Movie Reviews
முதல் பாகத்தை விட பிரமாதமா இருக்கா? டிமாண்டி காலணி 2 ஓ.டி.டி விமர்சனம்.!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக டிமான்டி காலனி இருந்தது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியையும் கொடுத்தது படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரியா பவானி சங்கரும் அருள்நிதியும் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தில் அருள்நிதி டிமாண்டி காலனி பங்களாக்குள் சென்று அங்கு அவரின் நகையை எடுத்து வந்ததால் நடக்கும் பிரச்சனைகள் கதையாக இருக்கும். இரண்டாம் பாகத்தில் அந்த அருள் நிதியின் சகோதரர் ஆன இன்னொரு அருள்நிதி இருக்கிறார்.
கதையில் மாற்றம்:
அவரை வைத்து கதை செல்கிறது. இந்த படத்தில் இன்னமும் நிறைய விஷயங்களை சேர்த்து கதையை மேலும் மெருகேற்றி இருக்கின்றனர். ஆறு வருடத்திற்கு ஒருமுறை டிமாண்டி காலனிக்குள் சென்று நகையை யாராவது எடுக்கின்றனர். பிறகு டிமாண்டி அவர்களை கொல்கிறார். இது திரும்ப திரும்ப நடக்கிறது.
இதில் ஏதாவது ஒரு வருடம் ஒரு உயிர் கூட சாகாமல் காப்பாற்றிவிட்டால் அப்போது இது நின்றுவிடும். ஆனால் அதே சமயம் கதையின் ஓட்டத்தில் அதிக தொய்வுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது டிமான்டி காலனி முதல் பாகத்திலேயே நாம் நிறைய விஷயங்களை பார்த்து விட்டோம் என்பதால் அதிலிருந்து மாற்றாக புதிய விஷயங்களை இதில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
கதையில் தொய்வு:
ஆனால் படத்தின் நேரம் அதிகமாக இருப்பதனால் நேரத்தை ஓட்டுவதற்காக நிறைய காட்சிகள் பொறுமையாக செல்கின்றன. முக்கியமாக படம் ஆரம்பித்து 40 நிமிடத்திற்கு பெரிதாக கதை போகாமல் இருக்கிறது 40 நிமிடம் கழித்து படத்தின் பெயர் வந்த பிறகு தான் கதை ஓரளவு நகர்கிறது.
ஆனால் கதை அம்சம் என்று பார்க்கும் பொழுது ஒரு பேய் கதையாக மிக சிறப்பான ஒரு கதையை உருவாக்கி இருக்கின்றனர். முழுக்க முழுக்க டிமாண்டி காலனி படத்தில் இருந்து மாறுபட்ட ஒரு கதையாக இது இருக்கிறது.
இந்த படத்தின் அடுத்த பாகம் வருவதற்கும் இதில் கண்டின்யுவிட்டி கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மொத்த படத்திலும் அருள் நிதியை விட முக்கிய கதாபாத்திரமாக ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இருக்கிறது. எனவே ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது.
