இது என்னயா புது பெயர்! – பொய்யான பெயரில் சினிமாவிற்குள் வந்த பாக்கியராஜ்!
தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் பாக்கியராஜும் ஒருவர். பாக்கிய ராஜ் படம் என்றாலே அப்போதெல்லாம் ஒரு கூட்டம் அதை பார்ப்பதற்காக செல்வார்கள்.

பாக்கியராஜ்க்கு பெயர் வைத்ததிலேயே சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. பாக்கியராஜ் வீட்டில் ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும்போதும் அவர்களுக்கு செல்வம், தனம், பாக்கியம் என்கிற வரிசையில் பெயர் வைக்க முடிவானது.
அதன்படி முதல் பிள்ளைக்கு செல்வராஜ், இரண்டாம் பிள்ளைக்கு தனராஜ், மூன்றாவது பிள்ளைக்கு பாக்கியராஜ் என பெயர் வைத்துள்ளனர். இப்படிதான் அவருக்கு பாக்கியராஜ் என்கிற பெயர் வந்துள்ளது. சினிமாவில் எப்போதும் அவர்களது நிஜ பெயரை வைத்துக்கொள்ள மாட்டார்கள். நடிகர் சூர்யா, ரஜினி என பலரின் நிஜ பெயர் வேறு.
அதனால் சினிமாவிற்கு வந்தபோது பாக்கியராஜ் தனது பெயரை கோவை ராஜா என மாற்றி வைத்துக்கொண்டார். இதனால் திரை துறையில் பலரும் அவரது பெயர் கோவை ராஜா என்றே நினைத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாக்கியராஜ் 16 வயதினிலே திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். அப்போது படத்தில் பெயரை போடுவதற்காக அனைவரின் பெயரையும் எழுத சொன்னார்கள். அப்போதுதான் பாக்கியராஜ் ஒரு விஷயத்தை யோசித்தார். பாக்கியராஜ் எனும் பெயர்தானே நமது அடையாளம் அதை இழக்க கூடாது என முடிவு செய்தார்.
எனவே பெயரை கொடுக்கும்போது பாக்கியராஜ் என்றே கொடுத்துள்ளார். அதன் பிறகு பெயர் வரிசையை பார்த்த பாரதி ராஜா அதிர்ச்சியாகி யாருய்யா அது பாக்கியராஜ், புது பெயரா இருக்கு என கூற அப்போதுதான் பாக்கியராஜ் தனது நிஜ பெயரை வெளிப்படுத்தியுள்ளார்.