Connect with us

என்னது ஜாலியா இருக்கலாமா!.. வேலையை விட்டுட்டு வந்த தேவாவை கடுப்பேத்திய மணிவண்ணன்!..

deva manivannan

News

என்னது ஜாலியா இருக்கலாமா!.. வேலையை விட்டுட்டு வந்த தேவாவை கடுப்பேத்திய மணிவண்ணன்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் படங்களை அதிகமாக இயக்கியவர் இயக்குனர் மணிவண்ணன். அவர் இயக்கிய அமைதிப்படை போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படுகின்றன.

முக்கியமாக சத்தியராஜை நடிகராக வைத்து பல படங்களை இயக்கியுள்ளார் மணிவண்ணன். மணிவண்ணனுக்கும் இசையமைப்பாளர் தேவாவுக்கும் இடையே அப்போது நல்ல உறவு இருந்து வந்தது. தேவா இசையமைத்த பல பாடல்களில் மணிவண்ணன் பாடல் பாடியிருப்பதை பார்க்க முடியும்.

மணிவண்ணன் குறித்து தேவா ஒரு பேட்டியில் கூறும்போது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். ஒருமுறை மணிவண்ணனின் படத்திற்கு தேவா இசையமைத்து கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்தார் மணிவண்ணன்.

அவர் தேவாவிற்கு போன் செய்து பொள்ளாச்சி வாங்க தேவா இங்கு இசையமைச்சிக்கலாம் என்றார். உடனே தேவாவும் அவரது குழுவை அழைத்து சென்றார். அங்கு சென்றதும்தான் தெரிந்தது மணிவண்ணன் இன்னும் பட வேலைகளையே முடிக்கவில்லை என்று.

ஏன் சார் வேலையே முடிக்காமல் கூப்பிட்டிங்க என தேவா கேட்டுள்ளார். வாங்க தேவா ஜாலியா ஊரை சுத்தி பாப்போம். சும்மாதான் கூப்பிட்டேன் என ரிலாக்ஸாக கூறியுள்ளார் மணிவண்ணன். அப்படியொரு ஜாலியான இயக்குனர் அவர் என கூறியுள்ளார் தேவா.

To Top