Cinema History
என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.
லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார். அப்படி அவர் பா.ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து உருவான திரைப்படம்தான் கபாலி. கபாலி படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார். அந்த சமயத்தில்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் வளர்ந்து வந்துக்கொண்டிருந்தார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் ரஜினிகாந்த்.
அப்படியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படம்தான் பேட்ட. பேட்ட திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் பெரும் ரசிகர் ஆவார். அதனாலேயே அவர் ரஜினிக்கு சிறப்பான கதையை எழுதியிருந்தார்.
இதுக்குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதையை எழுதும் போதே அதில் பாபி சிம்ஹா நடித்த சேது கதாபாத்திரத்தை ரஜினிகாந்தை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதினேன். ஆனால் அது எனது முதல் படம் என்பதால் ரஜினிகாந்திடம் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.
அந்த படத்தில் மட்டும் ரஜினிகாந்த் நடித்திருந்தால் படம் தாறு மாறாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.