இயக்குனர் டிம் பர்டன் ஹாலிவுட்டில் மாயாஜாலம் மற்றும் திகில் படங்கள் இயக்குவதில் மிக பிரபலமானவர். அவரது இயக்கத்தில் பைரேட் ஆஃப் தி கரேபியன் படத்தின் நாயகனான ஜானி டப் நடித்த படங்கள் நிறைய உண்டு.
பொதுவாகவே ஜானி டெப்பிற்கு வித்தியாசமான கதை அமைப்புகள் மீது அதிக ஈடுபாடு உண்டு. அப்படியாக அவர் நடித்த எட்வர்ட் சிசெர்ஹேண்ட் Edward Scissorhands என்கிற திரைப்படத்தின் கதையைதான் இப்போது பார்க்க போகிறோம்.
ஒரு சிறு கிராமத்தில் பாலடைந்த பங்களா ஒன்று இருக்கிறது. அங்கு நடந்த விஷயமாக எட்வர்ட்டின் கதை அமைகிறது. அங்கு இருந்த விஞ்ஞானி ஒருவர் மனிதன் போலவே இருக்கும் ரோபோட்டை உருவாக்குகிறார். அதற்கு எட்வர்ட் என்று பெயரிடுகிறார். அதை கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் போலவே மாற்றி வருகிறார்.
அனைத்து பாகங்களும் மனிதனாக மாற்றப்பட்ட பின்னர் இரண்டு கைகளை மட்டும் எந்திர கைகளில் இருந்து மனித கைகளாக மாற்ற வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழக்கிறார் விஞ்ஞானி.
இந்த நிலையில் எட்வர்ட்டுக்கு 10 விரல்களுக்கு பதிலாக கையில் 10 கத்தரிக்கோல்கள்தான் இருக்கின்றன. இதனால் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பழைய பங்களாவிலேயே இருந்து வருகிறார் எட்வர்ட். இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைக்கிறது.
அது எட்வர்டுக்கு சாதகமா அமையுமா அல்லது பாதகமா அமையுமா? என்பதை விளக்கும் வகையில் கதை அமைந்துள்ளது.