News
தயாரிப்பாளர் பிரச்சனையால் அது நடந்துச்சு… தனுஷ் ரஜினி கூட்டணியில் மொரட்டு காம்போ?..
தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தொடர்ந்து தனுஷின் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருவதால் அதற்கான சம்பளம் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதேபோல ஒவ்வொரு முறையும் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். தனுஷை பொருத்தவரை எப்பொழுதுமே ஒரே மாதிரி கதைக்களத்தில் நடிக்க மாட்டார். வித்தியாசமான மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பதை பார்க்க முடியும்.
இதற்கு முன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அப்படிதான் மாறுபட்ட கதைகளை கொண்ட படமாக இருந்தது. அதேபோல ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக அவ்வப்போது சண்டைக்காட்சிகள் கொண்ட திரைப்படங்களிலும் தனுஷ் நடிப்பது உண்டு.
தனுஷின் திட்டம்:
அப்படியாக அவர் நடிக்கும் இருவகையான திரைப்படங்களுக்குமே வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. அதனை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு தனுஷ் முடிவு எடுத்திருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கலாம் என்று தனுஷ் நினைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் நிறைய தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிவிட்டு அவர்களுக்கு படம் நடித்து கொடுக்கவில்லை என்கிற பிரச்சனை இருந்து வந்தது.
இதனை அடுத்து அவர்களுக்கு படம் நடித்து கொடுத்து முடிக்கும் வரையில் வேறு படங்களில் தனுஷ் கமிட்டாக கூடாது என்று பேச்சு வார்த்தையை நடத்தப்பட்டது. அதனால் இப்பொழுது அவர் நினைத்தாலும் கூட ரஜினி படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
