Connect with us

அடுத்த வழக்கிலும் தனுஷ் தான் ஜெயிப்பார்? நயன்தாரா கவனிக்காமல் விட்ட விஷயம்.!

Tamil Cinema News

அடுத்த வழக்கிலும் தனுஷ் தான் ஜெயிப்பார்? நயன்தாரா கவனிக்காமல் விட்ட விஷயம்.!

Social Media Bar

நயன்தாராவுக்கு தனுஷிற்கும் இடையே நடந்து வரும் பிரச்சனைதான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.

நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல் என்கிற ஆவணப்படத்துக்காக நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருந்தார். இதற்காக அவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி வாங்காமலே இதை செய்திருந்தார்.

இந்த நிலையில் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்தார் தனுஷ். அதனை தொடர்ந்து அந்த வழக்கை நிராகரிக்குமாறு அதற்கு நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலிருந்து நிராகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிராகரிப்பு வழக்கிற்கு நேற்று சென்னை உச்சநீதிமன்றத்தில் தனுஷ்க்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்துள்ளன.

அதில் நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் கூறும்போது படத்தில் பயன்படுத்த படாத காட்சிகளுக்கு தனுஷ் உரிமை கோர முடியாது. மேலும் அந்த காட்சிகள் அங்குள்ள கேமிராவில் எடுக்கப்பட்டதல்ல எனவே இது காபிரைட் குற்றத்தில் வராது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த தனுஷ் தரப்பு கூறும்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் காட்சிகள் தயாரிப்பாளருக்கே சொந்தம். நயன்தாராவின் உடை அலங்காரம் வரை அனைத்தும் அக்ரிமெண்ட் படி காப்பிரைட்டிற்கு கீழ் வருகிறது என வாதிட்டனர்.

இதனை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அடுத்ததாக தனுஷின் வழக்கம் விசாரிக்க இருக்கிறது.

இதுக்குறித்து சினிமா வட்டாரத்தினர் கூறும்போது எந்த கேமிராவில் எடுத்தாலும் படப்பிடிப்பில் எடுக்கும் காட்சிகள் தயாரிப்பாளருக்குதான் சொந்தம். அதனால்தான் நடிகர்களே படத்தின் நடிக்கும் கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிடுவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு ரஜினி படத்தின் படப்பிடிப்பில் காட்சிகளை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டால் அது குற்றமாகதான் பார்க்கப்படும். அப்படி இருக்கும்போது இதில் தனுஷிற்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என கூறுகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top