Connect with us

ஷங்கருக்கு ரெட் கார்டு போட்ட லைக்கா.. சிக்கலில் நிற்கும் திரைப்படம்.. இதுதான் காரணமாம்.!

Tamil Cinema News

ஷங்கருக்கு ரெட் கார்டு போட்ட லைக்கா.. சிக்கலில் நிற்கும் திரைப்படம்.. இதுதான் காரணமாம்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருக்கிறார். ஷங்கர் இயக்கிய அவரது முதல் திரைப்படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் துவங்கி சமூகம் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் பேசுவதை முக்கிய வேலையாக கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அதேபோல இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களின் பட்ஜெட் என்பது அதிகமாக இருக்கும். எனவே தயாரிப்பாளர்கள் ஷங்கரை வைத்து படம் எடுப்பதை பெரிய ரிஸ்க்காக பார்ப்பதும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் கூட போட்ட காசை கூட இந்த படம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான வேலைகள் சென்று கொண்டுள்ளன. இதற்கு நடுவே இயக்குனர் ஷங்கர் அவர் இயக்கிய தெலுங்கு திரைப்படத்தை வெளியிடுவதில் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

ஆனால் லைக்கா நிறுவனம் இதுகுறித்து பிரச்சனை செய்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது இந்தியன் 3 திரைப்படத்திற்கு 30 கோடி ரூபாய் இயக்குனர் ஷங்கர் சம்பளமாக கேட்டிருந்தார். இன்னமும் 80 கோடி ரூபாய்க்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படம் எவ்வளவு வெற்றியை கொடுக்கும் என்பதே லைக்கா நிறுவனத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவே இயக்குனர் ஷங்கர் சம்பளம் வாங்காமல் இந்த திரைப்படத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்தனர்.

ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவே கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையரங்குகள் கிடைக்காத வண்ணம் செய்ய உள்ளனர் லைகா நிறுவனத்தினர் என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

Bigg Boss Update

To Top