சந்திரமுகி 2 கதை கேட்டே இயக்குனரை கலங்கடித்த கதாநாயகி – யார் தெரியுமா?

சமீபத்தில் லைக்கா நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க போவதாக அறிவித்திருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ராகவா லாரன்ஸ் அவர்களை தேர்வு செய்துள்ளனர்.

மேலும் இந்த படத்திலும் வடிவேலு இருக்கிறார். இந்த படத்தையும் இயக்குனர் வாசு அவர்களே இயக்குகிறார். படத்திற்கான நட்சத்திரங்கள் வரிசையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் நடிகை த்ரிஷாவும், அனுஷ்காவும் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அவர் கதாநாயகி இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம் இயக்குனர் வாசு.

ki

ஏனெனில் சந்திரமுகி கதாபாத்திரம் ஒரு ஆடல் மங்கை என்பதால் நன்றாக நடனமாடும் திறன் கொண்ட சாய் பல்லவி அதற்கு பொருத்தமாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் சாய் பல்லவி தான் நடிக்க வேண்டும் எனில் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கூறுகிறாராம். இதனால் அவரை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பது குறித்து யோசனை செய்து வருகிறாராம் பி.வாசு.

Refresh