் 7 சீசன்களை கொண்ட கதையாகும். மக்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த பேய்களை அறிவியல் கருவிகளை கொண்டு பெட்டிக்குள் அடைப்பவர்கள்தான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். உலக அளவில் மிகவும் பிரபலமான தொடராக இது உள்ளது.

இந்த வருடம் ப்ளாப் வாங்கிய 11 தமிழ் திரைப்படங்கள்

மற்ற சினிமா ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்கள் சில விஷயங்களில் மாறுப்பட்டு காணப்படுகின்றனர். ஒரு திரைப்படத்தில் பெரும் கதாநாயகர்கள் நடித்திருந்தால் போதும், உடனே ஹிட் அடித்துவிடும். இது மற்ற மொழி சினிமாக்களில் உள்ள சங்கதி.

ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் கூட கதை சரியாக இல்லை என்றால் அந்த படம் ஓடாது. உதாரணத்திற்கு சுறா, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை கூறலாம்.

அதே போல இந்த வருடம் வெளியாகி பெரும் தோல்வியுற்ற பத்து படங்களை இப்போது பார்க்கலாம்.

01.கோப்ரா

தமிழில் 2020 ஆம் ஆண்டு முதலே பல்வேறு நாடுகளுக்கு சென்று பெரும் பொருட் செலவில் தயாரான திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.

கே.கி.எஃப் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளானது.

02.கேப்டன்

நடிகர் ஆர்யா நடிப்பில் தமிழில் வெளியான சயின்ஸ்பிக்ஸன் த்ரில்லர் திரைப்படம் கேப்டன். இந்த படத்தை இயக்குனர் சக்தி செளந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆர்யாவே தயாரித்தார்.

பிரிடேட்டர் என்கிற ஹாலிவுட் படத்தின் கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெற்றியடையவில்லை.

03.என்ன சொல்ல போகிறாய்

இந்த வருடம் வந்த படங்களில் பெயர் கூட தெரியாத அளவிற்கு சில படங்கள் மக்கள் மத்தியில் தெரியாமல் போனது. அதில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படமும் ஒன்று.

இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் கதாநாயகனாக நடித்திருந்தார். தேஜூ அஸ்வினி கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் கதையை கருவாக கொண்ட இந்த படம் ஒரு வாரம் கூட திரையரங்கில் ஓடவில்லை என கூறப்படுகிறது.

04.ப்ரின்ஸ்

இந்த வருடம் பெரும் நடிகர்கள் நடித்து ப்ளாப் அடித்த படங்களில் முக்கியமான திரைப்படம் ப்ரின்ஸ். சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் வந்த சர்தார் படத்துக்கே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ப்ரின்ஸ் திரைப்படத்தில் கதையே இல்லை என கூறப்பட்டது. பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய படமாக ப்ரின்ஸ் உள்ளது.

05.வீரமே வாகை சூடும்

விஷால் நடிப்பில் வெளியாகி குறைந்த வசூலை செய்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை இயக்குனர் பா.சரவணன் இயக்கியிருந்தார். த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெறவில்லை.

06.காஃபி வித் காதல்

பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்குனர் சுந்தர் சியால் எடுக்கப்பட்ட திரைப்படம் காஃபி வித் காதல். ஆனால் அந்த படம் வெளியான அதே சமயம் லவ் டுடே திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமானது.

காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜெய்,ஜீவா,திவ்ய தர்ஷினி,ஸ்ரீகாந்த் இன்னும் பலர் நடித்திருந்தனர். ஆனால் படம் தோல்வியை கண்டது.

07.ஐங்கரன்

நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் ஐங்கரன். இந்த படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்கியிருந்தார். ஜி.வி பிரகாஷ் இதில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இதனால் படம் தோல்வியை கண்டது.

08.இடியட்

நகைச்சுவை நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான காமெடி ஹாரர் திரைப்படம் இடியட். இந்த படத்தை தில்லுக்கு துட்டு திரைப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியிருந்தார்.

ஆனால் தில்லுக்கு துட்டு அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படம் படு தோல்வியை கண்டது.

09.கொம்பு வச்ச சிங்கம்டா

நடிகர் சசி நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா. வந்த வேகத்திற்கு அனைத்து திரையரங்கை விட்டும் இந்த படத்தை எடுத்துவிட்டனர்.

படத்திற்கு எந்த ஒரு கூட்டமும் வரவில்லை என்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கியிருந்தார்.

10.மாறன்

தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் எதிர்பாராத விதமாக இந்த வருடம் தோல்வியை கண்டது. இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

படம் மிகவும் போர் அடிக்கும் விதமாக உள்ளது என இந்த படம் குறித்து கூறப்படுகிறது.

11.டி.எஸ்.பி

இந்த வருடம் பெரும் தோல்வி கண்ட ஹீரோக்கள் வரிசையில் விஜய் சேதுபதியும் கூட இருக்கிறார். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் டி.எஸ்.பி.

உள்ளூர், வெளிநாடு என எங்கேயுமே இந்த படத்திற்கு கூட்டமே வரவில்லை. திரையரங்கில் தோல்வியை கண்டதால் வெகு சீக்கிரமாகவே இந்த படத்தை ஓ.டி.டிக்கு கொடுத்துவிட்டனர்.

2022 இல் உலக அளவில் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்

ஹாலிவுட் என்பது பெரும் மார்க்கெட்டை கொண்ட சினிமா துறையாகும். இதனால் ஹாலிவுட் திரைப்படங்கள் எளிதாக பல கோடிகள் வசூல் செய்துவிடும்.

ஆனாலும் உலக அளவில் ஹாலிவுட் திரையுலகை விஞ்சும் வகையில் சில படங்களும் டாப் 10க்குள் அரிதாக வருவதுண்டு. எனவே உலக அளவில் டாப் 10 வசூல் சாதனை படைத்த திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

10.மூன் மேன் – Moon Man

மூன் மேன் என்பது ஒரு சீன திரைப்படமாகும். விஞ்ஞான படமாகவும், அதே சமயம் நகைச்சுவை திரைப்படமாகவும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. சந்திரனுக்கு செல்லும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக சந்திரனிலேயே மாட்டிக்கொள்கிறார்.

அங்கிருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்பதே படத்தின் கதை. இந்த படம் உலக அளவில் $460,237,662 டாலர்கள் வசூல் சாதனை செய்தது.

09.வாட்டர் கேட் ப்ரிட்ஜ் – Water Gate Bridge

வாட்டர் கேட் ப்ரிஜ்ட் ஒரு சீன திரைப்படமாகும். The Battle at Lake Changjin என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரியாவில் போர் நடக்கும்போது சீனாவை சேர்ந்த தன்னார்வ குழு ஒன்று அவர்களுக்கு உதவி செய்ய செல்கிறது. அந்த சமயத்தில் அவர்கள் செல்லும் பாதையில் அமெரிக்க படைகள் வருகின்றன. அவர்களை இந்த தன்னார்வ குழு எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை வைத்து கதை செல்கிறது.

இந்த படம் உலக அளவில் $626,571,697 வசூல் சாதனை செய்துள்ளது.

08.தோர் லவ் அண்ட் தண்டர் – Thor Love and Thunder

இந்த வருடம் வெளியான மார்வல் திரைப்படங்களில் மிகவும் நகைச்சுவையான ஒரு திரைப்படம் தோர் லவ் அண்ட் தண்டர்.

எண்ட் கேம் படத்திற்கு பிறகு தோர் கதாபாத்திரம் அமைதியாக வாழ்ந்து வருகிறது. அந்த சமயத்தில் கடவுளை கொலை செய்யும் வில்லன் ஒருவன் ஆஸ்கார்ட் மக்களின் குழந்தைகளை கடத்தி செல்ல, அவனிடம் இருந்து குழந்தைகளை மீட்க தோர் மேற்கொள்ளும் சாகசங்களே படத்தின் கதையாக உள்ளது.

இந்த படம் மொத்தமாக $760,928,081 டாலர்களுக்கு ஓடி சாதனை படைத்தது.

07.பேட்மேன் – Batman

டிசி நிறுவனத்திற்கு அடிக்கடி தங்களது சூப்பர் ஹீரோக்கள் கதைகளை முதலில் இருந்து எடுப்பதே வேலை. அப்படியாக புதிதாக வந்த பேட்மேனின் கதைதான் இந்த பேட்மேன் திரைப்படம்.

கோத்தம் சிட்டியில் நடக்கும் தவறுகளை கண்டறிய பேட்மேனே துப்பு துலக்குவது போல இந்த படம் அமைந்துள்ளது.

இந்த படம் அமெரிக்க டாலர்களில் $770,836,163 டாலருக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது.

06.ப்ளாக் பாந்தர் வகாண்டா பார் எவர் – Black panther Wakanda Forever

மார்வெல் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான மற்றுமொரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படம்தான் ப்ளாக் பாந்தர் வகாண்டா பார் எவர்.

ப்ளாக் பாந்தர் முதல் பாகத்தில் கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் இறந்த காரணத்தினால் இந்த படத்திற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

படக்கதைப்படி வகாண்டாவின் தலைவனான ப்ளாக் பாந்தர் இறந்து போக, அவரது இடத்தை பிடிக்கும் ப்ளாக் பாந்தரின் தங்கை ஷூரி எப்படி ஒரு தலைவியாய் மாறுகிறாள் என கதை செல்கிறது.

இந்த படத்தின் மொத்த வசூல் $801,155,401 டாலர்கள்

05.அவதார் த வே ஆஃப் வாட்டர் – Avatar the Way of the water

 2009 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் அவதார் த வே ஆஃப் வாட்டர்.

கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகி பத்தே நாட்களில் உலக பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது அவதார். படம் வெளியாகி இதுவரை இந்த படம் $881,381,686 டாலர்கள் வசூல் செய்துள்ளது.

04. Minions: The Rise of Gru

இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் டாப் 10க்குள் வந்த ஒரே ஒரு அனிமேஷன் திரைப்படம் மினியன்ஸ் ரைஸ் ஆஃப் க்ரு. டெஸ்பிகபிள் மீ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் எடுக்கப்பட்டது.

பெரும் வில்லனாக இருக்கும் க்ரூ எப்படி சிறு வயது முதலே வில்லதனமாக இருந்தார் என்பதை நகைச்சுவையாக கூறும் திரைப்படம் மினியன்ஸ் த ரைஸ் ஆஃப் க்ரூ.

இந்த படம் மொத்தம் $939,433,210 டாலர்கள் வசூல் சாதனை செய்தது.

03. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் – Doctor Strange Multiverse of Madness

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் மாய மந்திரங்கள் நிறைந்த படமாகும். மல்டிவெர்ஸை பயன்படுத்தி தனது இழந்த வாழ்க்கையை பெற நினைக்கும் ஸ்கேர்லெட் விட்ச். அதிலிருந்து உலகை காக்க போராடும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என படத்தின் கதை செல்கிறது.

மொத்தமாக $955,775,804 டாலர்கள் வசூல் செய்தது இந்த படம்

02.ஜூராசிக் வேல்டு – டொமினியன் – Jurrassic World – Dominion

ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஜூராசிக் வேல்டு. அதன் இறுதி பாகமாக வெளியான ஜூராசிக் வேல்டு டொமினியன் மிகவும் பிரபலமானது.

ஏனெனில் ஜூராசிக் பார்க் படத்தில் இருந்த நட்சத்திரங்கள் இதிலும் நடித்திருந்தனர். பூமிக்குள் பரவ துவங்கும் டைனோசர் இனம் எப்படி மனித இனத்தோடு சேர்ந்து வாழ துவங்குகிறது என்பதை விளக்கும் விதமாக இந்த படத்தின் கதை செல்கிறது.

இந்த படம் $1,001,136,080 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்தது.

01.டாப் கன் மாவ்ரிக் – Top Gun Maverick

30 வருடங்களுக்கு முன்பு வெளியான டாப் கன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக டாப் கன் மாவ்ரிக் எடுக்கப்பட்டது.

நடிகர் டாம் க்ரூஸ் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். விமான பைலட்டாக இருக்கும் கதாநாயகன் ஒரு சிறப்பு ஆப்ரேஷனுக்காக ட்ரெயினிங் கொடுக்க வருகிறார்.

மிகவும் கடினமான இந்த ஆப்ரேஷனில் எப்படி ஜெயிக்கிறார்களே என்பதே கதை. இந்த படம் மொத்தமாக $1,488,732,821 அமெரிக்க டாலர்களுக்கு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த வருடம் வந்த திரைப்படங்களில் டாப் கன் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் அவதார் திரைப்படம் இந்த இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2022 இல் வசூல் சாதனை செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனின் சம்பளம் துவங்கி, இயக்குனரின் சம்பளம் வரை அனைத்தும் படத்தின் வசூலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்பது திரையுலகில் முக்கியமான விஷயமாக உள்ளது.

இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்த டாப் 10 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

10.விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் எடுத்திருந்தனர். இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமாக  விருமன் உள்ளது.

09.லவ் டுடே

இந்த வருடம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபம் பார்த்த திரைப்படம் லவ் டுடே. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி அவரே நடித்திருந்த படமாக லவ் டுடே உள்ளது.

படத்தின் கதைப்படி இரு காதலர்கள் ஒரு நாளைக்கு இருவரது மொபைல் போன்களையும் மாற்றி கொள்கின்றனர். அதனால் அவர்களுக்குள் ஏற்படும் விரிசல்களை மையமாக வைத்து கதை செல்கிறது.

ஐந்து கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது.

08.வெந்து தணிந்தது காடு

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார். ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

மும்பைக்கு கூலி வேலைக்கு செல்லும் கதாநாயகன் எப்படி அங்கு கேங்ஸ்டர் ஆகிறான் என்பதாக கதை செல்கிறது. இந்த படம் 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தது.

07.சர்தார்

தமிழில் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படமெடுக்கும் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.

சர்தார் என்னும் உளவாளி நாட்டிற்காக ஒரு உளவு வேலைக்கு செல்கிறார். அதில் தண்ணீர் தொடர்பான கார்பரேட் சதியை கண்டறியும் சர்தார் பிறகு அதை எப்படி தடுக்கிறார் என கதை செல்கிறது.

இந்த படம் 90 கோடி வசூல் சாதனை படைத்தது.

06.டான் மற்றும் மாநாடு

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தயாரான திரைப்படம் டான். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக கூறும் திரைப்படம் டான்.

மாநாடு திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவால் எடுக்கப்பட்ட முதல் தமிழ் டைம் லூப் திரைப்படமாகும். ஒரு மாநாட்டில் பெரிய மத கலவரம் நடக்க இருக்கும், அதை டைம் லூப் சக்தியை பயன்படுத்தி கதாநாயகன் எப்படி தடுக்கிறார் என்பதே கதை.

இந்த இரண்டு படங்களுமே 100 கோடி வசூல் செய்த படங்களாக உள்ளன.

05.திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் சிம்பிளான டெலிவரி பாயாக நடித்த படம் திருச்சிற்றம்பலம், படத்தில் ஒரு சண்டை காட்சிகள் கூட கிடையாது என்றாலும் எதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் படம் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

thiruchitrambalam poster

காதலிக்க ஒரு பெண்ணை தேடி வரும் கதாநாயகன், அதே சமயம் சிறு வயது முதல் அவருக்கு தோழியாக இருக்கும் கதாநாயகி, இவர்களின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் செல்கிறது.

இந்த படம் 90 முதல் 100 கோடி ஹிட் அடித்ததாக கூறப்படுகிறது.

04.வலிமை

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. பல காலங்களாக ரசிகர்கள் காத்திருப்புக்கு பிறகு இந்த படம் வெளியானது.

படத்தின் கதைப்படி ஊருக்குள் திருட்டை செய்வதற்கு ஒரு பைக்கர் கும்பல் கிளம்பியுள்ளது. அந்த கும்பலை பிடிப்பதற்கு ஐ.பி.எஸ் அதிகாரியான கதாநாயகன் முயற்சிப்பதே கதை.

இந்த படம் கிட்டத்தட்ட 163 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது.

03.பீஸ்ட்

தளபதி விஜய் நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட்.

தீவிரவாதிகளால் சூழப்படும் சூப்பர் மார்க்கெட், அங்கு மாட்டிக்கொண்டு இருப்பவர்களில் ராணுவ வீரரான கதாநாயகனும் மாட்டிக்கொள்கிறார். அவர் அனைவரையும் காப்பாற்றுவதே படக்கதை

மொத்தம் 227 கோடிக்கு ஓடியுள்ளது பீஸ்ட்

02. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். கைதி படத்தின் அடுத்த பாகமாக விக்ரம் எடுக்கப்பட்டது.

போதை பொருள் கடத்து கும்பலை எதிர்த்து நிற்கும் ஏஜெண்ட் விக்ரம் மற்றும் அவரது அணியை வைத்து கதை செல்கிறது. கமல்ஹாசன் எதிர்பார்த்ததை விடவும் இந்த படம் நல்ல வசூல் தந்தது.

மொத்தமாக 420 கோடி வசூல் செய்தது விக்ரம்.

01.பொன்னியின் செல்வன்

இந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன். ராஜ ராஜ சோழன் குறித்து கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

சோழர்களை வீழ்த்துவதற்கு நடக்கும் சூழ்ச்சி. அதனை கண்டறிந்து சோழர்களிடம் சொல்ல பயணப்படும் வந்தியதேவன். ஆகிய விஷயங்களை கொண்டு இந்த படம் செல்கிறது.

கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

இந்த வருடம் ஹிட் அடித்த டாப் 10 தென்னிந்திய படங்கள்

01.ஆர்.ஆர்.ஆர்

தென்னிந்திய சினிமாவாக எடுக்கப்பட்டு உலக அளவில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். இயக்குனர் ராஜமெளலி இந்த படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது ஆர்.ஆர்.ஆர்

02.கே.ஜி.எஃப் 2

கன்னட சினிமாவில் இருந்து வந்து இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே.ஜி.எஃப் 2. நடிகர் யஷ் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இயக்குனர் பிரசாத் நீல் இந்த படத்தை இயக்கியிருந்தார். 1200 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை செய்தது கே.ஜி.எப் 2

03. விக்ரம்

வெகுநாட்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். தமிழில் அதிகப்பட்சமாக வசூலித்த படம் ரஜினி நடித்த 2.0 ஆகும். இந்த படம் 800 கோடி வசூலித்தது. இந்த படத்திற்கு பிறகு அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக விக்ரம் உள்ளது.

04.காந்தாரா

சிறு தெய்வ வழிப்பாட்டையும், மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் கதையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் காந்தாரா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றது. தமிழகத்திலும் வரவேற்பை பெற்றதால் பின்பு தமிழ் டப்பிங் செய்யப்பட்டு தமிழகத்திலும் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்திருந்தார்.

05.ராக்கெட்ரி

உண்மையை கதையை தழுவி மாதவன் அவரே இயக்கி நடித்த படம் ராக்கெட்ரி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய விஞ்ஞானியான நம்பி ராஜன் என்பவரின் உண்மைக்கதையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழில் ஒரு முக்கியமான படமாக ராக்கெட்ரி பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விடவும் இந்த படம் அதிக வரவேற்பை பெற்றது.

06.பொன்னியின் செல்வன்

தமிழகமே பல வருடங்களாக திரைப்படமாக பார்ப்பதற்கு காத்திருந்த ஒரு கதை பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. ராஜ ராஜ சோழன் காலத்தில் ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சூழ்ச்சியை கருவாக கொண்டு இந்த கதை செல்கிறது. இந்த வருடம் அனைத்து தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் என கூறலாம்

07.சீதா ராமம்

இந்த வருடம் வந்த படங்களில் காதல் படமாக வந்து அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் சீதா ராமம். அநாதையாக இராணுவத்தில் பணியாற்றி வரும் கதாநாயகன், அவரை கடிதம் மூலம் தொடர்புக்கொள்ளும் கதாநாயகி, பிறகு அதிலிருந்து செல்லும் அவர்களது காதல் கதை. என இந்த படம் சென்றது. சோகமான க்ளைமேக்ஸை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட படமாக சீதா ராமம் உள்ளது.

08.777 சார்லி

அனைத்து உயிரினங்கள் மீதும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்கிற உயரிய கருத்தை மையமாக கொண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் 777 சார்லி. அனாதையாக யாரோடும் பேசாமல் வாழ்ந்து வரும்  கதாநாயகன். அவனது வாழ்வில் திடீரென ஒரு நாய் வருகிறது. அது அவனது வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதே கதை. இந்திய அளவில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

09.கடைசி விவசாயி

வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் கூட கதையின் கரு ரீதியாக இந்த வருட டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக கடைசி விவசாயியை கூறலாம். ஒரு ஊரில் பல வருடங்களுக்கு பிறகு திருவிழா நடத்த ஏற்படாகிறது. திருவிழாவிற்கு நெல் யாராவது ஒருவர் விவசாயம் செய்து தர வேண்டும்.

அந்த சமயத்தில் ஊரில் கடைசி விவசாயியாக இருக்கும் முதியவர் அறுவடை வேலைகளை துவங்குகிறார். இதற்கிடையே அவருடைய வாழ்க்கை முறை, சுற்றியுள்ள மனிதர்கள் என பல விஷயங்களை அழகாக காட்டி செல்லும் கடைசி விவசாயி இந்த வருடத்தின் முக்கியமான திரைப்படமாகும்.

10.டாணாக்காரன்

காவலர்களை பற்றியும் பயிற்சி நேரத்தில் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றியும் விரிவாக பேசும் படம் டாணாக்காரன். இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு இது முக்கிய படமாக அமைந்தது என கூறலாம்.

காவலர்கள் அமைப்பு முறையில் உள்ள அதிகார வேட்கை அவர்களையே எப்படி பழி கொள்கிறது என்பதை புரியும்படி பேசிய திரைப்படம்.

காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தில் காமிக்ஸ் என்னும் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. காமிக்ஸ்கள் பலவும் கமர்சியல் திரைப்படங்களுக்கு இணையான கதைக்களத்தை கொண்டு நகர்பவை. இப்போதும் கூட தமிழ்நாட்டில் காமிக்ஸ் விரும்பிகள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை காமிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட பல இயக்குனர்கள், அந்த காமிக்ஸ் கதையையோ அல்லது அதில் ஒரு கதாபாத்திரத்தையோ தனது திரைப்படங்களில் வைப்பது உண்டு. அப்படி தமிழில் வந்த காமிக்ஸ் தொடர்பான சில திரைப்படங்களையும் அவை எந்த காமிக்ஸ் கதையில் இருந்து வந்தது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

வெற்றி விழா – XIII

13 என்கிற காமிக்ஸானது உலக அளவில் பிரபலமானது ஆகும். இந்த காமிக்ஸின் கதைப்படி 13 என கையில் பச்சை குத்திய ஒரு இளைஞன் முதல் காட்சியிலேயே கடற்கரையில் ஒதுங்குவான். அவனுக்கு அவன் யாரென்றே தெரியாது. அவனது பெயர் என்ன என்பது கூட தெரியாது. இந்நிலையில் அவனை கொல்ல சில மர்மமான ஆட்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களது கையிலும் கூட ஒரு எண் பச்சை குத்தியிருக்கும். அவன் தன்னை யார் என கண்டறிவதே கதையாக இருக்கும்.

இதே கதையை அடிப்படையாக கொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெற்றி விழா என்கிற திரைப்படம் வெளியானது.

ராட்சசன் 

ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனருக்கு காமிக்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. அவர் எடுத்த ராட்சசன் படத்திற்கு மார்ட்டின் மிஸ்டரி என்கிற காமிக்ஸ்க்கும் இடையே தொடர்பு உண்டு. மார்ட்டின் மிஸ்டரியில் ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் இருக்கும். தனது மகனின் இறப்பிற்காக பழி வாங்க நினைக்கும் அப்பா ஒருவர் வில்லனாக இருப்பார்.

ஆனால் இறுதியில் பார்க்கும்போது பையனே அப்பா வேடத்தில் அனைத்தையும் செய்திருப்பான். சிறு வயதிலேயே முதுமையாக தோற்றம் ஏற்படும் வியாதி ஒன்று அவனுக்கு இருந்திருக்கும். அதை வைத்து தன்னை தனது தந்தையாக வெளிப்படுத்தியிருப்பான்.

இந்த கதாபாத்திரத்தை போலவே ராட்சசன் திரைப்படத்தில் வில்லனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

சாஹோ, யோகன் அத்தியாயம் ஒன்று

லார்கோ வின்ச் என்கிற காமிக்ஸ் மிகவும் பிரபலமானது இதில் பிரபல பணக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்படுவார். அவருக்கு அடுத்து வாரிசு இல்லை என உலகமே நினைத்துக்கொண்டிருக்கும். எனவே அவரது சொத்துக்களை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் காத்திருக்கும். இந்நிலையில் லார்கோ வின்ச் என்கிற கதாபாத்திரம் அவரது வாரிசாக வந்து நிற்கும்.

இந்த கதையை தழுவி யோகன் அத்தியாயம் ஒன்று என்கிற படத்தை 2012 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்க திட்டமிட்டிருந்தார். இதில் விஜய் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் ஏனோ அந்த கதை படமாக்கப்படவில்லை. அதன் பிறகு பாகுபலி பிரபாஸ் நடித்து அதே கதையை சாஹோ என்கிற பெயரில் படமாக்கினர்.

இரும்புக்கை மாயாவி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் கூட காமிக்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி என்றொரு காமிக்ஸ் உண்டு. இதில் ஒரு கை மட்டும் இரும்பாக கொண்ட கதாநாயகன், அந்த கையால் மின்சாரத்தை தொட்டால் மறைந்துவிடுவான். மேலும் அந்த இரும்புக்கை மிகவும் வலிமையானதாக இருக்கும்.

இந்த கதாபாத்திரத்தை கொண்டு இரும்புக்கை மாயாவி என்கிற பெயரில் சூர்யாவை வைத்து ஒரு படமெடுக்க திட்டமிட்டிருந்தார் லோக்கி. ஆனால் அந்த படம் இப்போது வரை எடுக்கப்படவில்லை. ஆனால் அந்த கதாபாத்திரம் மீது லோகேஷ்க்கு இருந்த ஈர்ப்பு காரணமாக மாஸ்டர் படத்தில் இரும்புக்கை மாயாவியின் பலத்தை பவானி கொடுத்திருந்தார் லோக்கி.

இவை அனைத்தும் காமிக்ஸை அடிப்படையாக கொண்டு தமிழில் வந்த திரைப்படங்களாக உள்ளன.

உலக அளவில் வசூலை குவித்த டாப் 10 ஹாலிவுட் திரைப்படங்கள்

உலக அளவில் எப்போதும் திரைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. உலகம் முழுவதும் அதிகமான வளர்ச்சியைக்கண்ட ஒரு துறையாக திரைத்துறை உள்ளது. சில திரைப்படங்கள் உலக அளவில் வெளியாகி வசூல் சாதனை செய்யும் அளவில் திரைத்துறை வளர்ந்துள்ளது.

அந்த வகையில் ஹாலிவுட்டில் அதிகமான படங்கள் உலக அளவில் வெளியாகி வசூல் சாதனைகள் செய்துள்ளன. அப்படியான டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

10.அவெஞ்சர்ஸ்

உலக அளவில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் 10 வது இடத்தில் இருக்கும் படம் அவெஞ்சர்ஸ். உலகம் முழுவதும் தனக்கென சூப்பர் ஹீரோ ரசிகர்களை கொண்ட மார்வல் நிறுவனம் தயாரித்த முக்கியமான திரைப்படம்.

பல சக்திகளை கொண்ட சூப்பர் ஹீரோக்கள் உலகை காக்க ஒன்றிணைவதுதான் கதை என்றாலும் கூட படத்தின் சுவாரஸ்யம் காரணமாக இது மக்களிடையே பிரபலமானது. மேலும் இதில் வரும் தோர், அயர்ன் மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு ஏற்கனவே தனி தனியாக திரைப்படம் எடுத்துவிட்டு பிறகு அவர்களை அவெஞ்சர்ஸில் ஒன்றிணைத்தது மார்வெல் நிறுவனம்.

2012 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 1,51,51,00,211 அமெரிக்க டாலர்கள் அதாவது 150 கோடி அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனை செய்தது.

09.ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7

தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களில் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் திரைப்படமும் அடங்கும். வின் டீசல் முக்கிய கதாபாத்திரமாக நடித்த இந்த படம் கார் ரேசை முக்கிய கருவாக கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில் கார் ரேஷ் திரைப்படமாக வந்துக்கொண்டிருந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போக போக காரை கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவது போல கதையில் மாற்றம் கண்டது. பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஐந்தாம் பாகத்தில் இருந்து அது மக்களிடையே பிரபலமடைய துவங்கியது.

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 151,68,81,526 அமெரிக்க டாலர்கள் வசூலித்தது.

08.த லயன் கிங்

90ஸ் கிட்ஸ்கள் காலத்தில் கார்ட்டூனாக எடுத்த திரைப்படங்களை தற்சமயம் லைவ் ஆக்‌ஷன் திரைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வருகிறது வால்ட் டிஸ்னி நிறுவனம், சிண்ட்ரெல்லா, அலாவுதின் என அந்த வரிசையில் வந்த மற்றொரு திரைப்படம் த லயன் கிங்.

ஆப்பிரிக்க காட்டில் ராஜாவாக இருக்கும் சிங்கம் முஃபாசா, அதன் பிள்ளை சிம்பா. முஃபாசாவிற்கு பிறகு அதன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் முஃபாசாவின் சகோதரர் என மக்களிடையே நிலவும் அதிகார ஆசையை விலங்குகளோடு ஒப்பிட்டு காட்டப்பட்ட திரைப்படம் இது. குழந்தைகளுக்கான படம் என்பதாலும், விலங்குகள் அனைத்தும் லைவ் ஆக்‌ஷனாக வருவதாலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் உலக அளவில் 1,654,367,452  அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

07.ஜூராசிக் வேல்ட்

90ஸ் ஹாலிவுட் விரும்பிகள் எவரை கேட்டாலும் அவர்களுக்கு ஜுராசிக் பார்க் என்ற திரைப்படத்தை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஹாலிவுட் இயக்குனரான ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் முக்கியமான படைப்பான இந்த திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

மனிதர்கள் வாழ்வதற்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்த டைனோசர்களை மனிதர்கள் மறு உருவாக்கம் செய்ய பிறகு அதுவே அவர்களுக்கு எப்படி பிரச்சனையாக மாறுகிறது என்பதே கதை. அதன் தொடர்ச்சியாக பிறகு வெளிவந்த திரைப்படம்தான் ஜூராசிக் வேல்ட். செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராகும் டைனோசர்கள், அதை தடுக்க நினைக்கும் ஹீரோ என இதன் கதை செல்கிறது.

இதுவரை 2 பாகங்கள் வந்த நிலையில் தற்சமயம் ஜூராசிக் வேல்ட் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வர இருக்கிறது.  இதன் முதல் பாகம் 1,669,979,967 அமெரிக்க டாலர்கள் வசூலித்து 7 ஆவது உள்ளது.

06.ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் திரைப்படம் முதன் முதலில் 2002 இல் வந்த காலக்கட்டம் முதலே அதற்கு தனியாக ஒரு ரசிக பட்டாளம் உருவாகிவிட்டது, டாபிக்கு பிறகு ஆண்ட்ரே கார்பீல்டு, டாம் ஹோலண்ட் என ஸ்பைடர் மேன்கள் மாறியபோது ஒவ்வொரு ஸ்பைடர் மேனுக்கும் தனி தனியான ரசிக வட்டாரங்கள் உருவாகின.

இந்த நிலையில் இந்த 3 ஸ்பைடர் மேன்களுக்குமான திரைப்படமாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. சில காரணங்களால் மல்டி ரியாலிட்டி ஓபன் ஆக, அதனால் பல ரியாலிட்டியில் இருந்த வில்லன்களும் ஸ்பைடர்மேன்களும் தற்போது டாம் ஹோலண்ட் இருக்கும் ரியாலிட்டிக்கு வருகின்றனர். பிறகு இந்த பிரச்சனையை டாம் ஹோலண்ட் எப்படி தடுக்கிறார் என்பதே கதை.

உலக அளவில் இந்த படம் 1,888,495,754 அமெரிக்க டாலர்களை வசூலித்து, வசூல் சாதனையில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

05.அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாகும். அந்த ஒரு படத்திற்காக அதற்கு முன்பு 10 வருடங்களாக 20க்கும் அதிகமான திரைப்படங்களை மார்வெல் எடுத்தது. அந்த படங்கள் அனைத்தையும் பார்த்தால்தான் நம்மால் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

அவெஞ்சர்ஸ் என்னும் பூமியின் சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோ குழு. அவர்களை விட சக்திசாலியான தனோஸ் என்னும் வில்லன். உலக மக்கள் தொகையில் பாதியை அழிப்பது மூலம் உலகில் பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என நம்பும் தனோஸ், இன்பினிட்டி கற்களை கொண்டு அதை சாதிக்க நினைக்கிறான். ஆனால் அவற்றில் இரண்டு இன்பினிட்டி கற்கள் அவெஞ்சர்ஸிடம் இருக்க, தனோஸ்க்கும் அவெஞ்சர்ஸ்க்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த திரைப்படம் 2,048,3569,754 அமெரிக்க டாலர்களுக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இதன் வசூலை முறியடித்தது.

04.ஸ்டார் வார்ஸ் எபிசோட் VII – த ஃபோர்ஸ் அவாக்னெஸ்

1977 இல் வெளியாக துவங்கி இப்போது வரை ஹாலிவுட்டில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் திரைப்படம்தான் ஸ்டார் வார்ஸ் சீரிஸ். விண்வெளியில் நன்மைக்காக போராடும் ஜடாய் என்னும் வீரர்களை முக்கிய கருவாக கொண்டு கதை நகர்கிறது.

விண்வெளியில் நீதியை நிலைநாட்ட ஜடாய்களுக்கு ஃபோர்ஸ் எனப்படும் ஆற்றல் இருக்கும். பல தலைமுறைகள் கழித்து ஜடாய்கள் மற்றும் ஆற்றல் இரண்டுமே இல்லாமல் போனதால் தீயவர்கள் அதிகமாகி இருப்பார்கள். இந்த நிலையில் மீண்டும் ஜடாய் சக்தி ரே என்னும் பெண்ணுக்கு வர அவள் எதிரிகளுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளே ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவாக்னெஸ்.

இதன் மொத்த வசூல் 2,064,615,817 அமெரிக்க டாலர்கள் ஆகும்

03.டைட்டானிக்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் சிறந்த படைப்புகளில் ஒன்று டைட்டானிக். 1912 ஆம் ஆண்டு அதுவரை யாரும் கண்டிராத அளவில் மிகப்பெரிய பயணிகள் கப்பல் செய்யப்பட்டது. அதன் பெயர்தான் டைட்டானிக். ஆனால் கடலில் முதல் முறையாக செலுத்தப்பட்ட போதே அந்த கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த பயணிகள் இறந்தனர்.

இந்த உண்மை நிகழ்வை கருவாக கொண்டு அந்த கப்பல் விபத்திற்கு நடுவே ஒரு காதலை உருவாக்கி தனது படத்தை வெளியிட்டார் ஜேம்ஸ் கேமரூன். இதற்காக ஏரியில் ஒரு கப்பலை நிஜமாக மூழ்கடித்து படத்தை எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 1997 இல் வெளியான இந்த படத்தின் மொத்த வசூல் 2,207,986,545 டாலர்கள் ஆகும்.

02.அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் தொடர்ச்சியான எண்ட் கேம் அதிகமான வசூலை பிடிக்க முக்கிய காரணம் அதன் திரைக்கதையே ஆகும்.

இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில் சூப்பர் ஹீரோக்கள் பலரும் கோடிக்கணக்கான மனிதர்களும் தனோஸ் என்னும் வில்லனால் அழிந்துவிட, அழிந்தவர்களை மீட்பதற்காக உயிரோடு இருப்பவர்கள் செய்யும் முயற்சியே எண்ட் கேம்.

2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இந்த திரைப்படம் 2,797,800,564 டாலர்கள் வசூலித்து உலக அளவில் வசூல் சாதனை செய்த படங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

01.அவதார்

2009 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் காமரூனின் கை வண்ணத்தில் வெளியான அவதார் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற படமாகும். கிட்டத்தட்ட வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இன்னும் அவதாரின் வசூல் சாதனையை வேறு எந்த திரைப்படங்களாலும் முறியடிக்க முடியவில்லை.

2019ஆம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இதன் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்தது. ஆனால் கொரோனா காலத்தில் திரைப்படங்கள் இல்லாததால் அவதார் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் அதிக மக்களால் பார்க்கப்பட்டதால் அவதார் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

இதன் மொத்த வசூல் 2,845,899,541 அமெரிக்க டாலர்கள் ஆகும். அடுத்து டிசம்பரில் வர இருக்கும் அவதார் 2 திரைப்படம் இதன் வசூலை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர் ஹாலிவுட்ல இருந்திருந்தா எங்கயோ போயிருப்பார்! –  எம்.எஸ் பாஸ்கர் என்னும் கலைஞனின் கதை!

தமிழ்சினிமாவில் ரசிகர்களுக்கான காலம் துவங்கியது முதல் திறமையான பலருக்கு அந்த திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது என சொல்லலாம். ஆண்டாண்டு காலமாக சினிமாவில் இருந்தும், சிறந்த நடிகர்களாக இருந்தும் அவர்களுக்கான அங்கீகாரத்தை அந்த துறை அவர்களுக்கு அளிக்காமல் இருந்திருக்கும்.

நடிகர் நாசர், டெல்லி கணேஷ், சார்லி என நீளும் இந்த வரிசையில் பட்டாபி பாஸ்கர் எனப்படும் எம்.எஸ் பாஸ்கர் முக்கியமானவர்.

சுருக்க வரலாறு

பெயர்: எம்.எஸ் பாஸ்கர்

நிஜ பெயர்: முத்துப்பாண்டி சுந்தரம் பாஸ்கர்

பிறந்த நாள்: 19.01.1952

வயது: 66

தந்தை பெயர்: சோமு

தாய் பெயர்: சத்யபாமா

சொந்த ஊர்: திருவாரூர், தமிழ்நாடு

ஆரம்ப வாழ்க்கை

முத்துப்பாண்டி சுந்தரம் பாஸ்கர் என்ற பெயரை கொண்ட இவர், பட்டாபி பாஸ்கர் என்றும் எம்.எஸ் பாஸ்கர் என்றும் திரை துறையில் பரவலாக அழைக்கப்படுகிறார். ஆக சிறந்த நடிகனுக்கு, கலைஞனுக்கு அவனுடைய கலைக்கான வெகுமதியை அந்த துறை அளித்தே ஆக வேண்டும். அந்த வகையில் எம்.எஸ் பாஸ்கர் தனக்கான அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்றாரா? என்பது கேள்விக்குறியான விஷயமே.

திரைப்படத்தில் நுழைவதற்கு வெகு காலங்கள் முன்பே நாடக துறையில் பல்வேறு நடிப்புகளை காட்டி கொண்டிருந்தவர் எம்.எஸ் பாஸ்கர். முதன் முதலாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து முதன் முதலாக இவர் நடித்த படம் 1987 ஆம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி என்கிற திரைப்படமாகும். அதன் பிறகு பல படங்களில் அவரது தனிப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்திய போதும் அவர் துணை கதாபாத்திரமாகவே மீண்டும் மீண்டும் நடித்து வந்தார்.

அடையாளப்படுத்துதல்

அதன்பிறகு தனது நடிப்பின் வழியே தன்னை அடையாளப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கினார் எம்.எஸ் பாஸ்கர். கண்ணத்தில் முத்தமிட்டால், தமிழன், கோட்டை மாரியம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவரை தனித்து காண்பித்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா.

எங்கள் அண்ணா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம்தான் எம்.எஸ் பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. ஒரு காட்சியில் வடிவேலுக்கும், பாண்டியராஜ்க்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருக்கும்போது இடையில் வரும் கதாபாத்திரமாக எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் வரும்.

அதில் ஒரு நிஜ குடிக்காரனை போலவே நடித்த எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பானது திரைப்படம் வெளியான பிறகு அதிகமாக பேசப்பட்டது. அதுவரை பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் அதிகமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் பெரிய ஹீரோக்களின் பார்வைகளில் பட துவங்கினார் எம்.எஸ் பாஸ்கர்.

மேலும் 2000 ஆம் ஆண்டு சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் அவர் நடித்த பட்டாபி என்கிற கதாபாத்திரம் மக்களிடையே வெகுவாக பிரபலமடைந்து அன்று முதல் பட்டாபி பாஸ்கர் என்ற பெயரை பெற்றார்.

வளர்ச்சி

எங்கள் அண்ணாவிற்கு பிறகு பிரபலமான ஹீரோக்கள் படத்தில் எம்.எஸ் பாஸ்கருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவருக்கு அதில் சிறிய சிறிய துணை கதாபாத்திரங்களே கிடைத்தன. ஒரு கதாநாயகனுக்கு மாஸ் காட்டுவதில் பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனில்  படம் முழுக்க அவருக்கு அதற்கு ஏகப்பட்ட வாய்ப்பு உண்டு, ஆனால் ஒரு துணை கதாபாத்திரத்திற்கு தன்னை மக்களிடத்தில் பதிய வைப்பதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவு.

படத்தில் அந்த கதாபாத்திரம் 5 நிமிடம் வந்தால் கூட அந்த 5 நிமிடத்தை மக்கள் மறக்காத வண்ணம் நடித்தால்தான் அவர்களுக்கான அங்கீகாரத்தை மக்களிடையே பெற முடியும். அதை சர்வ சாதரணமாக செய்தார் எம்.எஸ் பாஸ்கர்.

பெரிய படங்களில் சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அதன் மூலம் மக்களிடையே தன்னை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு அந்த 5 நிமிடம் போதுமானதாக இருந்தது. 2004க்கிற்கு பிறகு வெளியான கஜேந்திரா, போஸ் (வெடிமுத்து), அட்டகாசம் (பாலியல் மருத்துவர்), திருப்பாச்சி (தரகர்), சிவகாசி (வக்கீல் வெங்கி) என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தால் கூட அதில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தனது பெயர் எம்.எஸ் பாஸ்கர் என்று மக்களிடையே அடையாளப்படுத்தினார் இந்த நடிகர்.

இவரின் நடிப்பு திறமையை கண்ட இயக்குனர் பேரரசு அவரது திரைப்படமான திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி போன்ற படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பளித்து வந்தார். அதன் பின் அஞ்சாதே, சிவாஜி, அழகிய தமிழ் மகன், சந்தோஷ் சுப்பிரமணியம், அறை எண் 305 இல் கடவுள், குசேலன், தசாவதாரம் என தமிழின் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கூட எம்.எஸ் பாஸ்கர் நடித்தார்.

இவர் நடித்த படங்களில் மொழி, பயணம் போன்ற திரைப்படங்கள் எம்.எஸ் பாஸ்கரை அடுத்த நிலைக்கு கொண்டு போன படங்கள். அதுவரை எம்.எஸ் பாஸ்கரை திரை துறை ஒரு காமெடி நடிகனாக மட்டுமே பார்த்திருந்த போது எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தன்னால் நடிக்க முடியும் என்பதை வெளிக்காட்டிய விஷயமாக இந்த திரைப்படங்கள் அமைந்தன.

டர்னிங் பாயிண்ட்

பல படங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு விகரம் பிரபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த அரிமா நம்பி திரைப்படம் எம்.எஸ் பாஸ்கரின் வாழ்க்கையில் முக்கியமான படமாகும். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம். அதாவது அந்த கதாபாத்திரம் இல்லாமல் படத்தை கொண்டு செல்ல முடியாது. அப்படி ஒரு நேர்மையான போலீஸ் கதாபாத்திரமாக நடித்த எம்.எஸ் பாஸ்கர் அதில் வெளிப்படுத்திய நடிப்பின் மூலம் மிகவும் பேசப்பட்டார்.

பிறகு 2017 இல் கதாநாயகனுக்கு அடுத்தப்படியான, அதாவது படத்தின் இரண்டாவது ஹீரோவாக எம்.எஸ் பாஸ்கர் நடித்த படம் எட்டு தோட்டாக்கள். இதுவரை தமிழ் சினிமா காணாத, சுத்தமாக சிரிக்கவே தெரியாத ஒரு சீரியஸான கதாபாத்திரமாக அந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர் களம் இறங்கினார். அந்த படம் வெளியான பிறகு ஹீரோவை விடவும் எம்.எஸ் பாஸ்கர் பற்றியே பலரும் பேசிக்கொண்டிருந்தனர். இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான சிமா விருதுகளை இவர் பெற்றார்.

அதன் பிறகும் கூட முக்கியமான கதாபாத்திரம் எதுவும் பெரிதாக அவருக்கு கிடைக்கவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் தற்சமயம் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பை காட்டியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

டப்பிங் ஆர்டிஸ்ட்

எம்.எஸ் பாஸ்கரை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் அவர் ஒரு டப்பிங் கலைஞரும் கூட, ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேனில் ஜோனா ஜேம்ஸன் என்ற கதாபாத்திரம், ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் வரும் வக்கீல் என பல கதாபாத்திரங்களுக்கு இவர் தமிழ் டப்பிங் பேசியுள்ளார்.

ஆனால் இவரை சிறந்த டப்பிங் கலைஞர் என்பதை மெய்பித்த படம் தமிழில் வந்த காமராஜர் திரைப்படம் ஆகும். அந்த படத்தில் காமராஜர் கதாபாத்திரத்திற்கு எம்.எஸ் பாஸ்கர் தனது குரலையே மாற்றி முழுக்க முழுக்க விருதுநகர் பாஷையிலேயே பேசி இருப்பார். காமராஜரே பேசியது போல நம்மை உணர வைக்கும் உச்சரிப்பு. இது காமராஜர் படத்தில் மட்டுமின்றி எம்.எஸ் பாஸ்கரின் பல படங்களிலும் காணக்கூடிய முக்கியமான விஷயமாகும். எந்த ஒரு ஊர் பாஷையையும் அந்த ஊரில் பிறந்தவர் போலவே பேசக்கூடியவர் எம்.எஸ் பாஸ்கர்.

விருதுகள்

சிறந்த துணை கதாபாத்திரம் – சீமா

ஒரு சிறந்த நடிகர் 40 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருந்தும் ஒரே ஒரு விருதை மட்டும் பெற்று எந்த ஒரு பெரிய அங்கீகாரத்தை பெறாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இப்போது எம்.எஸ் பாஸ்கருக்கு 66 வயதாகிறது. சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் இவருக்கு கிடைக்கவில்லை.

டாணாக்காரன் திரைப்படத்தில் பாஸ்கர் ஒரு போலீஸ் கதாபாத்திரமாக நடித்திருப்பார். அதில் பல வருடங்களாக திறமையான போலீஸாக அந்த கதாபாத்திரம் இருக்கும். தன்னை விட மேல் அதிகாரியாக இருப்பவருக்கே அந்த கதாபாத்திரம்தான் பயிற்சி கொடுத்திருக்கும். ஆனாலும் துறை சார்ந்த அரசியல் காரணமாக அந்த போலீஸ் கான்ஸ்டபிளாகவே இருப்பார்.

இந்த கதாபாத்திரம் எம்.எஸ் பாஸ்கரின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போகும் என்றே கூறலாம்.

தளபதி மாதிரி லவ் பண்ணவும் முடியாது! – விஜய்யின் 5 எவர்க்ரீன் காதல் படங்கள்!

தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டார் அங்கீகாரத்தில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தளபதி என செல்லமான ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, மலேசியா என பகுதிகளிலும் பெரும் ரசிக கூட்டமே உள்ளது.

2000களின் ஆரம்பம் முதல் காதல் படங்களாக நடித்து வந்த விஜய் “திருமலை” படத்திற்கு பிறகு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பல ஹிட்களை கொடுத்து வருகிறார். இடையே சச்சின், காவலன் போன்ற காதல் படங்களை அவர் நடித்திருந்தாலும் அவரது எவர்க்ரீன் காதல் படங்கள் 1990களில் வந்த படங்களாக உள்ளன.

அப்படியாக விஜய் காதலில் கலக்கிய எவர்க்ரீன் காதல் படங்கள் சிலவற்றை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

5. பூவே உனக்காக (1996)

நடிகர்கள்: விஜய், சார்லி, சங்கீதா, நாகேஷ், நம்பியார்

இயக்கம் : விக்ரமன்

இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்

1996ல் வெளியான இந்த படம் விஜய் திரைப்பட வாழ்வில் ஒரு திருப்புமுனை படம் என்று சொல்லலாம். அப்போதைய ஹிட் இயக்குனரான விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமும் இதுதான்.

காதலியின் காதலை சேர்த்து வைப்பதற்காக போராடும் காதலனாக விஜய் நடிப்பில் நம்மை உருக வைத்திருப்பார். வெள்ளையங்கிரி, சார்லியுடன் சேர்ந்து செய்யும் காமெடியில் நம்மை விழுந்து சிரிக்க வைக்கும் அதே விஜய், க்ளைமேக்ஸில் “ஒரு செடியில் ஒரு பூ” டயலாக் மூலம் நம்மை அழவும் வைப்பார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த காலத்தில் இந்த படத்தின் பாட்டு கேசட் கிடைக்காமல் பலர் தேடி அலைந்தார்களாம். சரியாக காதலர் தினத்திற்கு அடுத்த நாள் பிப்ரவரி 15ல் வெளியாகி காதலர்களுக்கு விருந்து படைத்தது இந்த படம்.

4. துள்ளாத மனமும் துள்ளும் (1999)

நடிகர்கள் : விஜய், சிம்ரன், மணிவண்ணன், பாரி வெங்கட் (டவுசர் பாண்டி)

இயக்கம் : எழில்

இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்

விஜய்யின் பல்வேறு காதல் ஹிட் படங்களுக்கு பிறகு வெளியானாலும் விஜய் படங்களில் முக்கியமான இடத்தை பெற்ற படம்.

இந்த படத்திற்கு முன்னாள் விஜய் – சிம்ரன் சேர்ந்து நடித்த ஒன்ஸ் மோர் செம ஹிட். அதற்கு பிறகு மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த இந்த படம் அதை விட பெரும் ஹிட் அடித்தது.

பாடகனாக இருக்கும் குட்டியை ருக்கு காதலிக்கிறாள். ஆனால் அவள் அவனை பார்க்கும்போதெல்லாம் சந்தர்ப்பவசமாக அவர் ஒரு ரௌடி என்ற பிம்பம் உருவாகி விடுகிறது. இடையே அவளுக்கு கண்பார்வை போய்விட அவளுக்கு கண்பார்வை கிடைக்க போராடுகிறான் குட்டி. தான் ரௌடி என நினைத்தவன்தான் தான் விரும்பும் குட்டி என தெரியாமலே ருக்கு இருக்கிறாள்.

கடைசியில் குட்டியை அவள் எப்படி சேர்கிறாள் என்பதுதான் கதை. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஒவ்வொரு பாடலும் ஹிட். அதுவும் அந்த இன்னிசை பாடிவரும் பாடலை பாடாதவர்கள் அந்த தலைமுறையிலேயே இல்லை என்ற அளவுக்கு ஹிட்.

3. காதலுக்கு மரியாதை (1997)

நடிகர்கள் : விஜய், ஷாலினி, சிவக்குமார், தாமு

இயக்கம் : பாசில்

இசை: இளையராஜா

தயாரிப்பு : முருகன் சினி ஆர்ட்ஸ்

விஜய் – ஷாலினி நடிப்பில் வெளியான முதல் படம் இது. மலையாளத்தில் பாசில் இயக்கி வெளியாகி ஹிட் அடித்த படமான அனியாதிப்ராவு படத்தின் தமிழ் ரீமேக்தான் காதலுக்கு மரியாதை.

முந்தைய காதல் படங்களில் நகைச்சுவை தன்மையுடன் காதலும் செய்து வந்த விஜய். இந்த படத்தில் சீரியஸான டீனேஜ் காதலனாக கலக்கி இருப்பார்.

ஜீவா என்ற இந்து பையனுக்கும், மினி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல். அதற்கு மதரீதியாக எழும் எதிப்புகள்தான் கதை. முதலில் வீட்டை விட்டு வெளியேறும் இரண்டு பேரும் பின்னர் வீட்டார் சம்மதத்துடன் எப்படி சேர்ந்தார்கள் என்பது சுவாரஸ்யமான கதை.

வழக்கமாகவே காதல் பாடல்களை தங்கம் இழைப்பது போல இழைக்கும் இளையராஜா இந்த படத்தில் அனைத்து பாடல்களில் புதிய உச்சம் தொட்டிருப்பார். அப்போதைய டீனேஜ் இளசுகளுக்கு ட்ரெண்ட் செட்டிங் காதல் படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை

விஜய் நடிப்பில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் இது

2. நினைத்தேன் வந்தாய் (1998)

நடிகர்கள்: விஜய், தேவயானி, ரம்பா, வினு சக்கரவர்த்தி, மணிவண்ணன்

இயக்கம் : செல்வபாரதி

இசை : தேவா

தயாரிப்பு : ராகவேந்திரா மூவி கார்ப்பரேஷன்

இதுவும் ஒரு ரீமேக் படம்தான். தெலுங்கில் ராகவேந்திர ராவ் இயக்கி வெளியாகி ஹிட் அடித்த பெல்லி சண்டதி படத்தின் ரீமேக்தான் நினைத்தேன் வந்தாய்.

விஜய்க்கு முதலாவதாக ஹிட் அடித்த முக்கோண காதல் கதை என்றும் இதை சொல்லலாம். தான் கனவில் கண்ட பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறான் கோகுல கிருஷ்ணன். ஆனால் வீட்டார் கட்டாயத்தால் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்.

பிறகுதான் தன் கனவு கன்னி ஸ்வப்னாவை சந்திக்கிறார். காயத்ரியும், ஸ்வப்னாவும் அக்கா, தங்கை என தெரிய வரும்போது யாரோடு கோகுல கிருஷ்ணன் சேர்கிறார் என்பது க்ளைமேக்ஸ்.

விஜய்யின் காதல் படங்களுக்கு பெரும் பலமே இசைதான். இந்த படத்திலும் அந்த பங்கை தேவா தேவைக்கு மிஞ்சியே பூர்த்தி செய்திருந்தார்.

1. குஷி (2000)

நடிகர்கள் : விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக்,

இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா

இசை : தேவா

தயாரிப்பு : ஸ்ரீ சூர்யா மூவிஸ்

இதற்கு முன்னாள் வந்த விஜய் காதல் படங்களில் எல்லாம் ஹீரோயினை உருகி உருகி காதலிப்பவராகவும், ஹீரோயினுக்காக பல தியாகங்களை செய்பவருமாகவே விஜய் இருந்தார். அதுவே ஒரு டெம்ப்ளேட் ஆகி போனது.

முதன்முறையாக அந்த டெம்ப்ளேட்டை உடைத்து விஜய்யிடமிருந்து வேறு ஒரு நடிப்பை வெளியே கொண்டு வந்து மிரள வைத்த படம். முதன்முறையாக காதலர்கள் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையை வைத்து ஹிட் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா.

விஜய் – ஜோதிகா சேர்ந்து நடித்த முதல் படமும் இதுதான். மெட்ராஸ் காலேஜில் படிக்கும் சிவாவும், ஜென்னி என்னும் செல்வியும் முதலில் நண்பர்களாகிறார்கள். பின்னர் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்னரே சில இடுப்பு பிரச்சினையாலும், அதை தொடர்ந்து ஏற்படும் ஈகோ பிரச்சினைகளாலும் இருவருக்கும் சண்டை தொடர்கிறது.

ஒரு சமயத்திற்கு மேல் ஒருவர் மேல் ஒருவருக்கு உள்ள காதல் புரிய வரும் நிலையில் அவர்கள் ஈகோவை மறந்து எப்படி சேர்ந்தார்கள் என்பதுதான் கதை.

அதுவரை காதல் மேல் இருந்த தியாக, புனித பிம்பத்தை எல்லாம் உடைத்து இளசுகள் நடுவே காதலில் ஏற்படும் ஈகோவை வைத்து காதலை ரியாலிட்டியுடன் காட்டியதால் இளைஞர்களிடையே பெரும் வெற்றி பெற்றது இந்த படம்.

எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்க்கை வரலாறு

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்ற எஸ்.பி.பியின் பாடலை பலரும் கேட்டிருப்போம். அதற்கு ஒரு வாழும் உதாரணாமாகவே வாழந்த எஸ்.பிபியின் வாழ்க்கை வரலாற்றை இப்போது பார்க்கலாம்.

சுருக்க வரலாறு

பெயர்: ஶ்ரீபதி பண்டிதராத்யுலா பாலசுப்பிரமணியம்

பிறந்த தேதி: 4 ஜூன் 1946

பிறந்த இடம்: கெனட்டம்மபெட்டா, நெல்லூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்

பிரபலம்: நடிகர், பாடகர், இசை கலைஞர். டப்பிங் கலைஞர்.

தேசியம்: இந்தியன்

பாலினம்: ஆண்

வயது: 74

குடும்பம்

குழந்தை: பல்லவி மற்றும் எஸ்.பி.பி சரண்

இந்தியாவின் நிகரற்ற பாடகர்களில் முக்கியமானவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். தென்னிந்தியாவில் இசை ரசிகராக இருக்கும் எவருக்கும் அதிகமாக தெரிந்திருக்கும் ஒரு பெயர்தான் எஸ்.பி.பி

இவரது முழு பெயர் ஶ்ரீபதி பண்டிதராத்யுலா பாலசுப்பிரமணியம் ஆகும். ஆனால் நாட்டிலுள்ள எண்ணற்ற ரசிகர்களால் இவர் எஸ்.பி.பி என்றே அடையாளம் காணப்படுகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தி, துலு, ஒரியா, படாகா, சமஸ்கிருதம், ஆங்கிலம், பெங்காலி, மாரத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

பாலு திரைப்படங்கள், தனியார் ஆல்பங்கள், டி.வீ சீரியல்கள் என 40,000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

ஆரம்பக்கால வாழ்க்கை

எஸ்.பி.பி 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று ஆந்திர பிரதேசத்தில் நெல்லூருக்கு அருகிலுல்ல கெனட்டம்மபெட்டா என்னும் ஊரில் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

எஸ்.பி.பிக்கு உடன் பிறந்தோர் இரண்டு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருந்தனர். எஸ்.பி.பி அவர்களது வீட்டில் இரண்டாவது குழந்தையாக இருந்தார். இவரது தந்தை எஸ்.பி.சம்ப மூர்த்தி ஒரு இசை கலைஞராக இருந்தார். மற்றும் அவரது சகோதரி எஸ்.பி. சைலஜா டோலிவுட்டில் முன்னாள் நடிகை மற்றும் பாடகியாக இருந்தார். எஸ்.பி.பிக்கு பல்லவி மற்றும் எஸ்.பி.பி சரன் என்ற பிள்ளைகள் உள்ளனர்.

பாடல் மற்றும் கல்வி

எஸ்.பி.பி சிறு வயது முதலே பாடுவதை ஒரு பொழுது போக்காக செய்து வந்தார். தனது ஆரம்பக்கால வாழ்க்கை முதலே அவருக்கு இசை மீது தீராத ஆர்வம் இருந்தது. அதன் பிறகு அவர் இசை குறியீடுகளை கற்றுக்கொண்டார். பின்பு புல்லாங்குழல் ஹார்மோனியம் போன்ற இசை கருவிகளையும் வாசிக்க கற்றுக்கொண்டார். அவர் சிறுவயதில் டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் தனது ஆரம்ப கால கல்வியை இடை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பாலு வளர்ந்த பிறகு அவர் பொறியியல் படிக்க வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். ஆனால் பொறியியல் படிக்கும்போதும் பாலு இசையின் மீதே ஆர்வமாக இருந்தார். கல்லூரி பாடல் நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் பல பாடல் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றார்.

இசை வாழ்க்கை

1964 ஆம் ஆண்டு மெட்ராஸை தளமாக கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த சிறு வயதுடைய பாடகர்களுக்கான இசை போட்டியில் இவர் முதல் பரிசை வென்றார். அது அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. இசையமைப்பாளரான எஸ்.பி.கோண்டபாணி என்பவர் பாலுவை தனது குழுவில் சேர்த்துக்கொண்டார்.

பின்னர் அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் வேலை செய்தார்.

1960 மற்றும் 70கள்

. எஸ்.பி.பி ஒரு முழு சினிமா பாடகராக மாறுவதற்கு முன்பு அவர் இசை குழுவின் தலைவராக இருந்தார். பாலசுப்பிரமணியம் 1966 டிசம்பர் 15 அன்று ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மரியதா ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன் முதலில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

அதன் பிறகு 1966 இல் கன்னட நகைச்சுவை நடிகரான டி.ஆர் நரசிம்மராஜூ நடித்த நக்கரே அடே ஸ்வர்கா என்ற படத்தில் பாடினார். இவர் 1969 ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்கிற படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி” என்னும் பாடலை பாடினார்.

அதன் எம்.ஜி.ஆரின் அடிமை பெண் திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்னும் பாடலை பாடினார். அதன் பிறகு அவர் மலையாளத்திலும் அறிமுகமானார். மலையாளத்தில் ஜி.தேவராஜன் நடித்த கடல்பலம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

எந்த ஒரு பாடகருக்கும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடுவது சிரமமான காரியமாகும். ஆனால் அதிக பாடல்களை பாடுவதில் மிகப்பெரும் திறமையாளராக பாலசுப்பிரமணியம் இருக்கிறார். 1981 பிப்ரவரி 8 ஆம் தேதியன்று காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் அவர் அதிகப்பட்சமான பாடல்களை பாடினார்.

அப்போது அவர் பெங்குளூரில் இருந்தார். அவர் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக கன்னடத்தில் 21 பாடல்களையும், தமிழில் 19 பாடல்களையும் இந்தியில் 16 பாடல்களையும் பாடியுள்ளார். அவரது வாழ்நாளில் இது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவர் சினிமாவில் இருந்த சம காலத்தில் இந்தியாவின் மிக முக்கிய பாடகர்களில் ஒருவராக எஸ்.பி.பி இருந்தார்.

இவர் 1970 காலக்கட்டத்தில் தமிழில் புகழ்பெற்ற பிரபலங்களான எம்.எஸ். விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் பணியாற்றினார். பி.சுஷிலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி போன்ற பிரபல பின்னணி பாடகிகளுடன் டூயட் பாடல்களில் பணிப்புரிந்தார்.

இளையராஜா சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பாலசுப்பிரமணியமும் இளையராஜாவும் நட்பில் இருந்தனர்.

1980 களில் சர்வேதேச அங்கீகாரம்

1980 களில் பாலசுப்ரமணியம் சங்கராபரணம் திரைப்படத்தில் பாடிய பாடல் மூலம் அவர் சர்வேதேச அளவில் பேசப்பட்டார். இந்த திரைப்படம் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும். கே.விஸ்வநாத் இயக்கி கே.வி மகாதேவன் இசையமைத்த இந்த படம் தெலுங்கு சினிமாவில் கருநாடக இசையின் முக்கியத்துவம் அதிகரிக்க வழிவகுத்தது.

இந்த படத்தில் அவர் பாடிய “ஓம் கர நதனு” என்ற பாடலுக்காக பாலசுப்பிரமணியம் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். அதன் பிறகு 1981 ஆம் ஆண்டு ஏக் துஜே கே லியே என்கிற திரைப்படம் ஹிந்தியில் அவரது முதல் படமாக அமைந்தது. அந்த படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார்.

பாலசுப்பிரமணியம் தமிழில் ஜானகி மற்றும் இளையராஜாவுடன் அதிக பாடல்களை பதிவு செய்தார். இந்த மூவர் கூட்டணியானது 1970 களில் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வெற்றிக்கரமான கூட்டணியாக இருந்தது. 1980 களில் சங்கரா சங்கம் (1983) படங்களில் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி இருவரும் கூட்டு சேர்ந்து அதன் விளைவாக இருவருமே தேசிய விருது பெற்றனர்.

அதே போல அவர்கள் 1986 இல் சுவாதி முத்யம் மற்றும் 1988 இல் வந்த ருத்ரவீணா போன்ற படங்களிலும் இருவரும் தேசிய விருதை வென்றனர்.

1989 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த மைனே பியார் கியா வில் பின்னணி பாடகராக இருந்தார். தில் தீவானா என்கிற படத்திற்காக அவர் சிறந்த பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

காதல் பாடல்களை பாடுவதில் சிறந்த பின்னணி பாடகராக பாலசுப்பிரமணியம் இருந்தார். அவர் பாலிவுட்டில் பாடிய ஹம் ஆப்கே ஹை கவுன், திதி தேரா தேவர் தீவானா ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் எஸ்.பி.பி முக்கியமான பின்னணி பாடகர்களில் ஒருவரானார்.

1990

1990 களில் அவர் வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் தேவா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். ஆனால் ஏ.ஆர்.ரகுமானுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நட்பின் மூலம் அவர்கள் பல வெற்றிகளை கண்டனர்.

கன்னடத்தில் ஹம்சலேகா என்னும் இசையமைப்பாளருடன் அவருக்கு நல்ல உறவு ஏற்பட்டது. இவர்கள் இருவர் கூட்டணியில் கன்னடத்தில் அதிகப்படியான பாடல்கள் வெளியாயின. கன்னட திரைப்படமான கணயோகி பஞ்சகஷரி கவாய் (1995) திரைப்படத்தில் அவர் பாடிய “உமாண்டு குமண்டு” பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான நான்காவது தேசிய விருதை பெற்றார்.

பாலசுப்பிரமணியம் ஏ.ஆர் ரஹ்மானின் முதல் படமான ரோஜாவில் அவருக்கு மூன்று பாடல்களை பாடி கொடுத்தார். அவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு நல்ல உறவில் இருந்தனர். அவர் பாடகி அனுபமாவுடன் கிழக்கு சீமையிலே படத்தில் பாடிய “மானுத்து மந்தையிலே” பாடல் அனுபமாவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

அனைத்து விதமான பாடல்களையும் பாடினாலும் அதிகபட்சம் அவர் காதல் டூயட் பாடல்களையே பாடினார். தமிழில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான மின்சார கனவு படத்தில் அவர் பாடிய “தங்க தாமரை நிலவே” பாடல் அவருக்கு ஆறாவது தேசிய விருதை பெற்று தந்தது.

2000 லிருந்து தற்போது வரை

விஷால் சேகரின் இசையமைப்பில் ஷாருக்கான் நடித்து வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் முதல் பாடலை 2013 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பாலிவுட்டில் பாடிய பாடலாகும். 2010 க்கு பிறகு அவர் முன்பு போல் அதிகமாக பாடல்கள் பாடவில்லை என்றாலும் சொற்பமான அளவில் பாடல்கள் பாடியுள்ளார்.

டப்பிங் கலைஞர்

கமலஹாசன் நடித்து தமிழில் வெளியான மன்மத லீலை திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. அப்போது அந்த படத்தில் பாலசுப்பிரமணியம் டப்பிங் கலைஞரானார். அதன் பிறகு அவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரிஷ் கர்நாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்ஜா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு பல்வேறு மொழிகளில் அவர்களது குரல்களுக்கு டப்பிங் பேசினார்.

கமலஹாசன் தமிழில் நடித்த தசாவதாரம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. அதில் கமலஹாசன் நடித்த பத்து கதாப்பாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாபாத்திரம் உட்பட) எஸ்.பி.பி டப்பிங் குரல் கொடுத்தார். அன்னாமையா என்ற திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருது கிடைத்தது.

காந்தி திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்கு இவர் டப்பிங் செய்தார்.

சூப்பர் ஸ்டாருடன் நட்பு

தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் நல்ல நட்பு இருந்தது. அதிகப்பட்சம் ரஜினிகாந்த் தனது படத்தின் முதல் பாடலை பாலசுப்பிரமணியத்தையே பாட செய்வார். தற்போது வெளியான தர்பார் வரை பல படங்களுக்கு முதல் பாடலை எஸ்.பி.பியே பாடினார். அப்படியாக அவர் பாடிய பாடல்கள்

  • அண்ணாமலை- வந்தேண்டா பால்காரன்
  • முத்து- ஒருவன் ஒருவன் முதலாளி
  • பாட்ஷா- நான் ஆட்டோக்காரன்
  • அருணாச்சலம்- அதான்டா இதான்டா
  • படையப்பா- என் பேரு படையப்பா
  • சந்திரமுகி- தேவுடா தேவுடா
  • சிவாஜி- பல்லேலக்கா
  • கோச்சடையான்- எங்கே போகுதோ வானம்
  • லிங்கா- ஓ நண்பா
  • பேட்ட- மரண மாஸ்
  • தர்பார்- நான்தாண்டா இனிமேலு

ஆகிய பாடல்களை ரஜினிகாந்த் படத்தில் முதல் பாடலாக எஸ்.பி.பி பாடியுள்ளார்.

சாதனைகள்

50 ஆண்டுகளில் 40,000 க்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற உள்ளது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, துலு, ஒரிசா, அசாமி, படகா, சமஸ்கிருதம், கொன்கினி, பெங்காலி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய 14 மொழிகளில் பாலசுப்பிரமணியம் பாடல்கள் பாடியுள்ளார். இந்தியாவிலேயே இத்தனை மொழியில் பாடிய பாடகர் இவர் மட்டுமே.

1981 பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பெங்களூரில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 17 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். ஒரே நாளில் 17 பாடல்களை பதிவு செய்ததால் இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதே போல பாலு ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் 19 பாடல்களையும், இந்தி மொழியில் 16 பாடல்களையும் இசை இயக்குனர்கள் ஆனந்த் மற்றும் மிலிந்த் ஆகியோருக்காக பதிவு செய்தார்.

விருதுகள்

இவர் இதுவரை ஆறுமுறை சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

1996 இல் வெளியான பவித்ரா பந்தம் என்ற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார்.

1990 இல் வெளியான கேளடி கண்மணி திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

பிலிம் பேர் விருதுகளில் இதுவரை அவர் பத்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் மூன்று முறை விருது பெற்றார்.

ஒரு பாடகராக, நடிகராக, டப்பிங் கலைஞராக இந்திய சினிமாவில் முக்கியமான கலைஞராகவும் தனது பாடல்கள் வழியாகவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றென்றும் சாகா வரம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

ரஜினி கெரியரையே க்ளோஸ் பண்ணிய படங்கள்! – ஏன் ஓடலை தெரியுமா?

என்னதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராக சினிமாவில் வலம் வந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவரும் சில ஃப்ளாப் படங்களை சந்தித்துள்ளார்.

இதில் சில படங்களின் பெயர் ரஜினி ரசிகர்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். இந்த படங்கள் வசூல் மற்றும் கதையம்சத்தால் தோல்வியை தழுவின.

10. குசேலன்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினியின் சந்திரமுகி ஹிட். அதை தொடர்ந்து மீண்டும் இருவர் கூட்டணியில் வந்த படம் குசேலன். இது மலையாள படமான கதா பரயும்போல் –ன் ரீமேக் படம்.

பணக்கார நடிகர் ஒருவர் தனது பால்ய கால ஏழை நண்பனை மீண்டும் சந்திப்பது கதை. புராணத்தில் கிருஷ்ணர் – குசேலன் இடையே இருந்த நட்பை தழுவி எடுக்கப்பட்ட கதை

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிகராகவே நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் வடிவேலுவின் சலூன் கடை சண்முகம் காமெடி இப்போது ஃபேமஸ். ஆனால் கதை முக்கியமாக பசுபதி மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியே நடப்பதால் ரஜினிக்கு இதில் நிறைய காட்சிகள் கிடையாது.

சந்திரமுகிக்கு பிறகு வந்ததால், ரஜினியின் படம் என ப்ரோமோட் செய்யப்பட்டதால் ஆசையாக வந்த ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவாக இல்லை.

9. பாபா

ரஜினியை வைத்து பாட்ஷா, அண்ணாமலை போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் படம். ஆனால் கதை, திரைக்கதை எல்லாம் ரஜினியே எழுதியது.

கடவுள் நம்பிக்கையில்லாத, குடிகாரனான ஒருவன் பாபாவை பார்த்து 7 மந்திரங்களை பெற்று ஞானியாக மாறுவதுதான் கதை சுருக்கம்.

அப்போது அடிக்கடி இமயமலை சென்று வந்த ரஜினி, ஆன்மீகம், அரசியல் கலந்து எழுதிய கதை. படம் முழுவதும் ஆன்மீகம், அரசியல் பற்றியே பேசினாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யம் கிடைக்கவில்லை. ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் இன்றுவரை ஹிட்.

இந்த படங்களை தனியா பார்த்திடாதீங்க – பயங்கரமான 10 பேய் படங்கள்

8. லிங்கா

இதுவும் ரஜினியை வைத்து படையப்பா போன்ற ஹிட் படத்தை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம்தான். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தும் கூட ”உண்மை ஒருநாள் வெல்லும்” பாடல் அளவுக்கு மற்ற பாடல்கள் ஹிட் அடிக்கவில்லை.

நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினி டபுள் ஆக்ட் செய்த படம். திருடனாய் நடப்பு காலத்தில் ஒரு ரஜினி. பெரிய ராஜ வம்சத்து கலெக்டராய் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு ரஜினி. பிரிட்டிஷ் காலத்து வள்ளல் ரஜினியின் காட்சிகள் ஓரளவு ஒர்க் அவுட் ஆனாலும், திருடன் ரஜினியின் மேக் அப், பாடி லாங்வேஜ் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும் கூடுதல் காரணமாக இருக்க இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

7. கொடி பறக்குது

16 வயதினிலே வெற்றிக்கு பிறகு 10 ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இயக்குனர் பாரதிராஜாவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் கொடி பறக்குது.

இதில் அப்போது உச்சத்தில் இருந்த அமலா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவ்வாறு அப்போது தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றினைந்து உருவாக்கியது என்பதால் இந்த படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது.

இதில் ரஜினி காந்த் போலீஸாக நடித்திருந்தார். தன் தந்தையைக் கொன்றவனை பழிவாங்குவதாக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. அதனால் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று பெரியளவில் படம் தோல்வி அடைந்தது.

ரஜினிக்கு போன கதையை தட்டித்தூக்கிய தளபதி? – இயக்குனர் இவர்தான்..!

6. வள்ளி

வள்ளி, இத்திரைப்படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் இதன் திரைக்கதையை ரஜினி எழுதியிருந்தார் என்பது மிகவும் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியது.

இதனாலேயே தமிழக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக வள்ளி மாறிவிட்டது. வள்ளி திரைப்படத்தின் கதை கதாநாயகி வள்ளியை காதலிப்பதாக சொல்லி, ஏமாற்றி அவளை கர்ப்பமாக்கிவிட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறான்.

அதற்குபிறகுதான் தெரிகிறது, அவன் முதலமைச்சரின் மகன் என்று. இதற்கு பிறகு வள்ளி, நடத்தும் போராட்டமே இத்திரைப்படம். மிகவும் புரட்சிகரமான கதை, ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் கௌரவ தோற்றம் என பல விஷயங்கள் இருந்தபொழுதும் இத்திரைப்படம் பலத்த தோல்வியுற்றது.

5. பாண்டியன்

ரஜினிகாந்த, தனக்கு பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த எஸ்.பி.முத்துராமனுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் உதவி செய்யும் நோக்கோடு ஒரு குறுகிய கால சிறிய படத்தினை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை துவக்கினார்

இத்திரைப்படம் எஸ்.பி முத்துராமன் அவர்களின் விசாலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டாலும் அதற்கான முழு செலவையும் ரஜினியே ஏற்றுக் கொண்டார். 1991ல் கன்னட திரைப்படமான பாம்பே தாதாவின் ரீமேக்காக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் முதலில் நண்பன் என்னும் பெயரில் வெளியாகுவதாக இருந்தது.

ஆனால் படம் வெளியாகும் முன் பாண்டியன் என பெயர் மாற்றப்பட்டது. இதில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். ஆனால் படம் தமிழக ரசிகர்களை கவரவில்லை. இதனால் படம் மிகப்பெரும் அளவில் தோல்வி அடைந்தது.

ராஜமௌலிக்கு சவால் விடும் பொன்னியின் செல்வன்! – சுதா கொங்கரா சர்ப்ரைஸ்!

4.மாவீரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் நடிப்பில் காதல் திரைப்படமாக மிகவும் பிரம்ம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் மாவீரன்

இது 1985ல் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான மார்த் திரைப்படத்தின் ரீமேக்கே மாவீரன் ஆகும். திமிர் பிடித்த ஜமீன்தார் மகள் ரஜினியின் வீரத்தின் மீது காதல் கொள்கிறாள். இதற்கு பிறகு நிகழும் சுவாரசியமான சம்பவங்களே மாவீரன் திரைப்படத்தின் கதை. தமிழில் வெளிவந்த முதல் 70 MM திரைப்படம் இதுவே ஆகும்.

அதோடு ஒலியமைப்பிலும் இளையராஜா 7 ட்ராக்குகளில் ஒலிக்ககூடிய ஸ்டீரியோபோனிக் முறையில் அமைக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும். இவ்வாறு பல சிறப்புகள் இருந்தாலும் 1986, தீபாவளி அன்று வெளியாகிய திரைப்படம் பலத்த தோல்வியை அடைந்தது.

3. விடுதலை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைத்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் விடுதலை.

 இதில் ரஜினி கில்லாடியான திருடனாக நடிக்க, அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிவாஜி கணேஷன் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1980ல் வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான குர்பானி படத்தின் ரீமேக்காகும்.

குர்பானி திரைப்படம் 1972ல் வெளிவந்த இத்தாலிய திரைப்படமான The Master Touch திரைப்படத்தின் தழுவலாகும். சிவாஜி, ரஜினி இணைந்து நடிக்கின்றனர் என்பதே இத்திரைப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனாலும் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பெரும் தோல்வியையே தழுவியது.

இளம் கமலுக்காக காத்திருக்கும் சலாமியா நாட்டு இளவரசி! – வேற லெவல் போகும் விக்ரம்!

2.தர்பார்

தமிழின் மிகவும் புகழ்ப்பெற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் தர்பார்.

ரஜினிகாந்த் நீண்டநாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதே அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. நயன்தாரா கதாநாயகியாக நடித்ததும் படத்தின் மீதான எதிர்பாப்பைக் கூட்டியது.

மும்பையில் இருக்கும் டான்களின் கொட்டத்தை அடக்குவத்ற்காக அங்கு போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினி வருகிறார். அங்கு அவர் நிகழ்த்தும் அதிரடியான செயல்களே இத்திரைப்படம். இருப்பினும் மிக பலவீனமான திரைக்கதையால் படம் மிகப்பெரும் தோல்வியடைந்தது.

1.ஸ்ரீ ராகவேந்திரா

ஒரு நடிகருக்கு 25வது, 50வது, 75வது, 100வது திரைப்படம் என்பது மிகவும் ஸ்பெஷல் ஆனது. எனவே இத்திரைப்படங்களில் தனது ஸ்டார் என்ன மாதிரியான படத்தில் நடிப்பார் என்பது அவரது ரசிகருக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பிவிடும்.

ஆகவே நடிகர்கள் இந்த மாதிரியான எண்ணிக்கைகள் வரும்பொழுது தங்களது படத்தில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். இத்திரைப்படங்களில் ஆக்சன் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருக்குமாறு கதைக்களத்தை அமையுமாறு பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குரு ராகவேந்திராவிற்கு நன்றி செலுத்தும்விதமாக ஶ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தை உருவாக்கினார். இன்னொருபுறம் ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆனால் இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. ரசிகர்களால் தங்களுடைய சூப்பர் ஸ்டார் சாமியாராகவும், சண்டைக்காட்சிகளே இல்லாத ஒரு பக்தி திரைப்படமாகவும் நடித்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரசிகர்களின் கருத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பணிவன்புடன் ஏற்றுக் கொண்டார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.