Tamil Cinema News
அல்லு அர்ஜுனுக்கு குவியும் ஆறுதல்கள்… கண்ணீர் விட்ட சமந்தா.. இதெல்லாம் நியாயமா..! பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..!
நடிகர் அல்லு அர்ஜுன் குறித்த விஷயம்தான் தற்சமயம் தமிழ் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
பொதுவாகவே பெரிய நடிகர்களின் திரைப்படங்களைப் பொறுத்தவரை முதல் நாள் முதல் கட்சி என்பது கோலாகலமாகதான் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் ஒரு திரையரங்கில் சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களை சந்திப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.
அப்பொழுது உண்டான கூட்ட நெரிசலில் அந்த திரைப்படத்திற்கு வந்திருந்த ஒரு பெண்மணியும் அவரது குழந்தையும் பாதிக்கப்பட்டனர். அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த சிறுவன் தற்சமயம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என்று கூறி அவரை கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம் இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும்எதிராகவும் நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.
திரையரங்கில் நடந்த சம்பவம்:
ஒரு பக்கம் இதற்கு எப்படி அல்லு அர்ஜுன் காரணமாக இருக்க முடியும் திரையரங்கம் தான் சரியாக கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் அன்று திரையரங்கிற்கு வராமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது.
மேலும் வருகிற அல்லு அர்ஜுனும் திரையரங்கிற்கு கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி இருப்பார்கள். எனவே அல்லு அர்ஜுன் மீது தான் தவறு என்று ஒரு பக்கம் பேச்சு இருந்து வந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெயில் வாங்கி வீட்டிற்கு வந்து விட்டார் அல்லு அர்ஜுன். அப்பொழுது அவர் தனது குடும்பத்தாரை சந்தித்த பொழுது அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது.
வெளியில் வந்த அல்லு அர்ஜுன்:
மேலும் சமந்தாவும் அவருக்கு ஆதரவு ஆறுதல் தெரிவித்து கண்ணீர் மல்க பதிவு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் பிரபலங்கள் பலருமே அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ராணா டகுபதி, நாகசைதன்யா, விஜய் தேவரகொண்டா போன்றவர்கள் எல்லாம் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கடுப்பான நிறைய ரசிகர்களும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இதனால் கடுப்பான மக்கள் சிலரும் இருக்கின்றனர். அவர்கள் கூறும் பொழுது இப்படி ஒரு விபத்து நடந்த பொழுது அந்த குடும்பத்தாருக்கு ஆதரவு தெரிவித்து எந்த ஒரு பிரபலமும் பதிவு போடவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் காவல் நிலையம் சென்று வந்ததற்கு இவ்வளவு பெரிய சீன் கிரியேட் செய்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே வெளியில் வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தான் கொடுத்திருக்கிறது.