எம்.ஜி.ஆர், சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஜெமினி கணேசன் தட்டி தூக்கிய திரைப்படம்!.. அவ்வளவு போட்டியா…
தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலுமே நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக நடிகர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன தான் இந்த போட்டி என்கிற விஷயத்தை துவங்கி வைத்தனர் என்று கூறலாம்.
அதற்கு முன்பு தியாகராஜ பாகவதர் போன்ற நடிகர்கள் இருந்த கால கட்டங்களில் போட்டி என்பது பெரிதாக இல்லை. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தனித்தனியாக பெரும் ரசிகர் கூட்டம் உருவான பொழுது அவர்களது திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் போதெல்லாம் சண்டை நடக்க துவங்கியது.
இப்படியாக சினிமாவில் போட்டி என்பது ஆரம்பமானது. இதனால் நல்ல கதைகளை தேடி நடிப்பதை ஒவ்வொரு நடிகரும் தனது முக்கிய கடமையாக கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் மக்கள் விரும்பும் குடும்ப கதைகளுக்கு அதிக வரவேற்பு இருந்ததால் அந்த மாதிரியான திரைப்படங்களை அனைத்து நடிகர்களுமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அந்த வகையில் முதல் மனைவியை இழந்து வாடும் கணவன் தனது குழந்தைக்காக ஒரு தாயை தேடுவதாக ஒரு கதை அமைந்திருந்தது இந்த கதை சிவாஜி கணேசனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் அந்த கதை பிடித்திருந்தால் சிவாஜியிடம் இருந்து கைநழுவி அந்த கதை எம்ஜிஆரிடம் சென்றது.
ஆனால் எம்ஜிஆர் நடிப்பிலும் இரண்டு நாட்கள் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவே இல்லை பிறகு வெகு காலம் கழித்து பார்க்கும் பொழுது ஜெமினி கணேசன் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கற்பகம் என்னும் அந்த திரைப்படம் எம்ஜிஆர் சிவாஜி போட்டி போட்டது போலவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜெமினி கணேசனுக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.