Tamil Cinema News
அதுக்காகதான் ENPT என் படம் இல்லன்னு சொன்னேன். வாயை திறந்த கௌதம் மேனன்.!
தமிழில் காதல் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கௌதம் மேனன்.கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கு என்று எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் குறித்து பேசியிருந்தார்.
அதில் பேசிய கௌதம் மேனன் கூறும்போது ஒரு கட்டத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை என கூறியிருந்தார். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.
நடிகர் தனுஷிற்கு ஏற்கனவே திரைப்படங்களை இயக்குவதில் முன் அனுபவம் உண்டு. பா பாண்டி மாதிரியான படங்களை அவர் இயக்கியிருக்கிறார். எனவே அவர்தான் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தயாரித்து இருப்பார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் அன்று சும்மா ஜாலிக்கு அப்படி சொன்னேன். மற்றப்படி நான் தயாரித்து நானே இயக்கிய திரைப்படம்தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் நான் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.
ஆனால் சும்மா விளையாட்டுக்கு சொன்ன விஷயத்தை இவ்வளவு விபரீதமாக்குவார்கள் என எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தார் கௌதம் மேனன்.