News
பொதுவெளியில் ரசிகர்கள்கிட்ட அடி வாங்கிய பிரபலங்கள்.. யார் யாருன்னு பாருங்க!.
சினிமாவில் மக்களுக்கு மோகம் அதிகரித்து வரும் நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகை, நடிகர்கள் மீது மக்களுக்கு எப்போதும் தனி கவனம் இருக்கும். அந்த வகையில் தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது அவர்களின் படம் வெளியானால் அவர்களின் பேனருக்கு பாலபிஷேகம் பண்ணுவது அவர்களின் புகைப்படத்தை டாட்டூ குத்துவது போன்ற பல விஷயங்களை ரசிகர்கள் அவர்களுக்காக செய்து வருவார்கள்.
இந்நிலையில் பல பிரபலங்கள் வெளியில் செல்லும் பொழுது அவர்களை சூழ்ந்து கொள்ளும் ரசிகர்கள், அவ்வப்போது செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முயல்வது இயல்பான ஒன்று தான். ஆனால், இதில் கோபமடையும் பிரபலங்கள் சில சமயங்களில் ரசிகர்களை அடித்து அது சர்ச்சையாகவும் மாறி இருக்கும்.
ஆனால் தற்போது சில பிரபலங்கள் ரசிகர்களிடம் அடி வாங்கிய நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கங்கனா ரனாவத்

கங்கன ராணாவத் பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் சந்திரமுகி 2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். தென்னிந்திய சினிமாவிலும் நடித்து வரும் கங்கனா ரனாவத் தற்போது ஒரு குறிப்பிட்ட கட்சியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று தற்போது எம்பியாக இருக்கிறார்.
சமீபத்தில் இவர் விமான நிலையத்தில் ஒரு பெண் சிஐஎஸ்எப் என்ற பெண் போலீசாரிடம் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார். இதற்குக் காரணம் வடமாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் பொழுது அதில் கலந்து கொண்ட மக்களை தீவிரவாதிகள் என கங்கன ராணாவத் கூறியதால் இதனால் கோபமடைந்த அந்த பெண் போலீசார் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்தார்.
நடிகர் அஜித் குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பொது இடங்களிலும் அவ்வளவாக தென்பட மாட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தான் வாக்களிக்க வரும் பொழுது ரசிகர் ஒருவர் அஜித்தை தலையில் வேகமாக இடித்திருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வந்தது.
பாலையா

தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பாலையா, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மேடையில் நடிகை அஞ்சலியை இவர் கோபமாக தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
