Tamil Cinema News
விமான படையில் எனக்கு நடந்த சம்பவம்… அமரன் படத்தை தாண்டி டெல்லி கணேஷ்க்கு நடந்த சம்பவம்.!
Actor Delhi Ganesh is one of the most famous actors in Tamil. He has been a prominent actor in cinema for many years. Before cinema, he served in the army
எவ்வளவோ ராணுவம் சார்ந்த திரைப்படங்கள் தமிழில் வெளிவந்து இருக்கின்றன. ஆனாலும் கூட தொடர்ந்து அமரன் திரைப்படம் அதிகமாக கொண்டாடப்படுவதற்கான முக்கியமான காரணம் ராணுவம் குறித்து மிக தெளிவாக காட்டப்பட்டு இருப்பது தான்.
சொல்லப்போனால் படத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இராணுவம் தொடர்பாக பணத்தில் காட்டப்பட்ட நிறைய விஷயங்கள் உண்மையிலேயே ராணுவத்தில் எப்படி நடக்கிறதோ அதேபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் அமரன் திரைப்படம் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய திரைப்படமாக மாறி இருக்கிறது.
ராணுவம் குறித்து டெல்லி கணேஷ்:
இந்த நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் தன்னுடைய ராணுவ அனுபவங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ராணுவத்தில் விமானப்படையில் ஃபைட்டர் ஜெட் எனப்படும் விமானத்தை ஓட்டுபவராக பணிபுரிந்தவர் டெல்லி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக ராணுவத்தில் இருந்து விலகி சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் அப்போதைய காலகட்டத்தில் நடந்த அனுபவங்களை அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது முதன் முதலாக நான் நேர்காணலுக்கு சென்ற பொழுது என்னிடம் அமெரிக்காவின் பிரசிடெண்ட் யார் என்று கேட்டார்கள் நான் கென்னடி என்று கூறினேன். உடனே கென்னடி என்ன உன்னை பக்கத்து வீட்டுக்காரரா, ஸ்ரீ ஜான் எஃப் கென்னடி என்று கூறவேண்டும் என்று என்னை திருத்தினார்.
நேர்க்காணலில் நடந்த நிகழ்வு:
அதே போல ஒரு நான்கு கேள்விகளை என்னிடம் கேட்டார். நானும் அதற்கு பதில் அளித்தேன். பிறகு நாளை நேர்காணலுக்கு வந்து விடு என்று கூறினார் நான் சென்று மறுநாள் வந்த பொழுது அவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரு ஐந்து ஆறு நபர்கள் அமர்ந்திருந்தார்கள்.
முந்தைய நாள் கேட்ட அதே நான்கு கேள்விகளை தான் அன்றும் என்னிடம் திருப்பி கேட்டார் .நான் பதில் அளித்ததும் என்னை ராணுவத்தில் சேர்த்துக்கொண்டார். அவரது பெயர் கண்ணன். அவர்தான் நான் விமான படையில் சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்று கூறி இருக்கிறார் டெல்லி கணேஷ்.
இதே மாதிரி நேர்காணல் காட்சி ஒன்று அமரன் திரைப்படத்திலும் வரும் டெல்லி கணேஷ் கூறியது போலவே அந்த காட்சியும் அமைந்திருக்கும் அந்த அளவிற்கு ராணுவம் குறித்த விஷயங்களை அமரன் திரைப்படத்தில் ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
