நடிகர் ரஜினியை சந்தித்த மணிரத்னம் – அடுத்து என்ன நடக்க போகுது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருள் செலவில் படமாக்கப்பட்டு வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைக்கலாம் என மணிரத்னம் தீர்மானித்திருந்தார். ஆனால் தஞ்சை பெரியக்கோவிலுக்கு யார் சென்றாலும் அவர்களுக்கு தீமையாக சில விஷயங்கள் நடப்பதாக ஒரு வதந்தி உண்டு.

இதனால் பிரபலங்கள் பலரும் பயந்துக்கொண்டு தஞ்சை பெரியகோவிலுக்கு வர யோசிக்கிறார்களாம். இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷனை எப்படி செய்யலாம் என யோசித்து கொண்டிருந்த மணிரத்னம், இதற்கிடையே நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார்.

எதற்காக இவர் நடிகர் ரஜினியை சந்தித்தார் என பார்த்தால் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை சென்னையிலேயே வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் மணிரத்னம். எனவே படத்தின் ப்ரோமோஷனில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தாராம். எனவே இதுக்குறித்து பேசுவதற்காக அவர் ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதனால் தஞ்சை பெரியக்கோவிலுக்கு நட்சத்திரங்கள் வருவார்கள் என்ற தஞ்சாவூர் மக்களின் எதிர்ப்பார்ப்பு ஏமாற்றமாகிவிட்டது.

See also  ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சியை நீக்கிய பிசாசு படக்குழு