TV Shows
ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்.. சமந்தா நடித்த பேமிலி மேன் சீரிஸ்.. அடுத்த பாகம் அப்டேட்..!
இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஓடிடியின் வளர்ச்சி என்பதும் அதிகரித்தது. ஆரம்பத்தில் ஓடிடிக்கு எல்லாம் யாரு காசு செலவு செய்து படம் பார்க்கப் போகிறார்கள் என்று பலரும் நினைத்தார்கள்.
ஆனால் இப்பொழுது ஓடிடி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது மேலும் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.
அப்படியாக சமீபத்தில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சீரிஸாக பேமிலி மேன் என்னும் தொடர் இருந்தது. ஏற்கனவே இரண்டு சீசன் வந்த பேமிலி மேன் தொடர் ஹிந்தி மற்றும் தமிழ் என்று பல மொழிகளில் நல்ல வெற்றியை பெற்றது.
சாதாரண வாழ்க்கையில் ஒரு சாதாரண குடும்ப தலைவனாக இருக்கும் கதாநாயகன் உளவாளியாக அரசாங்கத்திற்கு செய்யும் விஷயங்களை வைத்து இந்த சீரிஸின் கதை செல்லும்.
இதன் இரண்டாம் பாகத்தில் சமந்தா இலங்கை தமிழராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது சமந்தாவிற்கும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்த நிலையில் ஃபேமிலி பேமிலி மேன் சீரிஸின் மூன்றாவது சீசன் சமீபத்தில் எடுக்கப்பட்டு வந்தது அந்த சீசனின் படப்பிடிப்புகள் முழுதாக முடிந்துவிட்டது என கூறப்படுகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் கண்டிப்பாக ஓ.டி.டியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.