அமரன் படத்தில் அதை செய்த தனுஷ்… வேண்டுமென்றே பழிவாங்கும் என்னமா?..

Actor Dhanush and Sivakarthikeyan have been at loggerheads for a long time. Due to this, both of them are separated. Recently, Dhanush rejected actor Sivakarthikeyan and spoke about some things

தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது அமரன் திரைப்படம். அமரன் திரைப்படத்தை பொறுத்தவரை இந்திய ராணுவம் குறித்து மிக விரிவாக இந்த திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அதிக வரவேற்பை பெற்ற படமாக லக்கி பாஸ்கர் என்கிற திரைப்படம் இருந்து வருகிறது.

வாழ்த்திய தனுஷ்:

இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இந்த நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பாராட்டி பேசி இருந்தார். ஆனால் அவர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

lucky baskar
lucky baskar
Social Media Bar

சிவகார்த்திகேயனுக்கும் தனுஷ்க்கும் இருக்கும் சண்டைதான் இதற்கு காரணமா? என்று கேள்விகள் இருந்தன. இது குறித்து ஒரு பக்கம் பேசும் பொழுது லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லுரிதான் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

சிவகார்த்திகேயனை நிராகரிக்க காரணம்:

அதனால்தான் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார் தனுஷ் என்று கூறுகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படத்தை அமரன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்க இருக்கிறார்.

amaran
amaran

அப்படி இருக்கும் பொழுது அவருக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கலாமே என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு நடுவே நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு இடத்தில் பேசும் பொழுது தனுஷ் எழுதிய ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் என்கிற பாடல் வரிகள் தான் என்னை முன்னேற்றி இருக்கிறது.

எப்போதும் நான் அந்த பாடல் வரிகளைக் கேட்டு வந்துள்ளேன் என்று தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனை இறங்கி வந்தாலும் கூட தனுஷ் விடாப்படியாக இருக்கிறாரே என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.