Tamil Cinema News
உங்க காசா இருந்தா இப்படி பண்ணுவீங்களா..? வாயை விட்டு சிக்கிய இயக்குனர் ஷங்கர்.!
தென்னிந்தியாவில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் என பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடும் அளவில்தான் இருக்கின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர்.
அவர் இயக்கிய ஜெண்டில்மேன் திரைப்படத்தில் துவங்கி இப்போது வெளிவந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரை எல்லாமே அதிக பட்ஜெட் திரைப்படங்கள்தான்.
பெரும்பாலும் இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்துவிடும். மிக அரிதாகதான் அவரது திரைப்படங்கள் தோல்வி படமாக அமையும். ஆனால் சமீப காலமாக அவரது திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெறாமல் இருந்து வருகின்றன.
ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து இவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது.
இதனால் பலரும் இயக்குனர் ஷங்கர் குறித்து அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதுக்குறித்து இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அதில் அவர் கூறும்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தை கட் செய்வதற்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.
மொத்தமாக 5 மணி நேர காட்சிகள் எடுத்து வைத்திருந்தோம். அதில் 2 மணி நேரம் 15 நிமிட காட்சிகளை படத்திற்கு கட் செய்தோம் என கூறியுள்ளார் ஷங்கர்.
கிட்டத்தட்ட 2 படங்களுக்கான நேரத்திற்கு ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் ஷங்கர். அவர் காசாக இருந்தால் இப்படி செய்வாரா? அவர் தயாரிக்கும் படங்கள் மட்டும் குறைந்த பட்ஜெட் படங்களாக இருக்கின்றன என கேள்வி எழுப்பு வருகின்றனர்.