கோபிநாத்தால் படிப்பே நின்னு போயிட்டு… குமுறும் மாணவி.. என்னதான் நடந்தது!..

Neeya Naana Gopinath : நீயா நானா நிகழ்ச்சி மூலமாக உலகமெங்கும் பிரபலமானவர் கோபிநாத். பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது. நீயா நானா நிகழ்ச்சி இப்போது வரையில் பரவலாக பலருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. நீயா நானா மட்டுமன்றி பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார் கோபிநாத்.

இவை இல்லாமல் யூ ட்யூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் கோபிநாத் குறித்து சர்ச்சையான தகவல் ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு முதியவர் தனது பேத்தியை இஞ்சினியரிங் படிக்க வைப்பதற்காக கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.

அதற்கு 36,000 ரூபாய் தேவைப்படுகிறது எனவும் 10,000 ரூபாயை கஷ்டப்பட்டு கட்டிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதனை கேட்ட கோபிநாத் கவலைப்படாதீர்கள் அந்த 26,000 ரூபாயை நான் கட்டிவிடுகிறேன் என கூறியிருந்தார் கோபிநாத்.

இதுக்குறித்து அந்த பெண் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த பெண்ணிடம் கோபிநாத்தின் உதவியாளர் எண் கொடுக்கப்பட்டுள்ளது. பலமுறை கால் செய்த போதும் அதில் பேசிய உதவியாளர் கோபிநாத் பிஸியாக இருப்பதாக கூறியுள்ளார்.

Social Media Bar

அதற்கு பிறகு அந்த பெண்ணுக்கு கோபிநாத் எந்த தொகையும் கொடுக்கவில்லை. இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த பெண் தற்சமயம் தனது தாத்தா பாட்டியை பார்த்துக்கொள்வதற்காக வேலை தேடி வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கோபிநாத்தை வெகுவாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.