Bigg Boss Tamil
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் லிஸ்ட்.. இந்த க்ரூப் எல்லாம் வந்தா களை கட்டுமே?.
Bigg Boss season 8: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் அனைவரும் யார் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருக்கும்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 1 தொடங்கி, சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் 7 வரைக்கும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
அடுத்ததாக தொடங்க இருக்கும் பிக் பாஸ் 8ல் யார் போட்டியாளராக பங்கு கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 8
2024 ஆம் ஆண்டு தொடங்கி பாதி வருடங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 8ல் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய தவல் தொடங்கிவிட்டது.
வருடத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி வரை நீடிக்கும். எனவே இந்த வருடத்தின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற என்ற தகவல் வந்து கொண்டு இருக்கிறது.
மொத்தமாக நூறு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியின் முடிவில் ஏதோ ஒரு போட்டியாளர் நிச்சயம் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பார்.
பங்கு பெறப்போகும் பிரபலங்கள்

பிக் பாஸ் சீசன் 8-ல் பங்கு கொள்ள போகும் போட்டியாளராக நடிகை பூனம் பாஜ்வா இடம்பெற்று இருக்கிறார். தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் நடிகை பூனம் பாஜ்வா, பிக் பாஸ் சீசன்8 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தகவல் வெளிவந்திருக்கிறது.

மேலும் பிரபல நடிகையான கிரனும் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோயா ஷெலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. தற்பொழுது அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சோயா தனது காதலரான டிடிஎஃப் வாசனுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் வின்னர், கஜினி போன்ற படங்களில் நடித்த நடிகர் ரியாஸ்கான் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அடுத்ததாக விஜய் டிவி புகழ்பெற்ற ரோபோ சங்கர், பாடகி ஸ்வேதா மேனன் பாடகி கல்பனா ஆகியோரும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது மிகவும் சர்ச்சையை கிளப்பி கொண்டிருந்த சுசித்ராவின் கணவர் கார்த்திக் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பப்லு பிரித்விராஜ் இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் 7-ல் கலந்து கொள்ள இருந்த நிலையில் சில காரணங்களால் விலகி விட்டார்.

மேலும் அனைவருக்கும் பரிச்சயமான இன்ஸ்டாகிராம் புகழ் அமலா சாஷி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
