News
பாலியல் தொல்லைக்கான பலனை அனுபவிப்பார்கள்.. விஜய் சேதுபதி படத்தை பார்க்க மாட்டேன் என்ற பாடகி!..
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது அதிகபட்சமாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அதற்கு எதிரான குரல்களும் ஒரு சிலரால் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் பெரும்பாலானோர் இது குறித்து வெளியில் வாய் திறப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அப்படி அவர்கள் வாய் திறக்கும் பொழுது அவர்களுக்கு திரை துறையில் வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விடும்.
மேலும் அது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் அப்படி வாய் திறந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை இழந்தவர்தான் பாடகி சின்மயி.
சின்மயி:
பாடகி சின்மயி வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறி அந்த தகவலை வெளியிட்ட பிறகு அவருக்கு திரை துறையில் நிறைய வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து வரும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உள்ளது.
மகாராஜா படம் குறித்து பேச்சு:
இந்த திரைப்படம் முழுக்கவே பாலியல் அத்துமீறலுக்கு எதிரான ஒரு திரைப்படமாகதான் இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சின்மயி வைரமுத்து இந்த பாடத்திற்கு பாடல் வரிகள் எழுதி இருப்பது எனக்கு தெரியாது.

அது இப்போதான் தெரியும் எனவே நான் இனி மகாராஜா திரைப்படத்தை எப்போதும் பார்க்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் சின்மயி. ஏனெனில் பாலியல் குற்றத்திர்கு எதிரான ஒரு திரைப்படத்திற்கு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு உள்ள ஒரு நபரை பாடல் வரிகளை எழுத வைப்பது எவ்வளவுக்கு சரி என்பதுதான் சின்மயியின் கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
