Box Office
இரண்டு வாரத்தில் டிராகன் நடத்திய வசூல் வேட்டை.!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். பொதுவாக கல்லூரி காலங்களை காட்டும் திரைப்படம் என்றாலே அதில் மிகவும் ஜாலியாக மாஸ் காட்டி கொண்டு சுற்றும் கதாநாயகன் என்கிற பாணியில்தான் கதை இருக்கும்.
ஆனால் கல்லூரி காலங்களுக்கு பிறகு அவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரிதாக எந்த படங்களிலும் இருக்காது. இந்த நிலையில் அதிலிருந்து மாறுபட்ட படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இருந்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கினார். படத்தின் கதைப்படி பள்ளியில் நல்லப்படியாக படித்து வரும் பிரதீப் ரங்கநாதன் பள்ளி காதலியின் பேச்சால் தடம் மாறுகிறார். அதற்கு பிறகு கல்லூரியில் 48 அரியர்கள் வைத்து டிகிரியே வாங்காமல் வெளியே வருகிறார்.
இந்த நிலையில் இனி எப்படி அவர் வாழ்க்கையில் சாதிக்க போகிறார் என்பதாகதான் கதை அமைந்திருந்தது. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த படம் நல்ல வசூலை கொடுத்து வருகிறது.
வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் இதுவரை மொத்தமாக 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது டிராகன் திரைப்படம். இதன் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
