சர்ச்சையை கிளப்பதான்  வேணும்னே அப்படி பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஹாட்ஸ்பாட் இயக்குனர்!..

கடந்த ஒரு வாரமாக சர்ச்சையை கிளப்பி வந்த ஒரு திரைப்படமாக ஹாட்ஸ்பாட் திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் அதிகமான பிரபலங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் ட்ரைலர் வந்த காலக்கட்டம் முதலே படம் குறித்து அதிக சர்ச்சை இருந்து வந்ததது. அதற்கு தகுந்தாற் போல இந்த படத்திற்கும் ஏ சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. இதில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கவுரி ஜி கிசான், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 29 இந்த திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனரிடம் கேட்கப்பட்டபோது எதற்காக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்ரைலரை உருவாக்குனீர்கள் என கேட்டனர்.

Social Media Bar

சர்ச்சையை கிளப்பிய ட்ரைலர்:

அதற்கு விக்னேஷ் கார்த்திக் பதிலளிக்கும்போது உண்மையில் பத்திரிக்கைகள் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். படத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை பேசியுள்ளோம்.

ஆனால் அவற்றை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் எந்த பெரிய நடிகரும் எங்கள் படஙக்ளில் நடிக்கவில்லை. பொதுவாக இந்த மாதிரி பெரிய ஹீரோக்கள் இல்லாத திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்றால் திங்கள் கிழமைக்குள் அந்த திரைப்படத்திற்கு கூட்டம் வர வேண்டும்.

இல்லை என்றால் படம் தோல்வியை கண்டுவிடும். எனவேதான் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒரு ட்ரைலரை தயார் செய்து விட்டேன். இதனால் படம் வெளியாகி மூன்று நாளைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை திரையரங்குகள் குறையாமல் படம் ஓடிக்கொண்டுள்ளது என்கிறார் இயக்குனர்.