Tamil Cinema News
ஏண்டா உனக்கு இவ்வளவு கொடூர புத்தி.. அந்த பொண்ணு பாவம் இல்லையா?.. பாலாவை மூஞ்சுக்கு முன்னால் கேட்ட இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர்.
இயக்குனர் பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் இதுவரை தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.
முக்கியமாக மக்களின் வேதனை மற்றும் கவலைகளை அவர் காட்டும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். நான் கடவுள், பரதேசி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அப்படியான முறையை தான் அவர் கையாண்டிருப்பார்.
பாலா இயக்கிய திரைப்படங்களில் கொஞ்சம் காமெடியான திரைப்படம் என்றால் அவன் இவன் திரைப்படத்தை கூறலாம். இந்த நிலையில் அவர் சேது திரைப்படம் இயக்கிய பொழுது அவரது குருவான பாலு மகேந்திரா அவரிடம் பேசிய விஷயங்களை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
பாலு மகேந்திரா சேது திரைப்படம் குறித்து என்னிடம் பேசிய போது ஏண்டா உனக்கு எவ்வளவு கொடூரமான ஒரு மனநிலை. ஒரு ஐயர் வீட்டு இன்னசென்டான பெண்ணை ரவுடியை காதலிப்பது போல காட்சிகளை வைத்தாய். அதற்குப் பிறகு அந்த ரவுடி செய்த செயல்களால் மனநிலை பாதிக்கப்படுகிறார்.
அப்பொழுதாவது அந்த பெண்ணை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்திருக்கலாம் ஆனால் அந்த பெண் இறந்து போய் அதனால் அந்த நபர் மீண்டும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே செல்வதாக கதை எடுத்துள்ளாய்.
நீ உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்தை நீயே இப்படி அழிப்பது சரியா? என பாலுமகேந்திரா கேட்டதாக பாலா பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.
