காசை கொடுக்காத களவாணி விமல்? தயாரிப்பாளர் புகார்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் விமல் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vimal
Social Media Bar

தமிழில் களவாணி, வாகை சூட வா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். அதற்கு பின் பல்வேறு படங்களில் நடித்தாலும் அந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் பட வாய்ப்பு விமலுக்கு குறைந்தது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான விலங்கு வெப் சிரிஸில் போலீஸாக நடித்த விமல் மீண்டும் பேசப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

Vimal

இந்நிலையில் தனக்கு நடிகர் விமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சென்னை பெரவள்ளூரை சேர்ந்த கோபி என்பவர், விமல் அவர் நடித்த மன்னர் வகையறா படத்திற்காக தன்னிடம் ரூ.5 கோடி கடனாக வாங்கியதாக கூறியுள்ளார்.

அந்த கடனுக்கு பதிலாக படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறிய விமல் பின்னர் பங்கும் தரவில்லை, பணத்தையும் தரவில்லை என கோபி கூறியுள்ளார். தற்போது விமல் பல படங்களில் நடிக்க புக் ஆகி வருவதால் பணத்தை திருப்பி கேட்டதாகவும், அதற்கு விமல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ள அவர், விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.