Connect with us

Chandarababu: சந்திரபாபு நடிக்கவிருந்த திரைப்படத்தை கைப்பற்றிய நாகேஷ்!.. இரு நட்சத்திரங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்ட திரைப்படம்..

chandrababu nagesh

Cinema History

Chandarababu: சந்திரபாபு நடிக்கவிருந்த திரைப்படத்தை கைப்பற்றிய நாகேஷ்!.. இரு நட்சத்திரங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்ட திரைப்படம்..

Chandrababu and Nagesh: தமிழ் திரையுலகில் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எவ்வளவு முக்கியமானவர்களோ அதற்கு சமமாக முக்கியமானவர்கள் படத்தின் காமெடி நடிகர்கள்.

கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கூட அவ்வளவு ரசிக பட்டாளம் இருக்காது. ஆனால் காமெடியனாக நடிக்கும் நடிகர்களுக்கு எக்கச்சக்கமான ரசிக்கப் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமாக இருந்த காமெடியன்கள் என்றால் சந்திரபாபு நாகேஷ் தங்கவேலு போன்ற நடிகர்களை கூறலாம்.

இப்போதை விட அப்பொழுது அதிகமாகவே காமெடி நடிகர்கள் இருந்தனர். நாடகங்கள் ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து நாடகங்களில் காமெடி கதாபாத்திரம் ஒன்று இருக்கும். எனவே திரைப்படங்களுக்கும் காமெடிகளுக்கும் இருக்கும் பந்தத்தை பிரிப்பது என்பது கடினம் என்று கூறலாம்.

இந்த நிலையில் காமெடி நடிகர்களை வைத்து திரைப்படம் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். படம் முழுக்கவே காமெடியாக இருக்க வேண்டும் என்று யோசித்தனர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கிருஷ்ணன் பஞ்சு சகோதரர்கள். ஆனால் அப்படி படம் எடுப்பதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது ஏனெனில் அந்த திரைப்படம் மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்கிற ஒரு விஷயம் உள்ளது.

இந்த நிலையில் தான் சந்திரபாபுவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தனர் கிருஷ்ணன் பஞ்சு சகோதரர்கள். ஆனால் சந்திரபாபு அந்த படத்திற்கு அவர்கள் கதையை எழுதவில்லை அதற்கு முன்பே சந்திரபாபுவிடம் சென்று பேசிவிடலாம் என சென்றனர்.

 அப்போது சந்திரபாபு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் அந்த சம்பளத்தை கொடுத்து ஒரு படத்தை நாம் தயாரித்து அந்த திரைப்படம் தோல்வி அடைந்து விட்டால் அது பெரும் நஷ்டம் ஆகிவிடும் என யோசித்த அவர்கள் நாகேஷை வைத்து அந்த திரைப்படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இந்த நிலையில்தான் பாலச்சந்தர் பல நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். அதில் சர்வர் சுந்தரம் என்கிற நாடகம் அப்போது கொஞ்சம் பிரபலமாக இருந்தது. அதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணன் பஞ்சு அந்த நாடகத்தை போய் பார்த்தனர் பார்த்தவுடனேயே அந்த நாடகம் அவர்களுக்கு பிடித்து விட்டது.

எனவே அதை படமாக தயாரிப்பதற்கான உரிமத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் பாலச்சந்தர் இயக்கத்தில் கிருஷ்ணன் பஞ்சு தயாரிப்பில் அந்த திரைப்படம் தயாராக இருந்தது இதற்கு நடுவே இந்த நாடகத்தை ஏவி மெயப்ப செட்டியாரும் சென்று பார்த்தார் அவருக்குமே அந்த நாடகம் பிடித்து விட்டது அவரது தயாரிப்பில் அந்த திரைப்படம் உருவாக வேண்டும் என்று அவர் கருதினார்.

எனவே இது குறித்து கிருஷ்ணன் பஞ்சுவிடம் ஏவி மெய்யப்ப செட்டியார் பேசிய பிறகு இருவரும் இணைந்து சர்வர் சுந்தரம் திரைப்படம் தயாரானது. ஒருவேளை அந்த திரைப்படத்தில் நாகேஷிற்கு பதிலாக சந்திரபாபு நடித்திருந்தால் சந்திரபாபுவின் மார்க்கெட்டை அப்பொழுது மாறி இருந்திருக்கும் ஆனால் சம்பள விஷயத்தில் அவர் விட்டுக் கொடுக்காத காரணத்தினால் அந்த படத்தின் வாய்ப்பை இழந்தார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top