Connect with us

போட்டுகொடுத்து வாழ்க்கையை கெடுக்குறது இதுதான்.. தவறான பேச்சை கேட்டு உதவி இயக்குனரை விரட்டிய பாக்கியராஜ்!..

bhagyaraj livingston

News

போட்டுகொடுத்து வாழ்க்கையை கெடுக்குறது இதுதான்.. தவறான பேச்சை கேட்டு உதவி இயக்குனரை விரட்டிய பாக்கியராஜ்!..

Social Media Bar

Bhagyaraj: பாக்கியராஜ் தமிழில் செல்வாக்கு மிக்க இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பாக்கியராஜ், சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்தில் துவங்கி பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டுதான். சொல்ல போனால் அப்போதிருந்த லோகேஷ் கனகராஜ் என பாக்கியராஜை கூறலாம். இதனால் பலரும் அவரிடம் உதவி இயக்குனராவதற்கு முயற்சி செய்து வந்தனர்.

பாக்கியராஜும் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்து வந்தார். அப்படியாக பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு தனியாக இயக்குனர் ஆனவர்கள்தான் பாண்டியராஜனும், பாக்கியராஜும்.

அதே போல நடிகர் லிவிங்ஸ்டனும் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். முந்தானை முடிச்சி திரைப்படத்தில் இவர் பாக்கியராஜிடம் பணிப்புரிந்து கொண்டிருந்தப்போது சில உதவி இயக்குனர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டனர்.

இந்த நிலையில் இதற்கு லிவிங்ஸ்டன்தான் காரணம் என சிலர் பாக்கியராஜிடம் கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய பாக்கியராஜ் லிவிங்க்ஸ்டனை தனது படத்தில் இருந்து நீக்கியுள்ளார். அதன் பிறகு வெளியே வந்த லிவிங்ஸ்டன் திரைக்கதை எழுதுவதில் பிரபலமானார். பிறகு ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை பகிர்ந்திருந்தார் லிவிங்ஸ்டன்.

To Top