Connect with us

அவ என் ஆளு.. அவக்கூட நீ எப்படி நெருக்கமா நடிக்கலாம்.. பயில்வான் ரங்கநாதனை படத்தில் இருந்து தூக்கிய கவுண்டமணி!..

gaundamani bailwan ranganathan

Cinema History

அவ என் ஆளு.. அவக்கூட நீ எப்படி நெருக்கமா நடிக்கலாம்.. பயில்வான் ரங்கநாதனை படத்தில் இருந்து தூக்கிய கவுண்டமணி!..

Social Media Bar

Gaundamani Pradeep ranganathan : கலர் சினிமாவின் காலகட்டம் துவங்கிய பிறகு அதில் முக்கியமான காமெடி நடிகர்களாக கால் பதித்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும்தான் கவுண்டமணியை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவில் சண்டையிடாத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம்.

அந்த அளவிற்கு பலரிடமும் பல விமர்சனங்களை முன்வைத்து சண்டையிட்டு இருக்கிறார் கவுண்டமணி. அவ்வளவு ஏன் செந்திலுடன் கூட சண்டையிட்டு சில நாட்கள் செந்திலும் கவுண்டமணியும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்த சம்பவங்களும் நடந்தது.

இந்த நிலையில் தனக்கு கவுண்டமணியுடன் நடந்த நிகழ்வு ஒன்றை பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆவாரம் பூ என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பயில்வான் ரங்கநாதனின் மனைவியாக ஷர்மிலி நடித்திருந்தார்.

அதில் அவரை கள்ளத்தனமாக பார்க்க வரும் கதாபாத்திரமாக கவுண்டமணி இருப்பார். அப்பொழுது கவுண்டமணிக்கான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு அவர் வீட்டுக்கு சென்ற பிறகுதான் ரங்கநாதனுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டது.

அந்த காட்சி எடுக்கப்படும் பொழுது ஷர்மிலியை அவர் கட்டிப்பிடித்து தூக்குவது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. பிறகு படத்தின் டப்பிங் நடக்கும் போது அந்த காட்சியை பார்த்த கவுண்டமணிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.

ஏனெனில் கவுண்டமணியும் ஷர்மிலியும் உண்மையில் கள்ள தொடர்பில் இருந்தனர் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த கோபத்தின் காரணமாக அடுத்து சத்யா ஃபிலிம்ஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனத்தில் பயில்வான் ரங்கநாதன் ஷர்மிலிக்கு கணவனாக நடிக்க இருந்தபோது அந்த படத்தில் கவுண்டமணி குறுக்கிட்டு அதில் பயில்வான் ரங்கநாதனை நடிக்கவிடாமல் செய்தார் .மேலும் ஒருமுறை நேரடியாகவே அவர் இது குறித்து பயில்வான் ரங்கநாதனிடம் கடிந்து கொண்டார் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

To Top