Latest News
ஹேக் செய்யப்பட்ட தனுஷ் மற்றும் லைக்கா அக்கவுண்ட் – 100 கோடி போச்சப்பு
தமிழ் திரையுலகில் முக்கியமான நட்சத்திரமும், பிரபலமுமாக இருப்பவர் நடிகர் தனுஷ்.
நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தனுஷ் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் திரை உலகிற்கு வந்து 20 வருடம் நிறைவடைந்தது. இது ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்ட் ஆகி வந்தது.
சினிமா துறையில் நடிகர் தனுஷ்க்கு வருவாய் வருவது போலவே, யு ட்யூப் வழியாகவும் அவருக்கு வருவாய் வருகிறது. அவரின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் ஸ்டுடியோஸ் பெயரில் யூ ட்யூப் சேனல் ஒன்றை தனுஷ் நடத்தி வந்தார். அதில் அவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்களின் பாடல்கள், ட்ரெய்லர்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்.
தனுஷ் நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ரவுடி பேபி பாடல் யு ட்யூப்பில் 100 கோடிக்கும் அதிகமான வீவ்களை பெற்று சாதனை புரிந்தது. தமிழ் பாடல்களில் 100 கோடி வீவ்களை பெற்ற முதல் பாடல் ரவுடி பேபி ஆகும்.
இந்த நிலையில் இன்று யாரோ நடிகர் தனுஷின் யு ட்யூப் அக்கவுண்டை ஹேக் செய்துள்ளனர். மேலும் யு ட்யூப்பில் பிரபலமாக இருந்த ரவுடி பேபி பாடலை அவர்கள் டெலிட் செய்துள்ளனர். அந்த சேனல் மூலம் வரும் வருவாயை விடவும் அந்த வீடியோ மதிப்பு மிக்கதாகும். ஏனெனில் தமிழில் முதன் முதலில் 100 கோடி வீவ் போன பாடல் என்ற பெருமை அதற்கு இருந்தது. இப்போது அந்த வீடியோவை புதிதாக பதிவிட்டாலும் கூட வீவ்கள் முதலில் இருந்தே கணக்கிடப்படும்.
இதே போல பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் யு ட்யூப் சேனலும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே தற்சமயம் இந்த இரண்டு சேனல்களுமே யு ட்யூப்பில் காணவில்லை. மேலும் அவை அப்லோட் செய்த வீடியோக்களும் யூ-ட்யூப்பில் இல்லை.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்