லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் பகடி வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதேசமயம் இந்த பாடலில் “ஒன்றியத்தின் தப்பாலே.. ஒன்னியுமில்ல இப்பாலே” போன்ற அரசியல் பகடி வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இது மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.