TV Shows
குக் வித் கோமாளி சீசன் 6 எப்போ வெளியாகுது.. வெளிவந்த அப்டேட்.!
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இருக்கிறது. பலரும் தன்னை மறந்து சிரிப்பதற்கு காரணமாக உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவி அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 6 துவங்குவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில காலகட்டங்களிலேயே குக் வித் கோமாளி துவங்கிவிடும். பிறகு குக் வித் கோமாளி வருடத்தின் இறுதி மாதம் வரை செல்லும். அது முடியும் நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் துவங்கும்.
இப்படித்தான் விஜய் டிவியில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார் நடிகை ஷகிலா. அதில் அவர் கூறும்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ஏப்ரல் மாதத்தின் இறுதியில் துவங்கும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியதாக ஷகீலா கூறியிருக்கிறார்.
