Tamil Cinema News
இந்த வாட்டியாச்சும் வாய்ப்பு கிடைக்குமா?.. ரஜினியின் வார்த்தைக்காக காத்திருக்கும் தனுஷ்..!
என்னதான் ரஜினிகாந்தின் மருமகனாக இருந்தாலும் இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷுக்கு சினிமாவிற்கு வந்த காலங்களில் இருந்தே ரஜினியுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே பெரிய ஆசையாக இருந்தது.
ஆனால் ரஜினியிடம் அதை பலமுறை கூறியும் கூட ரஜினி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காலா திரைப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்தார்.
அப்பொழுது அந்த திரைப்படத்தில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வேண்டும் என்று தனுஷ் கேட்டிருந்தார். ஆனால் அப்பொழுதும் ரஜினி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அதனால் தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது இந்த திரைப்படத்தில் எப்படியாவது நடிகர் ரஜினியிடம் வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறாராம் தனுஷ்.
ஏற்கனவே நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்திருப்பதால் ரஜினி இதற்கு ஒப்புக்கொள்வாரா என்பதும் ஒரு பக்கம் சந்தேகமாகதான் இருக்கிறது.
