Connect with us

மக்கள் என்னை ஏத்துக்காட்டியும் அதை செய்வேன்!.. ஆரம்பத்திலேயே தனுஷ் எடுத்த சபதம்!..

dhanush

Cinema History

மக்கள் என்னை ஏத்துக்காட்டியும் அதை செய்வேன்!.. ஆரம்பத்திலேயே தனுஷ் எடுத்த சபதம்!..

Social Media Bar

Actor Dhanush: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சாதாரண கதைக்களங்களை தேர்ந்தெடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே அவர் தேர்ந்தெடுத்து வந்துள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் தனுஷின் நிலை இப்படியில்லை. உண்மையை சொல்ல போனால் அப்போது யாரும் தனுஷை கதாநாயகனாகவே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதே சமயத்தில் அப்போது பெரும் நடிகராக இருந்து வந்தார் சிம்பு.

ஆனால் அதன் பிறகு தனுஷ் சிம்புவிற்கு போட்டி நடிகராக வருவார் என்பதை சிம்புவே சிந்தித்திருக்க மாட்டார் என கூறலாம். காதல் கொண்டேன் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி அடைந்தாலும் கூட தனுஷ் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்.

ஏனெனில் ஒரு கதாநாயகனுக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படும் நல்ல உடல் வாகுவும் வசீகரமான முகமும் அவருக்கு இல்லை. இருந்தாலும் சிறு வயதிலேயே அந்த அனைத்து விமர்சனங்களையும் தாங்கினார் தனுஷ்.

தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நடிக்கும்போது உதவி இயக்குனரிடம் ஒரு சபதம் எடுத்துள்ளார் தனுஷ். எப்படியும் ஒரு நாள் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவேன். முதலில் மக்கள் என்னை கேலி செய்வார்கள். பிறகு நான் சண்டையிடுவதை ஏற்றுக்கொள்வார்கள்.

அதன் பிறகு இயக்குனராகி ஒரு படத்தை இயக்குவேன். பிறகு நானே சில படங்களை தயாரிக்கவும் செய்வேன் என கூறியிருக்கிறார் தனுஷ். அவர் அப்போது கூறிய அனைத்து விஷயங்களையும் பிறகு செய்துவிட்டார் என்பது முக்கியமான விஷயமாகும்.

To Top