Connect with us

தனுஷ்க்கு போட்ட மாதிரியே பாட்டு வேணும். தேவாவிடம் அடம் பிடித்த சத்யராஜ்!..

sathyaraj dhanush

Cinema History

தனுஷ்க்கு போட்ட மாதிரியே பாட்டு வேணும். தேவாவிடம் அடம் பிடித்த சத்யராஜ்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு இணையான ரசிக கூட்டத்தை கொண்டிருந்தவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் வரவேற்பை பெற்றன. அதில் மிஸ்டர் பாரத், குங்கும பொட்டு கவுண்டர், லூட்டி போன்ற படங்கள் எல்லாம் மிகவும் பிரபலமானவை.

தேவாவிற்கும் சத்யராஜுற்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. சத்யராஜின் பல படங்களுக்கு தேவா இசையமைத்து கொடுத்துள்ளார். பொதுவாக தேவா இசையமைக்கும்போது சத்யராஜ்க்கு ஏற்ற மாதிரியே இசையமைப்பார். இதை பார்த்த சத்யராஜ் ஒருமுறை தேவாவிடம் பேசும்போது எனக்கு தகுந்தாற் போல பாடல் எழுத வேண்டாம் அஜித் விஜய்க்கு எழுதுவது போல எனக்கு எழுதுங்கள் என கூறினார் சத்யராஜ்.

இந்த சமயத்தில்தான் தனுஷ் நடித்த திருடா திருடி படத்திற்கு இசையமைத்து வந்தார் தேவா. அதில் வரும் மன்மதராசா பாடல் சத்யராஜ்க்கு மிகவும் பிடித்துவிட்டது. எனவே எனக்கும் அந்த மாதிரி ஒரு பாடல் வேண்டும் என கேட்டுள்ளார் சத்யராஜ்.

நானும் அந்த மாதிரி ஆடுவேன் சார் எனக்கும் ஒரு பாட்டு போட்டு கொடுங்கள் என சத்யராஜ் கேட்கவே தேவா அடிதடி என்ற படத்திற்கு உம்மா உம்மம்மா என்ற பாடலை இசையமைத்து கொடுத்தார்.

சத்யராஜும் தனுஷிற்கு இணையாக அந்த பாடலில் நடனமாடியிருந்தார்.

To Top