க்ரீன் மேட் போட்டு ஏமாத்திட்டிங்களே பியர் க்ரில்ஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டிஸ்கவரி சேனல் என கூறினாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் பேர் க்ரில்ஸ். ஏனெனில் பியர் க்ரில்ஸ் நடித்து வெளிவந்த மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியானது 90ஸ் கிட்ஸ்களிடையே பிரபலமானதாகும்.


உலக அளவில் பியர் க்ரில்ஸின் இந்த நிகழ்ச்சி பிரபலம் என்பதால் அமெரிக்க பிரபலங்களில் துவங்கி இந்திய நடிகர்களான அஜய் தேவ்கன், ரஜினி, இந்திய பிரதமர் மோடி என பலரும் இந்த நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் உடன் பங்கேற்று உள்ளனர்.


தற்சமயம் பியர் க்ரில்ஸ் முழுக்க முழுக்க க்ரீன் மேட்டில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு நாள் பியர் க்ரில்ஸ் நிஜமாகவே காட்டிற்கு சென்றுதான் வீடியோ போட்டார் என பலரும் நினைத்திருந்த நிலையில் அவர் கிராபிக் செய்துவிட்டார் என கூறி அந்த புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.


ஆனால் உண்மையில் பியர் க்ரில்ஸ் நடிக்கும் பியர் க்ரில்ஸ் யங் அட்வெஞ்சரர் என்கிற திரைப்படத்தின் தயாரிப்பு காட்சிகளே அந்த புகைப்படமாகும். முழுக்க முழுக்க அனிமேஷன் திரைப்படமாக எடுக்கப்படும் இந்த படம் 2 வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது.

Refresh