Tamil Cinema News
ஒன்றினையும் தனுஷ், சிவகார்த்திகேயன்.. சேர்ந்து நடிக்க இருக்கும் படம்.!
நானும் ரவுடிதான் திரைப்படம் தனுஷருக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்தியது அப்படியாக அவர் இழந்த ஒரு விஷயம் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தனுஷ்க்கும் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் வேலை பார்த்ததிலிருந்தே பழக்கம் இருந்து வந்தது. சொல்ல போனால் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ் தான்.
தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பல இயக்குனர்களிடம் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பேசி இருந்தார் தனுஷ்.
ஆனால் அதற்குப் பிறகு எதிர்நீச்சல் மாதிரியான நிறைய திரைப்படங்களில் தனுஷும் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ஆடுவதை பார்க்க முடியும். இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை தனுஷ் தயாரித்த பொழுது சம்பள விஷயத்தில் சிவகார்த்திகேயன் இடையே முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தனுஷ் எஸ்.கே நட்பு:
அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு வெகு காலங்களாக அவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் அவரது திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்திற்கு வந்திருந்தார்.
அந்த திருமணத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருமே வந்திருந்தனர். இந்த நிலையில் தனுஷ் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தியை சந்தித்து அவர்களிடம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
இதன் இதற்கு முன்பு சிவகார்த்திகேயனும் ஒரு பேட்டியில் பேசும்பொழுது டேமேஜ் ஆன பீசு நானு ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன் என்று எனக்கு அப்போதே வசனம் எழுதியவர் தனுஷ். அதற்காக தனுஷ்க்கு நன்றி கூற வேண்டும் என்று பேசி இருந்தார்.
எனவே இவர்கள் இருவரும் திரும்பவும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒன்றிணையும் பட்சத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து படம் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
