Tamil Cinema News
விக்னேஷ் சிவனை மறந்துட்டு வாயை விட்டுட்டிங்களே மேடம்.. அந்த விஷயத்தில் வசமாக சிக்கிய நயன்தாரா..!
Actress Nayanthara had recently posted a post criticizing actor Dhanush for not agreeing to include scenes from Naam Rowdythan in a Netflix documentary.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரியில் வைப்பதற்கு தனுஷ் ஒப்புக்கொள்ளாததால் நடிகர் தனுஷை மிகவும் மோசமாக விமர்சித்து நடிகை நயன்தாரா சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன தனுஷ்க்கு ஆதரவாக அதிகமாக விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அதில் தனுஷ் ரசிகர்கள் கூறும் பொழுது படத்திற்கு மொத்தமாக பணம் போட்டு படத்தை எடுத்த தயாரிப்பாளர் தனுஷ்தான் என்னும் பொழுது அந்த படத்தை கொடுப்பதும் கொடுக்காததும் அவரது தனிப்பட்ட விருப்பம் தான்.
தனுஷ் நயன் பிரச்சனை:
அவர் கொடுக்கவில்லை என்றால் அந்த படம் குறித்த காட்சிகளை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அவரது அனுமதி இல்லாமல் இவர்கள் ஏன் காட்சிகளை வைக்க வேண்டும் என்று கூறி தனுஷ்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷை தரகுறைவாக பேசும் வகையிலான நிறைய வரிகள் அந்த அறிக்கையில் இடம் பெற்று இருந்தன. அது அதிக கண்டனத்திற்கு உரியதாக இருந்தது. முக்கியமாக நடிகர் தனுஷ் அவரது தந்தை கஸ்தூரிராஜா மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் ஆகியோரின் உதவியால்தான் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
ஆனால் நயன்தாரா இந்த மாதிரியான எந்த உதவிகளும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தார் என்று நயன்தாராவே குறிப்பிட்டு அந்த அறிக்கையில் இந்த விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாரிசு நடிகர் சர்ச்சை:
வாரிசு நடிகர்களாக நிறைய பேர் தமிழ் சினிமாவிற்கு வருகின்றனர் ஆனால் எல்லோருமே பெரிய இடத்தைப் பிடித்து வளர்ந்து விடுவது கிடையாது தனுஷ் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது எக்கச்சக்கமான கேளிக்கு உள்ளானார்.
அப்படியும் கூட தொடர்ந்து போராடி தான் இப்பொழுது தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார். அதனை கொச்சைப்படுத்தும் வகையில் நயன்தாரா பேசுவது சரியல்ல என்கின்றனர் தனுஷ் ரசிகர்கள். மேலும் சிலர் கூறும்பொழுது விக்னேஷ் சிவனையே முதலில் பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாது.
அவரே நயன்தாராவின் காதலர் என்கிற அடையாளத்தை பயன்படுத்திதான் சினிமாவில் வளர்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும்போது தனுஷை எந்த விதத்தில் நயன்தாரா குறை கூற முடியும் என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.