திடீரென வெளியான கூலி திரைப்பட டீசர்..! இதுதான் காரணமாம்.! வியாபாரத்தில் கண்ணா இருக்காங்க.!
தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கூலி திரைப்படம் முக்கியமான திரைப்படமாக இருந்து வருகிறது.
ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் எப்பொழுது நடிக்கப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது கூலி திரைப்படம்.
கூலி திரைப்படம் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் பெரிய வசூலை பெற்று தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல்லபடியாக வியாபாரம் ஆகி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஓடிடி உரிமம் மட்டுமே 120 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்சமயம் கூலி திரைப்படத்தில் படபிடிப்பு காட்சிகள் சிலவற்றை வெளியிட்டு இருக்கின்றன.
இதன் மூலம் சாட்டிலைட் உரிமைத்தையும் நல்ல விலைக்கு விற்பதற்காக தான் இப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்வதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவிக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் வைத்துக்கொள்ளும். எனவே அதற்கு வாய்பில்லை எனவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.