News
ரசிகர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் இலவசம்!.. குரேஷி வீடியோவை பார்த்து ஏமாந்த ரசிகர்கள்!..
Cook with Comali : கிரிக்கெட் ஐ.பி.எல் துவங்கி விட்டாலே அது தொடர்பான ஏமாற்று வேலைகளும் இணையத்தில் தொடங்கி விடுவது உண்டு. ஒவ்வொரு வருடமும் நிறைய நபர்கள் ஐ.பி.எல்லில் டிக்கெட் வாங்குகிறேன் என்று அதிக பணத்தை இழக்கும் சம்பவங்களை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இப்படியான ஒரு சம்பவத்தில் விஜய் டிவி பிரபலமான குரேஷியை இழுத்து விட்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் குரேஷி. குக் வித் கோமாளிக்கு பிறகு குரேஷுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.

இந்த நிலையில் குரேஷி தனக்கென்று தனியாக யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கிறார். youtube சேனல் தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றுதான் இந்த பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது. அந்த வீடியோவில் தன்னுடைய யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யும் குறிப்பிட்ட நபர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டிற்க்கான டிக்கெட்டை இலவசமாக வழங்கப் போவதாக குரேஷி கூறியிருந்தார்.
இந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு முன்பு ஐபிஎல்லில் டிக்கெட் என்பது ஆன்லைனில் மட்டுமின்றி ஆஃப்லைனிலும் விற்கப்பட்டது. அதனால் வாங்கி யாருக்காவது கொடுக்க முடியும் ஆனால் இப்பொழுது ஆன்லைன் மூலமாக மட்டும்தான் அப்ளே செய்ய முடியும்.
பிறகு எப்படி குரேஷி ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியும் அவர் ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று அவர் மீது அவதூறுகளை பரப்பி வந்தனர் இதற்கு பதிலளித்த குரேஷி கூறும் பொழுது நான் ஆரம்ப கட்டத்தில் youtube சேனல் ஆரம்பித்த பொழுது வெளியிட்ட வீடியோ அது. இந்த வருடம் நான் அதை வெளியிடவில்லை ஆனால் ஏதோ புதிதாக இந்த வீடியோவை வெளியிட்டது போல இணையத்தில் அதை வைரல் செய்து வருகின்றனர் என்று கூறி இருக்கிறார் குரேஷி.
