Latest News
சன் டிவிக்கு எதிராக களம் இறங்கும் டிவி சேனல்.. சிவசக்தி திருவிளையாடல்.. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு..!
பக்தி தொடர்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உண்டு என்று கூறலாம். பக்தி மற்றும் மாயாஜால தொடர்களுக்கு அதிக வரவேற்பு இங்கு உண்டு.
அதனால்தான் நாகினி தொடர் எல்லாம் அதிக வரவேற்புகளை பெற்ற தொடராக இருக்கிறது. ஏற்கனவே சன் டிவியில் விநாயகர் வேலன் ராஜராஜேஸ்வரி போன்ற பல பக்தி சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன.
அதேபோல விஜய் டிவியில் மகாபாரதம் மாதிரியான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சன் டிவி வெகு நாட்களுக்கு பிறகு ராமாயணம் தொடரை ஒளிபரப்பு செய்ய துவங்கியது. இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது.
பக்தி தொடருக்கு வரவேற்பு:
பொதுவாக வட இந்தியர்கள்தான் இந்த மாதிரியான பக்தி தொடர்களை எடுப்பதுண்டு. ஏனெனில் அவ்வளவு செலவு செய்து தமிழில் பக்தி சீரியல்கள் எடுப்பதற்கு ஆட்கள் கிடையாது. அதை வாங்கிதான் தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள்.
அந்த வகையில் ராமாயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சன் டிவியில் டிஆர்பி மார்க்கெட்டை பிடித்த ஒரு நாடகமாக தற்சமயம் வெளியான ராமாயணம் இருந்தது. இந்த நிலையில் போட்டியில் புது ஆளாக களம் இறங்கிய சேனல் தான் கலர்ஸ் தமிழ்.
கலர்ஸ் தமிழ் தமிழில் துவங்கி பல வருடங்கள் ஆன பொழுதும் கூட இன்னமும் முக்கியமான டிவி சேனல்கள் வரிசையில் அது இடம்பெறவில்லை அதற்கு காரணம் சீரியல்களை பொருத்தவரை பெரிய டிவி சேனல்களோடு போட்டி போடும் அளவிற்கு கலர்ஸ் தமிழில் இன்னும் சீரியல்கள் ஒளிபரப்பாகவில்லை.
புது தொடர்:
இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சிவசக்தி திருவிளையாடல் என்கிற ஆன்மீக தொடரை அடுத்த மாதம் முதல் தொடர்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.
பொதுவாகவே தாய் தெய்வ வழிபாடு என்பது தமிழ்நாட்டில் அதிகமாக இருந்து வந்த ஒன்று என்பதால் பெண்ணை கடவுளாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு அம்மன் என்கிற தொடரையும் கலர்ஸ் தமிழில் வெளியிட்டனர் ஆனால் அதற்கு வரவேற்பு பெரிதாக கிடைக்கவில்லை இந்த நிலையில் இந்த தொடருக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்பது தொடர் வெளியான பிறகு தான் தெரியும் என்று கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்