அஜித்தோடு சிறுத்தை சிவா இணைந்து பண்றார்.. கங்குவா 2 குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது கங்குவா திரைப்படம்.
கங்குவா திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவான திரைப்படமாகும் ஆனால் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுத்து இருக்கிறதா என்பது இப்போதுவரை சந்தேகமாகதான் இருக்கிறது. பொதுவாகவே ஒரு திரைப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உருவாக்கினால் அந்த திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்சத்தில் ரசிகர்களுக்கு அதிர்ப்தியை எற்படுத்தி விடும்.
இந்த விஷயம்தான் கங்குவா திரைப்படத்திலும் நடந்து இருக்கிறது. இந்த நிலையில் எப்படியும் இந்த படம் தோல்வி படமாக அமையும் எனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்து கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மாட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன.

கங்குவா 2 அப்டேட்:
ஆனால் சமீபத்தில் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டியில் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுப்போம் என்று கூறியிருக்கிறார். உண்மையில் கங்குவா திரைப்படம் பெரும் தோல்வி படமாக எல்லாம் அமையவில்லை.
எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட முதல் நாளிலேயே 58 கோடி வெற்றி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது . சிறுத்தை சிவா அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார். சூர்யாவும் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
எனவே அவரும் அதை எல்லாம் முடித்து விட்ட பிறகு கங்குவா 2 திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கும் என்று கூறியிருக்கிறார் ஞானவேல் ராஜா.