Demon Slayer: தற்சமயம் அனிமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் தொடர்களில் முக்கியமான தொடராக டீமன் ஸ்லேயர் தொடர் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் மனிதர்களை கொன்று உண்ணும் கெட்ட சக்திகளாக இந்த டீமன்கள் இருக்கின்றன.
இவைகளுக்கு என்று சிறப்பு சக்திகளும் இருக்கின்றன. இவற்றை வேட்டையாடும் வீரர்களைதான் டீமன் ஸ்லேயர் என கூறுகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே பெரும்பாலும் டீமன்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் முசான் என்கிற டீமன் தான் இதில் முக்கிய வில்லனாக இருக்கிறது. முசான் அழிக்கப்பட்டுவிட்டால் அனைத்து டீமன்களும் அழிந்துவிடும் என்பதுதான் நிலைமையாக இருக்கிறது.
இந்த நிலையில் டீமன் ஸ்லேயர்கள் எப்படி முசானை அழிக்கப்போகிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் இறுதியாக வந்த டீமன் ஸ்லேயர் இன்ஃபினிட்டி கேஸ்டில் முசானோடு நடக்கும் சண்டையை அடிப்படையாக கொண்டு வந்தது.
பொதுவாகவே ஜப்பானியர்களுக்கு அமெரிக்கர்களை அவ்வளவாக பிடிப்பதில்லை. ஜப்பானில் இரண்டு பகுதிகளான ஹீரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா இரண்டாம் உலக போரின்போது அணுகுண்டு போட்டது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் டீமன் ஸ்லேயரில் வரும் முசான் கதாபாத்திரம் அப்படியே அமெரிக்க பாடகர் மைக்கேல் ஜாக்சனை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.









