திஷா பதானி பொதுவெளியில் செய்த அநாகரிக செயல்.. கடுப்பான ரசிகர்கள்
நடிகர் சூர்யா நடித்து வெளியான கங்குவா திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியாகி தோல்வியை கண்ட படமாக அமைந்தது.
இந்த படத்தின் தோல்விக்கு படம் வெளியாவதற்கு முன்பே வந்த விமர்சனம்தான் காரணம் என்று திரை துறையில் பேச்சுக்கள் இருந்தாலும் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கிறது.
ஏனெனில் அதே சமயத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இன்னமும் நிறைய திரையரங்குகளில் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு அந்த படத்தில் நடித்த நடிகை திஷா பதானியும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அவருக்கு கங்குவா திரைப்படத்தில் மொத்தமாக இருந்த காட்சிகளே குறைவுதான் என்றாலும் கூட அவர் அதை கூட ஒழுங்காக நடிக்கவில்லை என பேச்சுக்கள் இருக்கின்றன.
மேலும் கங்குவா திரைப்படம் வருவதற்கு முன்புதான் பாலிவுட் வட்டாரத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அதில் ஆடியபடியே நடந்து வரும் திஷா பதானி காரை திறக்க முடியாமல் திறந்து அதில் அமர்வதை பார்க்க முடியும்.
அவர் அப்பொழுது அவர் மது அருந்தி இருந்தார் என்று கூறி அந்த வீடியோ வைரல் ஆனது. இதுவுமே இந்த திரைப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.