Tamil Cinema News
தனுஷுடன் இணையும் சாய்பல்லவி..! அடுத்த படம் குறித்து வந்த அப்டேட்..!
நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷின் தனிப்பட்ட நடிப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கவே செய்கிறது. பொதுவாக ஒருவர் கமர்ஷியல் நடிகராகிவிட்டார் என்றால் தொடர்ந்து சண்டை படங்களில்தான் நடித்து வருவார்.
ஆனால் தனுஷை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அப்படி அவர் நடித்த திருச்சிற்றம்பலம், அசுரன் மாதிரியான படங்கள் எல்லாம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களாக இருந்தன.
இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் தற்சமயம் இட்லிக்கடை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராயன் திரைப்படம் போலவே இந்த திரைப்படத்தையும் தனுஷே இயக்கி நடிக்கிறார்.
இதற்கு பிறகு லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் அருள்நிதிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்தனர். அந்த படத்திலேயே அவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.
எனவே இந்த திரைப்படமும் அவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
