Connect with us

அர்ச்சனா மக்களை ஏமாத்துறா!.. வன்மத்தை கொட்டிய தினேஷின் தந்தை!

archana dinesh

Bigg Boss Tamil

அர்ச்சனா மக்களை ஏமாத்துறா!.. வன்மத்தை கொட்டிய தினேஷின் தந்தை!

Social Media Bar

Biggboss Archana :  பிக்பாஸில் இடையில் வைல்ட் கார்டு மூலமாக வீட்டிற்குள் வந்தவர்களில் தினேஷ் மற்றும் அர்ச்சனா இவர்கள் இருவர்தான் நீடித்து வரும் போட்டியாளர்களாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும் பிக்பாஸின் ஆரம்ப போட்டியாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

எனவே அவர்கள் புதிதாக வந்தவர்களை ஒதுக்கி வைத்தனர். அதில் மாயா மற்றும் அவரது புல்லி கேங்கான பூர்ணிமா, ஐஸ்வர்யா, ஜோவிகா மூலமாக அதிகமாக மன வருத்தத்திற்கு உள்ளானார் அர்ச்சனா. அந்த ஒரு வாரத்தில் வெகு ஜென மக்களுக்கு அர்ச்சனா மீது இரக்கம் வந்தது. அதுவே அர்ச்சனாவிற்கு பெருமளவில் ஆதரவாளர்கள் வர காரணமானது.

சொல்லப்போனால் அர்ச்சனா இவ்வளவு நாள் பிக்பாஸில் நிலைத்து நிற்பதற்கு மாயா மற்றும் அவரது குழுவினர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மறு வாரம் முதல் அர்ச்சனா இவர்களை எதிர்த்து நிற்பதற்கு பெரிதாக தயாரானார்.

அதற்கு பிறகு யார் வந்து சண்டை போட்டாலும் அவர்களை கடுப்பாகிவிட்டு அர்ச்சனா அமைதியாக போய் அமர்ந்துவிடுவார். இந்த நிலையில் இதுக்குறித்து தினேஷின் அப்பா ஒரு பேட்டியில் கூறும்போது அர்ச்சனா ஒரு சிறப்பான வழிமுறையை பின்பற்றுகிறார்.

அவர் செய்யும் அனைத்து விஷயங்களுமே நடிப்புதான். நிஜத்தில் அவர் வேறு மாதிரி இருக்கிறார். ஆனால் பிக்பாஸ் பார்க்கும் மக்களை ஏமாற்றும் விதமாக அவர் அதில் நடிக்கிறார் என இதுக்குறித்து கூறியுள்ளார் தினேஷின் தந்தை.

To Top