Connect with us

இதனால்தான் நான் குழந்தையே வேண்டாம்னு நினைச்சேன்!.. உண்மையை கூறிய தேவயானி கணவர்..

devayani

Cinema History

இதனால்தான் நான் குழந்தையே வேண்டாம்னு நினைச்சேன்!.. உண்மையை கூறிய தேவயானி கணவர்..

Social Media Bar

பொதுவாக திருமணம் செய்து கொண்டார்கள் என்றாலே அடுத்த விஷயம் அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றிதான் பேச்சு இருக்கும். ஆனால் அதிலிருந்து வித்தியாசப்பட்டவராக இயக்குனர் ராஜகுமாரன் இருந்திருக்கிறார்.

இயக்குனர் ராஜகுமாரன் தன்னுடைய திரைப்படத்தில் கதாநாயகியாக தேவயானி நடிக்க வைக்கும் போது அவர் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கும்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தேவயானி நடித்தார். கதாநாயகனாக சரத்குமாரும் விக்ரமும் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தில் விக்ரமும் சரத்குமாரும் கடுப்பாகும் அளவிற்கு ராஜகுமாரன் தேவயானியை காதலித்து வந்தார்.

இயக்குனருக்கு இருந்த பயம்:

அந்த படபிடிப்பு முடிந்த பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் கண்டிஷனாக இருந்திருக்கிறார் ராஜகுமாரன்.

ஏன் என்று கேட்கும் பொழுது அவருடைய முகம் அவ்வளவு அழகாக இல்லை என்று தொடர்ந்து அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை பழித்து பேசியிருக்கின்றனர். கிண்டல் செய்தும் இருக்கின்றனர்.

எனவே தனக்கு அடுத்து பிறக்கும் குழந்தையும் அப்படி இருந்து விட்டால் அதுவும் நம்மை போல அனைவரிடமும் கேளிக்கு உள்ளாகுமே என்று நினைத்த ராஜகுமாரன் தனக்கு குழந்தையே வேண்டாம் என்று இருந்திருக்கிறார.

ஆனால் தேவயானி அதற்கு உடன்படவில்லை. கண்டிப்பாக குழந்தை வேண்டுமென்று அவர் கூறவே அதன் பிறகு இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார் ராஜகுமாரன்.

இருந்தாலும் கூட அவரை அனைவரும் கேலி செய்த காரணத்தினால் இப்படி குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பயப்படும் ஒரு நபராக மாறி இருந்திருக்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

To Top